வெளியிடப்பட்ட நேரம்: 09-Aug-2017 , 07:01 PM

கடைசி தொடர்பு: 10-Aug-2017 , 05:05 AM

விஸ்வரூப செய்திகள் 9/8-2

viswarubam news

♈ 🇮🇳    6pm -9-8-2017-wednesday*   🇮🇳 ♈🇮🇳  *vishwarubam news*

♈ 🇮🇳  மேலும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கலாம் -போலீஸ் பணி உடல் திறன் தேர்வில் 'கோல்மால்' மூடி மறைப்பு -நேற்று மதுரையில் கையும் களவுமாக பிடிபட்டவர்களை காப்பாற்ற முயற்சியா-போலீஸ் தேர்வில் 'கோல்மால்'ஊழியர்களிடம் விசாரணை-மதுரையில் நடக்கும் போலீஸ் பணி உடல் திறன் தேர்வில் 'கோல்மால்' புகார் குறித்து அமைச்சுப் பணியாளர்களிடம் விசாரணை நடக்கிறது.ஆயுதப்படை மைதானத்தில் நடக்கும் உடல் திறன் தேர்வில் போலீஸ் அமைச்சுப் பணியாளர்கள் சிலர், சிலருக்கு சலுகை காட்டியதாகவும், முறைகேடு நடப்பதாகவும் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வாலிடம் புகார் தெரிவிக்கப்பட்டது.நேற்றிரவு ஆயுதப்படை மைதானம் சென்ற கமிஷனர், தேர்வு பணியில் ஈடுபட்ட அமைச்சுப் பணியாளர் ஒன்பது பேரிடம் விசாரணை நடத்தினார். முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால் ஒன்பது பேர் மீது துறை ரீதியான விசாரணை நடக்கவும், மறு தேர்வு நடக்கவும் வாய்ப்பு உள்ளது-தற்போது யார் மீதும் நடவடிக்கை எடுப்பதாக தெரியவில்லை. ஒரு வாரமாக நடைபெறும் காவலர் தேர்வில் எப்படியெல்லாம் கோல்மால் நடந்துள்ளது என்பதை நேர்மையான அதிகாரியை கொண்டு விசாரணை நடத்தினால் மேலும் அதிர்ச்சி தகவல்கள் கிடைக்கலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன  -விஸ்வரூபம்

♈ 🇮🇳  நல்ல சம்பளம் வாங்கும்போது ஏன் லஞ்சம் –இந்த அசிங்கம் தேவையா -வேலூர் மாநகராட்சி ஆணையர் குமார் லஞ்சம் வாங்கியதாக எழுந்த குற்றச்சாட்டையடுத்து அவர் லஞ்சப்பணத்தை வாங்கும் போது கையும் களவுமாக பிடிபட்டார்

♈ 🇮  3,456 முதுநிலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப ஐகோர்ட் அனுமதி

♈ 🇮  விழுப்புரத்தில் ரூ.1,000 கோடியில் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம்: முதல்வர்

♈ 🇮  அரியானாவில் ஐஏஎஸ் அதிகாரி மகளை கடத்த முயன்ற பா.ஜ.,தலைவர் மகன் கைது

♈ 🇮  தங்கம் விலை சவரனுக்கு ரூ.80 அதிகரிப்பு

♈ 🇮  போர் பதட்டம்: பங்குச்சந்தைகள் 3வது நாளாக சரிவு

♈ 🇮  தமிழகத்தில் தலைப்பு செய்தியாக வாழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.,: முதல்வர் பழனிசாமி

♈ 🇮🇳    போத்ராவுக்கு ஒரு நாள் போலீஸ் காவல் –விஸ்வரூபம்

♈ 🇮🇳      புனே விமான நிலையத்தில், உப்புமா மூலம், 1.29 கோடி ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டு கரன்சிகளை கடத்த முயன்ற இரண்டு பேர் சிக்கினர்

♈ 🇮  டோக்லாம் பிரச்னைக்கு பேச்சு வார்த்தையே தீர்வு என புத்த மத தலைவர் தலாய் லாமா கூறியுள்ளார்

♈ 🇮  இந்தியாவில் பேச்சு சுதந்திரத்திற்கு ஆபத்து உள்ளதாக காங்கிரஸ் தலைவர் சோனியா கூறியுள்ளார்

♈ 🇮🇳  காவிரி நதிநீர் பங்கீடு தொடர்பான வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடந்து வருகிறது. அப்போது, நீதிபதிகள் நீர் மேலாண்மையில் சிறந்து விளங்கும் நிபுணர்கள் வாதங்களை முன்வைக்க தமிழகம், கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களுக்கு அனுமதி வழங்கப்படுகிறது. அந்த நிபுணர்களுக்கு45நிமிடங்கள் ஒதுக்கப்படும். அப்போது அறிவியல் பூர்வமானதாக இருக்க வேண்டும் எனக்கூறினர்.

♈ 🇮  வேலூர் மாவட்டம் ஓமலூர் கிளை சிறையில் இருந்து தப்பிய விசாரணை கைதியை போலீசார் கைது செய்தனர். நேற்று சிறையில் இருந்து தப்பிய சின்னம்பள்ளியை சேந்ர்த சாமிதுரையை போலீசார் கைது செய்துள்ளனர்

♈   டெல்லி விமான நிலையத்தில் நின்றுகொண்டிருந்த விமானம் மீது மற்றொரு விமானம் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானம் மீது எத்தியோப்பியன் ஏர்லைன்ஸ் விமானம் மோதியது. விபத்து தொடர்பாக விமான போக்குவரத்து துறை விசாரணை மேற்கொண்டு வருகிறது

♈ 🇮  தமிழகத்தில் 24 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தென்தமிழகத்தில் பல இடங்களிலும், வடதமிழகத்தில் ஒருசில இடங்களிலும் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. லட்சத்தீவு அருகே வளிமண்டல மேல் அடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ளதாக வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது

♈ 🇮  வெள்ளையனே வெளியேறு அப்போ... பாஜகவே வெளியேறு இப்போ... அதிரடி காட்டும் மம்தா!

♈ 🇮  திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க வந்த பக்தரின் காரில் துப்பாக்கியும் 6 தோட்டாக்களும் இருந்ததைக் கண்டுபிடித்த சிறப்பு அதிரடி படை அதிகாரிகள் அவரை கைது செய்து போலீஸிடம் ஒப்படைத்தனர்

♈ 🇮  தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் இந்த ஆண்டும் சுமார் 1 லட்சம் இடங்கள் காலியாகவே இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது

♈ 🇮🇳  உளுந்தூர்பேட்டை அருகே தேசிய நெடுஞ்சாலையில் லாரியும் ஆம்னி வேனும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் 10பேர் படுகாயம் அடைந்தனர். காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்

♈ 🇮🇳  மதுரை: இறைச்சிக்காக மாடுகளை விற்க கூடாது என்ற மத்திய அரசின் உத்தரவு மீதான தடை ஆகஸ்ட் 22ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது ♈🇮🇳   *vishwarubam*  🇮🇳♈

Related Articles