வெளியிடப்பட்ட நேரம்: 21-Aug-2017 , 04:59 PM

கடைசி தொடர்பு: 21-Aug-2017 , 05:00 PM

விஸ்வரூப செய்திகள் 21/8-1

viswarubam news

♈ 🇮🇳    4.30pm -21-8-2017-monday*  🇮🇳 ♈🇮🇳  *vishwarubam news*

சென்னை துறைமுகத்தில்  மர்மமான முறையில்   துறைமுக  ஊழியர்  ஷீதர்   இறப்பு  உடலை  வாங்க  மறுத்து   சென்னை  துறைமுக மருத்துவமனையில்  உறவினர்கள்  முற்றுகையிட்டு வருகின்றனர்
தொடர்புக்கு:  பாஸ்கர் 9444221992..please check

♈ 🇮🇳  பரபரப்பான அரசியல் சூழலுக்கிடையே ஆளுநர் வித்தியாசாகர்ராவ் சென்னை வந்தார். மும்பையில் நிகழ்ச்சிகள் அனைத்தையும் ரத்து செய்துவிட்டு ஆளுநர்  சென்னை வந்துள்ளார்

♈ 🇮🇳  ஓபிஎஸ்-ஈபிஎஸ் இணைந்து ஜெ. சமாதியில் அஞ்சலி

♈ 🇮🇳  ஓ.பன்னீர் செல்வம் மற்றும் மாஃபா பாண்டியராஜனை புதிய அமைச்சர்களாக பதவியேற்க ஆளுநர் அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 5 மணிக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். ஓபிஎஸ் நிதித்துறை மற்றும் வீட்டுவசதித்துறையை கவனிக்கவுள்ளதாகவும், பாண்டியராஜன் தமிழ் வளர்ச்சி மற்றும் கலாச்சாரத்துறையை கவனிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

♈ 🇮🇳  அதிமுகவில் இருந்து சசிகலாவை நீக்க வேண்டிய அவசியம் என்ன?: சி.ஆர் சரஸ்வதி கேள்வி

♈ 🇮🇳  ஆட்சி நீடிக்காது: கனிமொழி பேட்டி

♈ 🇮🇳  டில்லி கட்டளைக்கு ஏற்ப ஓ.பி.எஸ்., இ.பி.எஸ்., நடிப்பு: ஸ்டாலின்

♈ 🇮🇳  சென்னை : அதிமுக இரு அணிகள் இணைப்பிற்கு பிறகு அமைச்சரவையில் மாற்றம் இருக்கும் என எதிர்பார்க்கப்படும் வேளையில், தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் கவர்னர் மாளிகை சென்றுள்ளார். கவர்னரை சந்திக்க அவர் நேரம் கேட்டுள்ளதாக கூறப்படுகிறது

♈ 🇮🇳  ஓபிஎஸ் - இபிஎஸ் அணிகள் இணைந்த பிறகு சசிகலாவை கட்சியில் இருந்து நீக்குவதாக அறிவித்தால், அதனை சட்டரீதியாக எப்படி எதிர்கொள்வது என்பது தொடர்பாக வழக்கறிஞர்களுடன் தினகரன் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். சென்னை,அடையாற்றில் உள்ள இல்லத்தில் ஆதரவாளர்கள் மற்றும் வழக்கறிஞர்களுடன் தினகரன் ஆலோசனை நடத்தி வருகிறார்

♈ 🇮🇳  அ.தி.மு.க.,வின் இரு அணிகளும் இணைவதில் கடைசி நேரத்தில் இழுபறி ஏற்பட்டுள்ளதால், ஆர்.எஸ்.எஸ்.,சிந்தனையாளரும், ஆடிட்டருமான குருமூர்த்தியுடன் இரண்டு தரப்பினரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
சசிகலாவை பொதுச் செயலாளர் பதவியில் இருந்து நீக்கிய அறிவிப்பை வெளியிட்ட பிறகே, அ.தி.மு.க.,வின் தலைமை அலுவலகத்திற்கு வர முடியும் என ஓ.பன்னீர்செல்வம் அணியினர் பிடிவாதம் பிடித்து வருகின்றனர். எனவே, ஆடிட்டர் குருமூர்த்தியுடன் பழனிசாமி தரப்பில் அமைச்சர்கள் தங்கமணி, வேலுமணியும்,ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் மாபா.பாண்டியராஜன், மைத்ரேயன்,செம்மலை ஆகியோரும் ஆலோசனை நடத்தி வருகின்றனர். பரபரப்பான சூழல் நிலவுகிறது

♈ 🇮🇳  வெப்ப சலனம் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் சில இடங்களில் இடியுடன் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தவரை அதிகபட்சமாக வால்பாறை மற்றும் சின்னகல்லாறில் ஓரிரு இடங்களில் தலா 4 செ.மீ., மழை பதிவாகி உள்ளது

♈ 🇮🇳  அதிமுக இரு அணிகள் இணைப்பு இன்று நடைபெறுவதை அடுத்து லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரையின் டில்லி பயணம் திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. அவர் முதல்வர் பழனிசாமி தலைமையில் நடக்கும் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்பதற்காக அதிமுக தலைமை அலுவலகம் வர உள்ளார்

♈ 🇮🇳  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், முதல் முறையாக இன்று (ஆக.,21) லடாக் எல்லைக்கு செல்ல உள்ளார். அங்கு எல்லையில் பாதுகாப்பு பணியில் இருக்கும் வீரர்களை சந்தித்து, அவர்களுடன் பேச உள்ளார். எல்லையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் ஜனாதிபதி லடாக் செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது. லடாக்கில் ஜனாதிபதியை ராணுவ தளபதி பிபின் ராவத் வரவேற்க உள்ளார்

♈ 🇮🇳  எல்லையில் சீன ராணுவம் போர் ஒத்திகை;இந்திய படைகள் வலிமையை கொண்டு உள்ளது - ராஜ்நாத் சிங்

♈ 🇮🇳  கேரளாவில் பருவ மழை29 சதவீதம் பற்றாக்குறையாக பெய்து உள்ளது: முதல்வர் பினராயி விஜயன் தகவல்

♈ 🇮🇳  சசிகலாவை சந்திக்க வந்த பார்வையாளர்களையும் விசாரிக்க டிஐஜி ரூபா பரிந்துரை

♈🇮🇳   *vishwarubam*  ♈

Related Articles