வெளியிடப்பட்ட நேரம்: 10-Aug-2017 , 03:29 PM

கடைசி தொடர்பு: 10-Aug-2017 , 03:29 PM

விஸ்வரூப செய்திகள் 10/8-2

viswarubam news

♈ 🇮🇳    2pm -10-8-2017-thursday*   🇮🇳 ♈🇮🇳  *vishwarubam news*

♈ 🇮🇳 விஸ்வரூபம் சார் வணக்கம், வீட்டுவசதி கடன் சங்க (சொசைடி) மோசடி பற்றி ஆதாரங்கள் வைத்துள்ளேன்,நேரடியாக எனக்கும் பாதிப்பு ஏற்பட்டது, இது சம்பந்தமாக உள்ள நிருபர் கேட்டால் தெரிவிக்க தயாராய் உள்ளேன்,ஏழை எளியோர் கட்டும் சிறு வீட்டைக் கூட கடன் என்ற பெயரில் மோசடி செய்யும் சொசைட்டி நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது யார்?

♈ 🇮🇳  காவலர் உடற்தகுதி தேர்வு முறைகேடு எதிரொலி-மதுரையில் பணியாற்றி வரும் அனைத்து அதிகாரிகளின் அதிரடி படையினர் அதிரடியாக களையெடுப்பு-புதிய காவலர்களை தேர்வு செய்வதில் விறுவிறுப்பு.-காவலர் உடற்தகுதி தேர்வில் முழுவதும் முறைகேடு நடந்தது உறுதி செய்ய பட்டுள்ளதால் முறைகேட்டில் ஈடுபட்டவர்களை கைது செய்ய காவல்துறை தீவிரம்.மேலும் மறுஉடற்தகுதி தேர்வை நடத்த தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு ஆணையம் முடிவு-please check

♈ 🇮🇳 இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கான இன்சூரன்ஸ் புதுப்பிக்க, மாசு கட்டுப்பாட்டு சான்றிதழ் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும் என இன்சூரன்ஸ் நிறுவனங்களுக்கு உச்ச நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது

♈ 🇮🇳 சமூக வலைதளங்களில் மிகப்பெரும்பான்மையான வாடிக்கையாளர்களைக் கொண்ட வாட்ஸ் ஆப்பில் பணப்பரிமாற்றம் செய்யும் வசதி அறிமுகப்படுத்தப் படவுள்ளது. 200 மில்லியன் மாதாந்திர வாடிக்கையாளர்களைக் கொண்ட வாட்ஸ் ஆப்பில் யூபிஐ எனப்படும் பணப்பரிமாற்ற வசதி அறிமுகப்படுத்தப் படவுள்ளது. இந்த வசதி வாட்ஸ் ஆப்பின் அடுத்த அப்டேட்டான 2.17.295 முதல் கிடைக்கும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது

♈ 🇮🇳 சென்னை ரெயில் - பஸ் நிலையங்களிள் பலத்த பாதுகாப்பு!

♈ 🇮🇳 நடப்பாண்டு நீட் தேர்வு முடிவுகளை ரத்து செய்ய முடியாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது

♈ 🇮🇳 சிதம்பரம் அருகே டாஸ்மாக் ஊழியரிடம் ரூ3.53 லட்சம் கொள்ளை!

♈ 🇮🇳  இலங்கை வெளியுறவு அமைச்சர் ரவி கருணநாயகே ராஜினாமா

♈ 🇮🇳  கொடைக்கானல்: பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 20 பேர் காயம்

♈ 🇮🇳  பழனிசாமி எந்த தீர்மானம் போட்டாலும் செல்லாது: வெற்றிவேல்

♈ 🇮🇳  மானாமதுரை அருகே கார்மோதி ஒருவர் பலி: 5 பேர் காயம்

♈ 🇮  மும்பையை சேர்ந்த, 'ஐ.என்.எக்ஸ்., மீடியா' என்ற நிறுவனம், அன்னிய முதலீடு பெற, அன்னிய முதலீட்டு வளர்ச்சி வாரியத்தின் ஒப்புதல் வாங்கித்தர,தன் செல்வாக்கை பயன்படுத்தியதாக, முன்னாள் நிதி அமைச்சர் சிதம்பரத்தின் மகன் கார்த்தி மீது, குற்றம் சாட்டப்பட்டது. விசாரணைக்கு ஆஜராகும்படி,கார்த்திக்கு, சி.பி.ஐ., தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டது. கார்த்தியை தேடப்படும் நபராக அறிவித்து, மத்திய உள்துறை அமைச்சகம், 'லுக் அவுட்' சுற்றறிக்கை பிறப்பித்தது. இதை ரத்து செய்யக் கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், கார்த்தி மனுத்தாக்கல் செய்தார்.இந்நிலையில், இந்த விவகாரத்தில் கார்த்தி சிதம்பரம் மற்றொரு மனுவை தாக்கல் செய்துள்ளார். அதில், தனக்கு எதிரான வழக்குகளை சட்ட ரீதியாக எதிர்கொண்டு வரும் வேரத்தில், லுக் அவுட் நோட்டீஸ் சட்டவிரோதமானது எனக்கூறியுள்ளார்

♈ 🇮🇳  முரசொலி பவள விழா முடிந்ததும், நாளை மறுநாள் (ஆகஸ்ட் 12) திமுக செயல் தலைவர் ஸ்டாலின் மனைவியுடன் லண்டன் செல்ல உள்ளார். பின்னர்20ம் தேதி அவர் சென்னை திரும்புகிறார்

♈ 🇮🇳  இலவச சமையல் காஸ் மானியம், வருமான வரி தாக்கல், வங்கி கணக்கு,ரேஷன் கார்டு உள்ளிட்ட விவகாரங்களுக்கு ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்று மத்திய அரசு தெரிவித்து வருகின்றது. இறப்பு சான்றிதழ் பெறவும் ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்படும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், வாகன பதிவிற்கு அதன் உரிமையாளர்களின் ஆதார் எண்ணை இணைக்க வேண்டியது கட்டாயமாக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு தெலுங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது

♈ 🇮🇳  மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு 7063 கனஅடியில் இருந்து7105 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 40.76அடியாகவும்,  நீர்இருப்பு 12.48 டிஎம்சி.,யாகவும் உள்ளது. அணையில் இருந்து விநாடிக்கு 7000 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது-விஸ்வரூபம்

♈ 🇮🇳  அரியலூர்: அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே ஆர்.எஸ்.மாத்தூர் சாலையில் நன்னீயூர் ஓடை மீது தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தரைப்பாலம் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது. இதில் பாலத்தில் சென்ற அரசு பஸ் அந்தரத்தில் தொங்கியது. பஸ்சில் இருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக மீட்கப்பட்டனர்

♈ 🇮  இன்ஜி., கவுன்சிலிங்கில், 117.50 முதல், 109.50 வரை, 'கட் - ஆப்'மதிப்பெண் பெற்றவர்களுக்கு, நேற்று கவுன்சிலிங் நடந்தது. இன்று, 108 முதல், 97.25 வரை பெற்றவர்களுக்கு, இன்று கவுன்சிலிங் நடக்கிறது

♈ 🇮  மதுரை :சொக்கிகுளத்தில் உள்ள தனியார் வணிக வளாகம் விதிமீறி கட்டப்பட்டதாக தொடரப்படட்ட வழக்கில் வணிக வளாக கட்டடத்தின் அசல் வரைபடத்தை சமர்ப்பிக்க உரிமையாளருக்கு உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது. ஸ்டாலின் என்பவர் தொடர்ந்த வழக்கின் விசாரணையை நீதிமன்றம் நாளை ஒத்திவைத்துள்ளது

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

Related Articles