வெளியிடப்பட்ட நேரம்: 25-Jul-2017 , 07:39 AM

கடைசி தொடர்பு: 25-Jul-2017 , 07:40 AM

விஸ்வரூப செய்திகள் 25/7-1

viswarubam news

♈ 🇮🇳    7am -25-7-2017-tuesday*   🇮🇳 ♈🇮🇳  *vishwarubam news*

♈ 🇮🇳  தமிழகத்தில் முதன் முறையாக நெல்லை மாவட்டத்தில் அன்பு சுவர் என்ற புதிய திட்டம் தொடக்கப்பட்டுள்ளது. நமக்கு தேவையற்ற பொருட்களை தேவையானவர்களுக்கு வழங்கும் விதமாக, இத்திட்டத்தை அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி துவக்கி வைத்தார்

♈ 🇮🇳  கோவை: பட்டா வழங்காததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 13 பேர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் கோவை ஆட்சியர் அலுவலகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

♈ 🇮🇳  கன்னியாகுமரி மற்றும் நெல்லை மாவட்டத்தில் உள்ள ரயில்வே வழித்தடங்கள் மதுரை மண்டலத்தில் இணைப்பதற்க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் கேரள அரசியல்வாதிகளுக்கு குமரி மாவட்ட ரயில் பயணிகள் சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது---vishwarubam news

♈ 🇮🇳  சென்னையில் இருந்து மலேசியாவுக்கு புதிய விமான சேவையை தனியார் ஏர் விமான நிறுவனம் தொடங்கியுள்ளது. இந்த விமானத்தில் சென்னையில் இருந்து மலேசிய தலைநகர் கோலாலம்பூர் செல்வதற்கு நபர் ஒருவருக்கு உணவுடன் சேர்த்து, 11 ஆயிரத்து 400 ரூபாய் மட்டுமே என்றும், அங்கிருந்து மீண்டும் சென்னை வர உணவுடன் சேர்த்து மொத்தம் 16 ஆயிரம் ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. என்றும், மேலும் தற்போது நாள் தோறும் காலை 8.55 மணிக்கு ஒரு விமானம் மட்டுமே இயக்கப்படுவதாகவும், ஆகஸ்ட் 26ஆம் தேதி முதல் நாளொன்றுக்கு 3 விமானங்கள் இயக்கப்படும் என்றும் அந்நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

♈ 🇮🇳  சேலம் மாவட்டம் மேட்டூரில், 210 மெகாவாட் மின்உற்பத்தி செய்யும் 3 அலகுகளும், 600 மெகாவாட் உற்பத்தி செய்யும் ஒரு அலகும் உள்ளது. இங்கு நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் என 100க்கும் மேற்பட்டோர் பணியாற்றி வருகின்றனர். நேற்று காலை, மேட்டூர் ஆண்டிக்கரையை சேர்ந்த ஜெகநாதன் என்ற ஒப்பந்த தொழிலாளி வெல்டிங் பணியில் ஈடுபட்டிருந்தபோது ஆக்சிஜன் சிலிண்டர் காலியானதால், மாற்று சிலிண்டரை எடுத்து வரும் பணியை மேற்கொண்டார். அப்போது திடீரென சிலிண்டர் தரையில் விழுந்து வெடித்து சிதறியது. இதில் சிலிண்டரின் பாகங்கள் சீறி பாய்ந்ததில் ஜெகநாதனின் கை துண்டானது. மேலும், அங்கிருந்த ஆனந்தன் என்ற தொழிலாளியின் காது செயல் இழந்தது. பயங்கர வெடிச்சத்தம் கேட்டு ஓடி வந்த மற்ற தொழிலாளர்கள்,கை துண்டான நிலையில் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ஜெகநாதனையும்,ஆனந்தனையும் மீட்டு மேட்டூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர், மேல்சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு ஜெகநாதன் அனுப்பி வைக்கப்பட்டார்---vishwarubam news

♈ 🇮🇳  சென்னை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு தினமும் 250 முதல் 300 லாரிகள் மூலம் காய்கறிகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. வரத்து குறைவு காரணமாக, காய்கறிகள் விலை உயர்ந்து இருக்கிறது. குறிப்பாக முருங்கைக்காய், பீட்ரூட், கத்தரிக்காய், கேரட், சாம்பார் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் விலை கிலோவுக்கு ரூ.15 வரை உயர்ந்திருக்கின்றன. தக்காளி விலை ரூ.20 வரை குறைந்திருக்கிறது---vishwarubam news

♈ 🇮🇳  தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் கீழ், 3,500வழக்குகள் நிலுவையில் உள்ளதாக சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறினார்.ராஜ்ய சபாவில் நேற்று நடைபெற்ற கூட்டத்தில், என்ஜிடியில் உள்ள நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு  எழுத்து பூர்வமாக பதில் அளித்த, சுற்றுச்சூழல் துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் கூறுகையில், “டெல்லி என்ஜிடி முதன்மை பெஞ்சில் 1600 வழக்குகளும், பூனேவில் 543ம், போபாலில்256ம், சென்னையில் 799ம், கொல்கட்டாவில்407 வழக்குகளும் நிலுவையில் உள்ளன. இந்த எண்ணிக்கை  நடப்பு ஆண்டு ஜூன்30ம் தேதி வரையில் கணக்கிடப்பட்டுள்ளது” என்றார்---vishwarubam news

♈ 🇮🇳  சென்னை அபிராமபுரத்தை சேர்ந்த ராஜி மகள் அபர்ணா(18). சைதாப்பேட்டையில் உள்ள பல் மருத்துவமனை ஒன்றில் வேலை செய்து வருகிறார். நேற்று மாலை வீட்டில் அபர்ணாவுக்கும் அவரின் சகோதரிக்கும் வாக்குவாதம் ,கைகலப்பு ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த அபர்ணா அடையாற்றில் குதித்து தற்கொலை செய்துகொள்ள முயன்றுள்ளார். இதை பார்த்த அப்பகுதி மக்கள் அபர்னாவை மீட்டு தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதித்தனர். அங்கு அபர்ணாவுக்கு முதலுதவி அளிக்கப்பட்டது

♈ 🇮🇳  ஆலந்தூர் : பல்லாவரத்தை சேர்ந்தவர் வேல்முருகன் (34). இவர், பல்லாவரம் ரேடியல் சாலையில் ஷேர் ஆட்டோ ஓட்டி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சவாரியை முடித்துவிட்டு மடிப்பாக்கம் கீழ்கட்டளை ஏரி வழியாக வந்து கொண்டிருந்தார். அப்போது, பைக்கில் எதிரே வந்த 2 பேர் ஷேர் ஆட்டோவை நிறுத்தியுள்ளனர். சவாரி வரவேண்டுமா என கேட்கும் முன், கத்தியை எடுத்து மிரட்டி வேல்முருகன் வைத்திருந்த ரூ.6 ஆயிரம்,ஒரு செல்போனை பறித்துச் சென்று விட்டனர்---vishwarubam news

♈ 🇮🇳 நாட்டின் 14வது ஜனாதிபதியாக இன்று பதவியேற்கிறார் ராம்நாத் கோவிந்த்

♈ 🇮🇳 கொடுங்கையூர் தீ விபத்து: பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு

♈ 🇮🇳 கோவை: காரில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ தங்கம் பறிமுதல்

♈ 🇮🇳 பிலிப்பைன்ஸில் கனிமங்கள் ஏற்றுமதிக்கு தடை

♈ 🇮🇳 குஜராத் கனமழையால் 8,000 பேர் பாதுகாப்பான இடத்தில் தஞ்சம்---vishwarubam news

♈ 🇮 ஜம்மு - காஷ்மீரில், பிரிவினைவாத தலைவன், சையது அலி ஷா கிலானியின் மருமகன், அல்டாப் அகமது ஷா உட்பட, ஏழு பேரை, என்.ஐ.ஏ.,எனப்படும், தேசிய புலனாய்வு அமைப்பு, கைது செய்துள்ளது.இதனை கண்டித்து இன்று காஷ்மீரில் பந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

♈ 🇮  ''பாஸ்போர்ட் பெறுவதற்கு, பிறப்பு சான்றிதழ் கட்டாயமில்லை; ஆதார்,பான் கார்டு போன்ற ஆவணங்களின் அடிப்படையில் விண்ணப்பிக்கலாம்,''என, வெளியுறவுத் துறை இணையமைச்சர், வி.கே.சிங் தெரிவித்தார்

♈ 🇮🇳  திருமலையில், வார இறுதி நாட்களில், 'திவ்ய தரிசன டோக்கன்கள்'வழங்குவதை, தேவஸ்தானம் மீண்டும் துவக்கி உள்ளது---vishwarubam news

♈ 🇮  பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.67.05காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.57.94 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது

♈   நாட்டையே உலுக்கிய, நிதாரி கொலை வழக்கின் முக்கிய குற்றவாளிகள்,மொனிந்தர் சிங் பந்தர், 59, சுரேந்திர கோலி, 46, ஆகியோருக்கு, இதுதொடர்பான ஒரு வழக்கில், மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் நொய்டா

♈ 🇮🇳   லோக்சபாவில், பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறியதாவது:
எண்ணெய் வினியோக நிறுவனமான, இந்துஸ்தான் பெட்ரோலியத்தில், அரசுக்கு சொந்தமான, 51 சதவீத பங்குகளையும், அந்நிறுவனத்தை கட்டுப்படுத்தும் உரிமையையும், ஓ.என்.ஜி.சி., நிறுவனத்துக்கு விற்க திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்கு, பொருளாதார விவகாரங்களுக்கான கேபினட் குழு, கொள்கை அளவில் ஒப்புதல் அளித்துள்ளது.இவ்வாறு அவர் கூறினார்--- vishwarubam news

♈   கும்பகோணம்: குடந்தை அருகே காரை மடக்கி சோதனையிட்ட போலீசார்,பல லட்சம் மதிப்புள்ள 3 ஐம்பொன் சிலைகளைப் பறிமுதல் செய்தனர். அவற்றை கடத்திய 5 பேர் கைது செய்யப்பட்டனர்–விஸ்வரூபம்

♈ 🇮🇳  இந்திய தேசிய பணப்பரிமாற்ற வாரியத்தினால் வழங்கப்பட்டு வரும் பீம் செயலியை இதுவரை 16 மில்லியன் பேர் பதிவிறக்கம் செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

Related Articles