வெளியிடப்பட்ட நேரம்: 19-Apr-2018 , 08:14 AM

கடைசி தொடர்பு: 19-Apr-2018 , 08:15 AM

வெண்ணிலா எனும் தேவதை பாகம்-4

images (13)

அன்று இரவு தேவியும், வெண்ணிலாவும் மாடியில் இருக்கும் அறையில் படுத்துக் கொள்வதாக சொல்லி அவர்கள் அம்மாமார்களிடம் பர்மிசன் வாங்கி செல்கின்றனர்.

விடிய விடிய கதை பேசியும் தீரவில்லை அவர்களுக்கு. மறுநாள் காலையில் பாட்டியின் தோப்புக்கு போய் அங்க பக்கத்தில் இருக்கும் ஆற்றில் குளித்து ஆட்டம் போடலாம் சாயந்தரம் வரை என ப்ளான் பண்ணிவிட்டு இருவரும் உறங்க மூன்று மணி ஆனது.

காலையில் வெண்ணிலாவின் அம்மா ஊருக்கு கிளம்புவதாக சொல்லிக்கொண்டு இருந்தார். இவர்கள் இருவரும் தோப்புக்கு போக வேண்டிய ஆசையில் வேகமாக எழுந்து கிளம்புகிறார்கள் இருவரும்...
தோப்பிற்கு போவது என்றாலே இவர்களுக்கு தனி சந்தோஷம் வந்துவிடும். தேவியின் தோழிகள் மூன்று பேர் கீதா, லாவண்யா, அபிநயா இவர்களுக்கு அபிநயாவுக்கு மட்டும் கீர்த்திகா என ஒரு தங்கை உண்டு. மற்ற இருவருக்கும் அண்ணன்கள் தான். வெண்ணிலா வந்தாலே தோப்பிற்கு போவது சினிமா போவது என்றால் இவர்கள் ஐவரும் ஒன்று சேர்ந்து தான் போவார்கள்.

அங்கே இருக்கும் மா மரத்தில் மாங்காய் பறிப்பது, புளியமரத்தில் ஊஞ்சல் கட்டி ஆடுவது, அருகில் ஓடும் ஆற்றில் போட்டி போட்டு நீச்சலடிப்பது வீட்டிலிருந்து கொண்டு போகும் புளிசாதம், எலுமிச்சைசாதம் என அளவே இல்லாமல் சாப்பிடுவதும் நேரம் போவதே தெரியாமல் ஆட்டம் போடுவது இவர்களுக்கு மட்டுமல்ல அத்தைக்கும், அவளுடைய அம்மாவுக்கும் தான் அவர்களும் இவர்களுடன் சேர்ந்து சிறு பிள்ளையாக மாறிவிடுவார்கள். தன்னுடைய அம்மா சாந்திக்கும் இவர்களுடன் தோப்பிற்குச் செல்ல ஆசை ஆனால் அன்று ஊருக்கு வருவதாக கணவனிடம் சொல்லியதால் இவர்களுடன் செல்லமுடியாமல் போயிற்று.

பாட்டி வீட்டில் இருந்து தோப்பிற்கு மூன்று கி.மீ தூரம். மாமா பைக்கில் சென்றுவிடுவார். இவர்கள் போவதற்கு காரில் செல்வார்கள் இல்லையென்றால் குறுக்கு பாதையில் பேசிக்கொண்டே நடந்து செல்வார்கள். அதிகநேரம் நடந்து தான் செல்வார்கள் வரும் போது காரை வரச்சொல்லி அதில் வந்துவிடுவார்கள்.

போகும் போதே தேவியுடைய தோழிகள் மூன்று பேரையும் அழைத்துச் செல்வதாக முடிவு பண்ணியாகி விட்டது. எப்பொழுதும் வெண்ணிலா ஊருக்கு வந்தால் இந்த ஐந்து பேரும் சேர்ந்துதான் ஆட்டம் போடுவதே. முதல் நாளே வெண்ணிலா வருகிறாள் என்று தெரியும் போதே வீட்டில் பர்மிசன் வாங்கிவிட்டனர் அனைவரும். வயசு பொண்ணுங்க ஒன்னு சேர்ந்தா அரட்டைக்கும் ஆட்டத்திற்கும் கேட்கவா வேண்டும்?. பேசிக்கொண்டே அனைவரும் தோப்பிற்கு வந்து சேர்ந்தனர். அந்த இடத்தையே ஒரே கலகலப்பாக ஆக்கிவிட்டனர்.

இடையிடையே இளநீர், பப்பாளி, மாங்காய் என இஷ்டத்திற்கு சாப்பிட்டு கொண்டு போன சாப்பாடையும் சாப்பிட்டுவிட்டு அந்தி சாயும் நேரம் வீட்டுக்கு கிளம்பினர். வீட்டில் வெண்ணிலாவிற்கு ஆச்சர்யம் காத்திருந்தது..

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும்..

https://kalakkaldreams.com/vennila-enum-thevathai-by-ananthi-part-3/

-ஆனந்தி

Related Articles