வெளியிடப்பட்ட நேரம்: 03-Aug-2017 , 08:11 AM

கடைசி தொடர்பு: 03-Aug-2017 , 08:12 AM

விஸ்வரூப செய்திகள் 3/8-1

viswarubam news

♈ 🇮🇳    7am -3-8-2017-tuesday*   🇮🇳 ♈🇮🇳  *vishwarubam news*

♈ 🇮🇳  மாநிலங்களவையில் மத்திய சுற்றுலாத் துறை மந்திரி மகேஷ் சர்மா வெளியிட்டு உள்ள எழுத்துப்பூர்வமான பதிலில், வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சுற்றுலாப் பயணிகள் வருகையில் தமிழகம் முதலிடம் பிடித்து உள்ளது என தெரிவித்துள்ளார். 2016-ம் ஆண்டில் மட்டும் தமிழகத்திற்கு சுமார் 47.22 லட்சம் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் வந்து உள்ளனர். இந்தியாவிற்கு சுற்றுலா வந்த மொத்த வெளிநாட்டு பயணிகள் எண்ணிக்கையில் 19.1 சதவிதம் வெளிநாட்டு பயணிகள் தமிழ் நாட்டில் சுற்றுலாவிற்கு வந்துள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது

♈ 🇮🇳  இந்தியாவில், தாய்ப்பால் அளிக்கப்படாததால், ஆண்டுதோறும், ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழப்பதாக, ஐ.நா., ஆய்வறிக்கையில் கூறப்பட்டு உள்ளது. குழந்தைகளுக்கு போதிய தாய்ப்பால் அளிக்காமையால், ஆண்டுதோறும், சீனா, இந்தியா, நைஜீரியா, மெக்சிகோ, இந்தோனேஷியா ஆகிய நாடுகளில், 2.36 லட்சம் குழந்தைகள் இறக்கின்றன. இதில், இந்தியாவைச் சேர்ந்த, ஒரு லட்சம் குழந்தைகள் உயிரிழக்கின்றன. இந்தியாவில், தாய்ப்பால் புகட்டாமல் லட்சக்கணக்கான குழந்தைகள் உயிரிழப்பதால், இந்திய பொருளாதாரம் பெரியளவில் பொருள் இழப்பை சந்தித்து வருகிறது

♈ 🇮🇳  வடக்கு டில்லி மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது: போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதிகளில் உள்ள தெருக்களை தேர்ந்தெடுத்து, 'அபராத வாகன நிறுத்துமிடங்கள் ' அமைக்க, மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுபோன்ற பகுதிகளில், 200 அடி அகலமுள்ள சாலைகள், அபராத வாகன நிறுத்துமிடமாக அறிவிக்கப்படும். இந்த இடங்களில் வாகனம் நிறுத்துவோர் சாதாரண கட்டணத்தை விட, ஐந்து மடங்கு அதிக கட்டணம் செலுத்த வேண்டி இருக்கும்.இங்கு, ஒரு மணி நேரம் முதல் நாள் முழுவதும் வாகனங்களை நிறுத்தலாம். அதற்கு தகுந்தபடி அபராதம் செலுத்துவது போல்,கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். இரு சக்கர வாகனங்களுக்கு ரூ.50 - 500;ஆட்டோவுக்கு ரூ.300 -- 1,500; கார்களுக்கு ரூ.100 - 2,500; பஸ், வேன்களுக்கு ரூ.400 - 2,500 ரூபாய் அபராத கட்டணம் வசூலிக்கப்படும். இதற்காக, கமலா நகரில் ஆறு சாலைகள், மாடல் டவுன் - 2ல், நான்கு சாலைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார்

♈ 🇮🇳  ஜம்மு - காஷ்மீர் மாநிலம், ஜம்முவில், 10ம் வகுப்பு தேர்வு நடக்கிறது. தேர்வில், மூன்று மாணவர்களுக்கு பதில், வேறு மூன்று பேர் தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து, மூன்று பேரையும், போலீசார் கைது செய்தனர்

♈ 🇮🇳  வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், பான் கார்டு எண்ணுடன்,ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயம் என, மத்திய அரசு அறிவித்தது. சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரி அலுவலகத்தில், ஆதார் - பான் எண்களை இணைக்க, நேற்று, கவுன்டரில், கூட்டம் குவிந்தது. எனினும்,ஒரே நேரத்தில், பலரும் வருமான வரித்துறை இணையதளத்தில் நுழைந்ததால், 'சர்வர்' பல மணி நேரம் செயல் இழந்தது.இதனால், வெகு தொலைவில் இருந்து வந்தவர்கள், ஏமாற்றத்துடன் திரும்பினர்.ஆதார் - பான் இணைப்பதில்,பலருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதை கருத்தில் கொண்டு, சென்னை,வருமான வரி தலைமை அலுவல கத்தில், 'பயோ மெட்ரிக்' கருவி வைக்கப்பட்டுள்ளது.இணையதளத்தில், ஆதார் - பான் அட்டைகளை இணைப்பதில் சிக்கல் ஏற்பட்டால், 'பயோ மெட்ரிக்' கருவியை பயன்படுத்தலாம். இதில், கைவிரலை பதித்தால், அது, ஆதார் அட்டையின் போது, பதித்த ரேகையுடன் ஒப்பிட்டு, உடனே, இரு எண்களையும் இணைத்து விடுகிறது. அதனால், இங்கும் அதிக கூட்டம் குவிகிறது–விஸ்வரூபம்

♈ 🇮🇳  திருநெல்வேலி : கேரளாவில் இருந்து மருத்துவ கழிவுகளை கொட்டியவர்களை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். போலீசாரோ அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காமல் லாரியை விடுவித்தனர். திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே ஆண்டார்குளத்தில் தனியார் நிலத்தில் நேற்றுகேரளத்தில் இருந்து லாரியில் கொண்டுவரப்பட்ட மருத்துவ கழிவுகளை கொட்டிவிட்டு தப்ப முயன்றனர்–விஸ்வரூபம்

♈ 🇮🇳  நெல்லை பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தைச் சேர்ந்தவர் அருணன். இவர், சென்னையில் உள்ள மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தில் மனு ஒன்று தாக்கல் செய்தார் அந்த மனுவில் கூறியிருப்பதாவது: என் தந்தை, தூத்துக்குடி மாவட்டத்தில் தபால் துறையில் பணிபுரிந்து வந்தார். கடந்த 2003ம் ஆண்டு அவர் பணியில் இருந்த போதே இறந்துவிட்டார். இதையடுத்து தபால் துறையினரிடம் வேலை கேட்டு நான் மனு கொடுத்தேன். ஆனால் தபால் துறை அதிகாரிகள் முறைப்படி பரிசீலிக்காமல் நிராகரித்து விட்டனர். எனவே, எனக்கு கருணை வேலை வழங்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.இந்த மனுவை விசாரித்த மத்திய நிர்வாக தீர்ப்பாய நீதிபதி மனுதாரருக்கு கருணை வேலை வழங்குவது குறித்து 3 மாதத்துக்குள் பரிசீலித்து உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். மனுதாரர் விவகாரத்தில் தபால் துறையின் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளதால் தமிழக தபால் துறை தலைவர், தூத்துக்குடி தபால் துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு 5ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்–விஸ்வரூபம்

♈ 🇮🇳  காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அடுத்த நட்ரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த கோதண்டனின் மகள் சாந்தி (16)அதே, கிராமத்தை சேர்ந்தவர் ராமு (51). இவரது மகன் பிரேம்குமார் (20) இவரது உறவினர் சரவணன் (27)கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு, சாந்தி செங்கல்பட்டில் உள்ள தன்னுடைய உறவினர் வீட்டுக்கு சென்று உள்ளார். அப்போது, பிரேம்குமார் சாந்தியிடம் ஆசை வார்த்தைகள் கூறி அவரை கடத்தி சென்று திருமணம் செய்து பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவத்துக்கு பிரேம்குமாரின் தந்தை ராமு,உறவினர் சரவணன் ஆகிய இருவரும் உடந்தையாக இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து செங்கல்பட்டு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் நேற்று முன்தினம் சாந்தி கொடுத்த புகாரின் பேரில், எஸ்.ஐ தமிழ்ச்செல்வி வழக்குப்பதிவு செய்து பிரேம்குமார், ராமு, சரவணனை கைது செய்தனர்–விஸ்வரூபம்

♈ 🇮🇳  சென்னை நந்தனம் சிஐடியு காலனியை சேர்ந்தவர் ரமேஷ். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருக்கு சித்தார்த் 2 வயது என்ற மகன் உள்ளான். நேற்று முன்தினம் மாலை சித்தார்த் வீட்டில் விளையாடி கொண்டிருந்தபோது சமையல் அறையில் குடிநீர் கேனில் மண்ணெண்ணெய் இருந்ததாக கூறப்படுகிறது. இதை குடிநீர் என நினைத்து சித்தார்த் எடுத்து குடித்துள்ளான். சிறிது நேரத்தில் சிறுவன் எரிச்சல் தாங்க முடியாமல் துடித்துள்ளான். இதனால் அதிர்ச்சியடைந்த அவனது தாய் உடனே சைதாப்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தார். அங்கு தற்போது சித்தார்த்துக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது–விஸ்வரூபம்

♈ 🇮🇳  விழுப்புரம் அரசு குடோனில் நேற்றுமுன்தினம் நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 20 லட்சம் மதிப்பிலான இலவச தொலைக்காட்சி பெட்டிகள்  1100 வெடித்து சிதறின. தீயணைப்பு வீரர்கள் சுமார் 4 மணிநேரம் போராடி தீயை அணைத்தனர்

♈ 🇮🇳  மைத்ரேயன் எம்.பி. செய்தியார்களிடம் கூறியதாவது:பன்னீர்செல்வம் தலைமையில் சேரவரும் அனைவரையும் வரவேற்கிறேன். அணிகள் இணைப்பு என்ற பேச்சுக்கே இடமில்லை, விரும்புவோர் பன்னீர்செல்வம் அணியில் சேரலாம். பழனிசாமி தலைமையிலான அரசு ஒரு ஊழல் அரசு, எனவே ஊழல் அரசுக்கு துணை போவது தமிழக மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி. இவ்வாறு கூறினார்–விஸ்வரூபம்

♈ 🇮  போராட்டத்தை விலக்கிக் கொள்ளும்படி தமிழகத்தைச் சேர்ந்த பாஜகவினர் என கூறிக் கொள்ளும் சிலர் மிரட்டல் விடுப்பதாக தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்க தலைவர் அய்யாக்கண்ணு புகார் கூறியுள்ளார்-விஸ்வரூபம்

♈ 🇮  சாத்தனூர் அணை எஸ்.ஐ.யை கண்டித்து கிராம மக்கள் சாலைமறியல்* சாத்தனூர் அணை எஸ்.ஐ.யை கண்டித்து சொற்பனந்தால் கிராமத்தில் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர். ஈமச்சடங்குக்கு வாகனங்களில் சென்றபோது ரூ.2,000 லஞ்சம் வாங்கியதாக எஸ்.ஐ. மீது குற்றம் சாட்டியுள்ளனர். ஈமச்சடங்கு முடித்து விட்டு திருப்பும்போதும் லஞ்சம் கேட்டதாக எஸ்.ஐ. வெள்ளையத்தேவன் மீது புகார் தெரிவித்துள்ளனர்

♈ 🇮  சிங்கப்பூரின் மேல் புகித் சாலைப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் கத்திமுனையில் கொள்ளையடித்த இந்தியர் கைது

♈ 🇮 சென்னை வியாசர்பாடி போக்குவரத்து காவல் நிலைய தலைமைக்காவலர் பொன்னுசாமி, வ/45, என்பவர் நேற்று (31.7.17) இரவு 2nd shift (6 to 10)பணி  முடித்துவிட்டு கொளத்தூர் விநாயகபுரத்திலுள்ள  வீட்டிற்கு தனது இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். இரவு 11.00 மணியளவில் பெரவள்ளூர் பேப்பர் மில்ஸ் சாலை,S.R.P. Colony, சண்முகா மகால் அருகே சென்று கொண்டிருந்த போது, எதரே வேகமாக வந்த மாநகர பேருந்து பொன்னுசாமியின் இருசக்கர வாகனத்தின் மீது மோதியதில் தூக்கி வீசப்பட்டார். இதில் தலைமை காவலர் பொன்னுசாமிக்கு தலையில் பயங்கர அடிபட்டு, அதிக ரத்தம் வெளியேறி மயக்கமடைந்தார். பின்னர் ஆபத்தான நிலையில் ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் (தீவிர சிகிச்சை பிரிவு, வார்டு எண்.201) சேர்க்கப்பட்ட பொன்னுசாமி நள்ளரவு முதல் இன்று மதியம் வரை எந்தவித முன்னேற்றமின்றி மயக்கநிலையிலேயே உள்ளதாகவும், மேற்படி மருத்துவமனையில் சரிவர மருத்துவம் அளிக்கப்படவில்லை, அவரது மனைவி மற்றும் உறவினர்க்கும் சரியான வெளியுலக பக்குவம் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டது. சொன்னதுபோல அவரது மனைவி மற்றும் குழந்தைகள் பார்க்கும்போது நிஜமாகவே பாவமாக உள்ளது. இப்படியே சென்றால் நிலைமை மோசமாகும் என்பதால் ஒரு குடும்ப தலைவனை காப்பாற்றி, அப்பாவி பெண் மற்றும் குழந்தைகளின் எதிர்காலத்தை காக்க, இரக்க குணம் கொண்ட காவல்துறை ஆணையர் மற்றும் அதிகாரிகள் தலையிட்டு, தனியார் மருத்துவமனையில் அரசு ஊழியர் மருத்துவ காப்பீடு மூலம் சிகிச்சை பெறுதற்கும், பொது சேம நலநிதியிலிருந்து பணம் பெற்று தரவும் உதவ வேண்டும் என காவலர்கள் சார்பில் கேட்டு கொள்ளப்படுகிறது

♈அமெரிக்காவில் சீன தூதரகத்தில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியவர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை–விஸ்வரூபம்

♈ 🇮  தென் கொரியா மற்றும் இஸ்ரேல் ஆகிய நாடுகளில் இலங்கையர்களுக்கு வழங்கப்படும் தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

♈ 🇮  கிரிக்கெட்: இந்தியா-இலங்கை 2வது டெஸ்ட் போட்டி இன்று துவக்கம்

♈ 🇮  சென்னை: நடிகர் சிவாஜி சிலை அகற்றப்பட்டது

♈ 🇮🇳  திருவள்ளூர்: 3 வருவாய் அதிகாரிகள் சஸ்பெண்ட்

♈ 🇮  ஆக-03: பெட்ரோல் விலை ரூ. 68.02, டீசல் விலை ரூ.58.77

♈ 🇮 பாலிவுட் நடிகர் திலீப் குமார் மருத்துவமனையில் அனுமதி

♈ 🇮  குமரி: கேரளாவிற்கு கடத்த முயன்ற 1,500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்

♈ கரூர் ராஜாஜி சாலையில் திடீர் பள்ளம்: போக்குவரத்து மாற்றம்

♈ 🇮  மதுரை - நாகர்கோவில் இடையே இரட்டை மின் ரயில் பாதை

*விஸ்வரூபம்*

Related Articles