வெளியிடப்பட்ட நேரம்: 04-Aug-2017 , 07:44 AM

கடைசி தொடர்பு: 04-Aug-2017 , 07:44 AM

விஸ்வரூப செய்திகள் 4/8-1

viswarubam news

♈ 🇮🇳    7am -4-8-2017-friday*   🇮🇳 ♈🇮🇳  *vishwarubam news*

♈🇮🇳  கோவை அரசு கலைக்கல்லூரியில் கடந்த1ம் தேதி, 2ம் ஆண்டு மாணவர் ஒருவர் சட்டை பட்டன் போடாமல் சென்றதாககூறி, 3ம் ஆண்டு  மாணவர்கள் சிலர் தகராறு செய்தனர். இதனால், இருதரப்பு மாணவர்களும் உருட்டு கட்டைகளுடன் தாக்கிகொண்டனர். இதில், 4 மாணவர்கள் படுகாயமடைந்தனர்.  இதுதொடர்பாக கல்லூரி ஆட்சிமன்றக்குழு கூடி 10மாணவர்கள் அடையாளம் கண்டது அவர்களை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் நளினி,  நேற்று உத்தரவிட்டார்

♈🇮🇳  2100-ம் ஆண்டில் வெப்ப அலைகள் அதிகரிப்பால் இந்தியாவில் உயிர்வாழ்வது சிரமம்-பூமியில் நிலவும் வெப்ப நிலையை ஈரப்பதம் சேர்ந்தது (வெட் பல்ப் டெம்பரேச்சர்) மற்றும் ஈரப்பதம் சேராதது (டிரை பல்ப் டெம்பரேச்சர்) என விஞ்ஞானிகள் பிரிக்கின்றனர். இதில் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை ஆவியாக்கிய பிறகு கிடைக்கும் குறைந்தபட்ச வெப்பநிலை, ஈரப்பதம் சேர்ந்த வெப்பநிலையாக அறியப்படுகிறது.இந்த வெப்பநிலை 2100-ம் ஆண்டுவாக்கில் இந்தியாவில் 35 டிகிரி செல்சியசாக அதிகரிக்கும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். அப்போது அதிக வெப்பம் மற்றும் காற்றின் ஈரப்பதத்தால் மனித உடல் தகுதி இழந்து நோய்களும், மரண எண்ணிக்கையும், அறிதல் திறன் குறைபாடுகளும் அதிகரிக்கும். நல்ல உடல்நலத்துடன் இருப்பவர்கள் கூட மரணத்துக்கு தப்ப முடியாது என அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.இந்தியா முழுவதும் இதன் தாக்கம் இருந்தாலும், அடர்த்தியான மக்கள் தொகை நிறைந்த கங்கை நதிப்படுகை, சிந்து சமவெளிப்பகுதிகளில் இதனால் மிகுந்த பாதிப்பு ஏற்படும் என கண்டறியப்பட்டு உள்ளது

♈🇮🇳  பீப்புல் லிங்கிஸ்டிக் சர்வே ஆப் இந்தியா(பி.எஸ்.எல்.ஐ.,)' எனும் அமைப்பு ஆய்வு ஒன்றை நடத்தியது. ஆய்வின் முடிவில் தெரிவிக்கப்பட்டதாவது: இந்தியா முழுவதும் வசிக்கும் மக்களால் 780மொழிகள் சேப்பட்டு வருகின்றன. அடுத்த 50 ஆண்டுகளில் இவற்றில்400க்கும் மேற்பட்ட மொழிகள் அழிந்துவிடும் அபாயம் உருவாகியுள்ளது. கல்வியறிவின்மை மற்றும் பள்ளி செல்லாத காரணத்தால்,பழங்குடியின மக்கள் பேசும் மொழிகளுக்கு அழியும் ஆபத்து அதிகம் உள்ளது. இந்திய அரசின் அங்கீகாரம் பெற்ற ஆயிரம் வருடம் பழமையான மைதிலி(பீகார் பழங்குடியினர் மொழி) உள்ளிட்ட 22 பழங்குடியின மொழிகள் அழியும் அபாயம் உள்ளது. கடந்த 50 ஆண்டுகளில் 250 இந்திய மொழிகள் அழிந்து விட்டது. இவ்வாறு அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன

♈🇮🇳  பீஹார் தலைநகர் பாட்னாவில், இந்திரா காந்தி மருத்துவ அறிவியல் கல்லுாரி உள்ளது. இந்த கல்லுாரியில், பணியாளர் நியமனத்துக்கான உறுதிமொழி படிவத்தில், விண்ணப்பதாரரின் திருமண விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அதில், 'திருமணமானவரா; வாழ்க்கை துணையை இழந்தவரா; கன்னி கழியாதவரா' என, கேட்கப்பட்டிருந்தது. அதாவது,ஆங்கிலத்தில், 'சிங்கிள்' என அச்சிடுவதற்கு பதில், 'விர்ஜின்' என,அச்சடிக்கப்பட்டிருந்தது. இது, பெரும் சர்ச்சையை உருவாக்கியது.இது தொடர்பாக, மாநில சுகாதாரத் துறை அமைச்சர், மங்கல் பாண்டே கூறியதாவது: 'விர்ஜின்' என்கிற வார்த்தைக்கு, ஹிந்தி அகராதியில், 'கன்யா,கன்யா ராசி, குமார' என, குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, இந்த வார்த்தையில் தவறில்லை. ஆனால், எதிர்ப்பு எழுந்துள்ளதால், இந்த வார்த்தையை,திருமணமாகாதவர் என, மாற்ற உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்

♈🇮🇳  தமிழக தலைமை தேர்தல் அதிகாரி உள்ளிட்ட, மூன்று ஐ.ஏ.எஸ்.,அதிகாரிகள், ஒரே நேரத்தில் டில்லி புறப்பட்டு சென்றது, அதிகாரிகள் மற்றும் அரசியல்வாதிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

♈🇮🇳  திருவண்ணாமலை மாவட்டம் கிளியாப்பட்டியில் காணமல் போன துவக்கப்பள்ளி மாணவர்கள் இருவர் ஆற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கூறி தலைமையாசிரியை தமிழ்செல்வி மற்றும் ஆசிரியை கங்கா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்

♈🇮🇳  தமிழக போலீஸ்துறையில் ஆயுதப்படை பிரிவில் பணியாற்றும் 8அதிகாரிகளை பணி இடமாற்றம் செய்து தமிழக டிஜிபி டி.கே.ராஜேந்திரன் உத்தரவு பிறப்பித்துள்ளார்

♈🇮🇳  கோவையில் கரும்புக்கடை மற்றும் உக்கடம் பகுதிகளை சேர்ந்த இருவரிடம் தேசிய புலனாய்வு அதிகாரிகள் 2 பேரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். இருவரும் ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பில் இணைய உள்ளதாக வந்த தகவலை அடுத்து 2 மணி நேரமாக தேசிய புலனாய்வு அதிகாரிகள் விசாரணை நடத்தினர்

♈🇮🇳  ராஜ்யசபாவில் இன்று ஆக.,3) இரண்டு மசோதாக்களுக்கு ஓப்புதல் வழங்கப்பட்டுள்ளது. நபார்டு வங்கி சட்ட திருத்தமசோதா, இந்திய தகவல் தொழில் நுட்ப நிறுவன சட்ட திருத்த மசோதா ஆகியவற்றிற்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது

♈🇮🇳  மணிப்பூரில் நேற்று முன்தினம் இரவு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. 11.48மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோளில் 5.4ஆக பதிவானதாக புவியயில் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வீடுகள் மற்றும் கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் அச்சமடைந்து வீடுகளைவிட்டு வெளியேறினார்கள். சாலைகளில் தஞ்சமடைந்த மக்கள் சில மணி நேரத்துக்கு பின்னர் வீடுகளுக்கு திரும்பினார்கள். சூரசந்த்பூர் மாவட்டத்தை மையமாக வைத்து,பூமியில் 55 கி.மீ. ஆழத்தில் நிலஅதிர்வு ஏற்பட்டுள்ளது

♈🇮🇳  டெல்லி மேல்-சபை தேர்தலில் நோட்டாவுக்கு தடை விதிக்க முடியாது சுப்ரீம் கோர்ட்டு மறுப்பு

♈ 🇮  பணப்பட்டுவாடா, குட்கா ஊழல் மற்றும் குவாரி உள்ளிட்ட பிரச்சினைகளில் டாக்டர் விஜயபாஸ்கர் வீட்டில் கைப்பற்றுள்ள ஆவணங்களின் அடிப்படையில் 3-வது முறையாக அவரிடம் வருமானவரித்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.இந்த வழக்கு அமலாக்கப்பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன

♈ 🇮  டி.டி.வி.தினகரன் விதித்த 60 நாள் ‘கெடு’ இன்றுடன் முடிவடைவதை தொடர்ந்து, அ.தி.மு.க.வில் அடுத்து நடக்கப்போவது என்ன? என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டுள்ளது. 2 அணிகள் இணைவதில் தொடர்ந்து இழுபறி நிலையே நீடிக்கிறது

♈ 🇮  அ.தி.மு.க.வில் நிலவும் உச்சக்கட்ட குழப்பத்தை பயன்படுத்த தி.மு.க. தயாராக இல்லை என்று மு.க.ஸ்டாலின் கூறினார்

♈   ‘பெப்சி’ தொழிலாளர்கள் போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக ஆர்.கே.செல்வமணி அறிவித்தார்

♈   அமெரிக்காவின் புதிய பொருளாதார தடை, முழு அளவிலான வணிகப்போர்தான் என்று ரஷியா ஆவேசமாக கூறி உள்ளது

♈ 🇮  பாகிஸ்தான் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின்மீது மறுஆய்வு மனு தாக்கல் செய்ய நவாஸ் ஷெரீப் குடும்பத்தினர் முடிவு செய்துள்ளனர்

♈   ஏமனில் கார் குண்டு வெடிப்பு7 பேர் உடல் சிதறி உயிரிழப்பு

♈   அமெரிக்காவின் உளவுத்துறை எப்.பி.ஐ.யின் இயக்குனராக கிறிஸ்டோபர் வராய் நேற்று பதவி ஏற்றுக்கொண்டார்

♈   தெற்கு சூடான் நாட்டின் நெடுஞ்சாலை ஒன்றில் பஸ்கள் அணிவகுத்து சென்றபோது துப்பாக்கி ஏந்திய நபர்கள் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பயணிகள் பலியாகினர். 10 பேர் படுகாயம் அடைந்தனர்–விஸ்வரூபம்

♈   கம்போடியாவில் ஆஸ்திரேலிய நர்சு டேமி டேவிஸ் சார்லஸ் (வயது 49) என்பவர், சட்ட விரோதமாக வாடகைத்தாய் மையம் நடத்தி வந்து, சட்டத்தின்பிடியில் சிக்கி உள்ளார். அவருக்கு 1½ ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது–விஸ்வரூபம்

♈   ஊழல் குற்றச்சாட்டு தொடர்பாக பிரேசில் நாட்டு பாராளுமன்றத்தில் நடந்த வாக்கெடுப்பு ஒன்றில் அதிபர் மைக்கேல் டெமரின் பதவி தப்பியது–விஸ்வரூபம்

♈   துணை ஜனாதிபதி தேர்தல்; பா.ஜ., கூட்டணி எம்.பி.,கள் இன்று ஒத்திகை–விஸ்வரூபம்

♈   தமிழகத்தில் இன்று கனமழை பெய்யும்: வானிலை மையம்–விஸ்வரூபம்

♈   சசிகலாவுக்கு சிறப்பு சலுகையா? சட்டசபை குழு இன்று ஆய்வு

♈   வருமான வரி கணக்கு; நாளை(ஆக., 05) கடைசி நாள்–விஸ்வரூபம்

♈   சென்னை: ஆவடி அருகே சாலை விபத்தில் இளைஞர் பலி-விஸ்வரூபம்

♈   ஆக-04: பெட்ரோல் விலை ரூ. 68.34, டீசல் விலை ரூ.59.04

♈   நெல்லை அருகே 5 துப்பாக்கிகளுடன் மர்ம நபர் கைது

♈ 🇮 திண்டிவனம் அருகே ஏற்பட்ட விபத்தில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்தனர். 2இருசக்கர வாகனங்கள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதி அஜித்குமார்,தமிழ்ச்செல்வன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்

♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

Related Articles