வெளியிடப்பட்ட நேரம்: 07-Aug-2017 , 12:45 PM

கடைசி தொடர்பு: 07-Aug-2017 , 12:45 PM

விஸ்வரூப செய்திகள் 7/8-1

viswarubam news

♈ 🇮  10.30am 7-8-2017-monday*  🇮🇳 ♈🇮🇳  *vishwarubam news*

♈ 🇮  இந்தியா முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த் ஆகியோர் ரக்ஷா பந்தன் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர். அன்பு, பாசம், பரஸ்பர நம்பிக்கைகள் ஆகியவற்றின் அடையாளங்களைக் குறிக்கும் ரக்ஷா பந்தன்,அனைவருக்கும் மகிழ்ச்சியையும்,வளத்தையும் அளிக்கட்டும் என்று ராம்நாத் கோவிந்த தனது டிவிட்டர் பக்கத்தில் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்

♈ 🇮  ஹிமாச்சல பிரதேசம் மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் பல கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இந்நிலையில் குல்லு மாவட்டத்தில் ததேதார் கிராமத்தில் நேற்று பெய்த கனமழையால் வெள்ளம் ஏற்பட்டது. இந்த வெள்ளத்தில் 2குழந்தைகள் உயிரிழந்துள்ளனர், 4 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் பல வீடுகள் சேதமடைந்துள்ளன. ---- vishwarubam news

♈ 🇮  இந்தியா முழுவதும் இன்று ரக்ஷா பந்தன் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் லடாக் மாவட்டத்தில்15,000 அடி உயரத்தில் இந்திய-திபெத்திய எல்லை காவல்படையினருக்கு பெண்கள் ராக்கி கட்டுகின்றனர்

♈ 🇮  சவான் மாதம் வட இந்தியர்களுக்கு மிக முக்கியமான மாதம். இது இந்துக்களின் புனித மாதம் என கருதப்படுவதால் வடமாநிலங்களில் உள்ள பல்வேறு சிவன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம் மற்றும் பிரார்த்தனைகள் நடைபெற்றன. இதனையடுத்து நேற்று சவான் புனித மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமை என்பதால் உஜ்ஜைன் மாவட்டத்தில் உள்ள மகாகலேஷ்வர் கோயிலில் சிவபெருமானுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது---- vishwarubam news

♈ 🇮  நாகை மாவட்டம் கருவேலங்கடை பகுதியில் சாலையில் நின்றுகொண்டிருந்த தனியார் பள்ளி வாகனத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பள்ளி மாணவர்களை பத்திரமாக மீட்ட தீயணைப்பு வீரர்கள்,வாகனத்தில் பற்றிய தீயையும் விரைந்து அணைத்தனர்

♈ 🇮  குண்டர் சட்டத்தில் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ள உள்ள திருமுருகன் காந்தியுடன் வைகோ சந்தித்துள்ளார். சென்னையில் முள்ளிவாய்க்கல் நினைவேந்தல்கூட்டம் நடத்தியதற்காக திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டார்

♈ 🇮  பெங்களூருவில் இருந்து காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் குஜராத் சொகுசு விடுதிக்கு கொண்டு செல்லப்பட்டு உள்ளனர்---- vishwarubam news

♈ 🇮  ஆந்திராவின் வடக்கு பகுதியில் இருந்து கன்னியாகுமரி வரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளது. அதன் காரணமாக தமிழகத்திலும்,புதுச்சேரியிலும் இன்று (திங்கட்கிழமை) ஒரு சில இடங்களில் மழை பெய்யும். நேற்று காலை 8–30மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு வருமாறு:–சின்னக்கல்லாறு 5 செ.மீ.,வால்பாறை 4 செ.மீ., சென்னை நுங்கம்பாக்கம், டி.ஜி.பி. அலுவலகம், நடுவட்டம் தலா 3 செ.மீ., ஆலங்காயம்,போச்சம்பள்ளி, தளி, வாணியம்பாடி தலா 2 செ.மீ.,எண்ணூர், போளூர், உத்தமபாளையம், வானூர் தலா 1செ.மீ. மழை பெய்துள்ளது--vishwarubam news

♈ 🇮  அமெரிக்காவில் விமானத்தில் சிறுமியிடம் சில்மி‌ஷம் செய்ததாக எழுந்துள்ள புகாரின் பேரில் இந்திய டாக்டர் கைது செய்யப்பட்டார்

♈ 🇮  ஜப்பானில் ‘நொரு’ புயலுக்கு2 பேர் பலி--- vishwarubam news

♈ 🇮  நாமக்கல் : 2 பஸ்கள் மோதல்; 10 பேர் காயம்---- vishwarubam news

♈ 🇮  ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலாறு அணைப்பகுதிக்கு செல்ல தடை

♈ 🇮  ராமநாதபுரம் : தாய், மகனுக்கு டெங்கு பாதிப்பு

♈ 🇮 நாமக்கல் : விஏஓ.,வுக்கு மிரட்டல் விடுத்த 4 பேர் கைது ----vishwarubam news

♈ 🇮  கனமழை காரணமாக கொச்சி விமானம் சென்னையில் தரையிறக்கம்---vishwarubam news

♈ 🇮  சென்னை- பல்லாவரத்தில் அரசு பஸ் பள்ளத்தில் கவிழந்து விபத்து---vishwarubam news

♈ 🇮🇳   மதுரை- அலங்காநல்லூர் அருகே டாஸ்மாக்கில் கொள்ளை---vishwarubam news

♈ 🇮  ஜம்மு காஷ்மீரில் என்கவுன்டர்; பயங்கரவாதி சுட்டுக்கொலை---vishwarubam news

♈ 🇮   துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்றுள்ள வெங்கய்ய நாயுடு,திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சாமி தரிசனம் செய்தார் --- vishwarubam news

♈ 🇮🇳  கார் விபத்தில் இறந்த, பிரிட்டன் இளவரசி டயானா, தன் கைப்பட எழுதிய, 33 கடிதங்கள், அமெரிக்காவில் ஏலம் விடப்பட உள்ளன. இந்த கடிதங்கள், 80 லட்சம் ரூபாய்க்கு மேல் ஏலம் போகும் என,எதிர்பார்க்கப்படுகிறது

♈🇮🇳  *vishwarubam* 🇮🇳♈

 

Related Articles