வெளியிடப்பட்ட நேரம்: 24-Mar-2017 , 02:08 PM

கடைசி தொடர்பு: 24-Mar-2017 , 02:08 PM

விஸ்வரூப செய்திகள் 24/3-3

IMG-20170217-WA0175

♈🇮🇳 🌴 *1pm-24-3-2017news* 🌴🇮🇳♈🙏📡🙏📡 *vishwarubam news*

♈🇮🇳 🌴 *தினகரனின் வேட்பு மனுவை ஏற்கக்கூடாது: அ.தி.மு.க தொண்டர் மனு*

♈🇮🇳 🌴 *ஐ.நா. மனித உரிமைக் கவுன்சிலில் புதைக்கப்பட்ட நீதி! வைகோ அறிக்கை*

♈🇮🇳 🌴 *தீபாவின் வேட்புமனுவில் தனது கணவர் பெயரை குறிப்பிடவில்லை. மேலும் தீபாவின் வேட்புமனுவில் அவரது சொத்து மதிப்பு குறித்த விவரமும் குறிப்பிடவில்லை என்ற தகவல் வெளியாகி உள்ளது. அதோடு தான் தொடங்கிய பேரவையை இதுவரை பதிவு செய்யாததால், பேரவையின் பதிவு எண்ணையும் விண்ணப்பத்தில் குறிப்பிட முடியவில்லையாம்.மேலும் சில காரணங்களால் தனது வேட்புமனு தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கிறார் தீபா*

♈🇮🇳 🌴 *தமிழகத்தில் இந்த ஆண்டு மேலும் 3 இடங்களில் நீட் தேர்வு நடைபெறும் என்று மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்*

♈🇮🇳 🌴 *சசிகலாவைப்போல் தினகரனாலும் இனி தேர்தலில் போட்டியிட முடியாத நிலை நிச்சயம் வரும். நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர் ஜெயலலிதா. அவரது படத்தை அ.தி.மு.க. அரசு பயன்படுத்துவது தவறு. இவ்வாறு கூறினார் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்*

♈🇮🇳 🌴 *முக்குலத்தோர் புலிப்படையின் மாநில நிர்வாகிகள் கூண்டோடு கலைக்கப்பட்டனர் என்று கருணாஸ் அறிவித்துள்ளார்*

♈🇮🇳 🌴 *வறட்சி, வர்தா நிவாரணம் வழங்குவதில் தமிழக அரசு கோரிய நிதியில் வெறும் 3.24 விழுக்காட்டை மட்டும் நிவாரணமாக ஒதுக்கியிருப்பதன் மூலம் தமிழக மக்களுக்கு மத்திய அரசு துரோகம் செய்திருக்கிறது என்று ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்*

♈🇮🇳 🌴 *ஓ.பன்னீர்செல்வம் வெறும் அம்புதான்.. எய்த வில் யார் தெரியுமா? வைகை செல்வன் விளாசல் அதிமுகவின் இரட்டை இலை சின்னத்தை முடக்குவது என்ற தேர்தல் ஆணையத்தின் முடிவில் ஏதோ தவறு நிகழ்ந்துள்ளது என்று அதிமுக செய்தித் தொடர்பாளர் வைகைச் செல்வன் தெரிவித்தார்*

♈🇮🇳 🌴 *வேலூர் அருகே அதிகாலையில் வீட்டின் மீது பயங்கர சத்தத்துடன் விழுந்த மர்ம ஒளியால் பெண் ஒருவர் படுகாயமடைந்தார்*

♈🇮🇳 🌴 *அதிமுக கட்சியிலும், ஆட்சியிலும் டிடிவி தினகரன் ஆதிக்கம் செலுத்துவதை ஒடுக்க, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இணைந்து செயல்பட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன*

♈🇮🇳 🌴 *பான் கார்டை ஆதார் எண்ணுடன் இணைப்பது கட்டாயம், மத்திய அரசின் அடுத்த செக்..!*

♈🇮🇳 🌴 *சன் டிவியில் பெரும் ஆரவாரத்துடன் ஒளிபரப்பாகிவரும் நந்தினி மெகா தொடரின் கதை என்னுடையது என நடிகரும் இயக்குநருமான வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார். இந்தக் கதை தனக்குச் சொந்தமானது என்றும், தன்னிடம் கேட்டு வாங்கிய சுந்தர் சி, அதற்காக எதுவுமே தராமல் தொடரை ஒளிபரப்பிக் கொண்டிருப்பதாகவும் இயக்குநர் வேல்முருகன் குற்றம்சாட்டியுள்ளார்*

♈🇮🇳 🌴 *இலங்கையில் ரஜினிகாந்தை வைத்து வீடுகள் திறப்பது ஏமாற்று வேலை என்று விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல் திருமாவளவன் கூறியுள்ளார்*

♈🇮🇳 🌴 *விமானத்தில் ஏர் இந்தியா ஊழியரை 25 முறை செருப்பால் அடித்த சிவசேனா எம்பி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏர் இந்தியா விமானங்களில் பயணிக்கவும் அவருக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது*

♈🇮🇳 🌴 *திருநெல்வேலி: நெல்லை அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் திரியும் சிறுத்தை பிடிபடாமல் போக்கு காட்டி வருவதால் வனத்துறையினர் திணறி வருகின்றனர்*

♈🇮🇳 🌴 *மதுரை அருகே கீழடி அகழாய்வு தலைவராக இருந்த அமர்நாத், அசாம் மாநிலத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். கீழடியில் மூன்றாவது கட்ட அகழாய்வுக்கு நிதி ஒதுக்க கோரிக்கை வைத்த நிலையில் அவர் அசாமிற்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. முன்னதாக இரண்டாம் கட்ட ஆய்வில் தமிழர்களின் 2,500 ஆண்டு பழமையான வரலாறு கண்டறியப்பட்டது நினைவு கூறத்தக்கது*

♈🇮🇳 🌴 *விவசாயிகள் பேராட்டத்தை அறிந்ததும் மத்திய அரசு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் என்றும் நடிகர் விஷால் தெரிவித்துள்ளார். மேலும் மத்திய அரசு அறிவித்த வறட்சி நிவாரணம் போதுமானதல்ல என்று தெரிவித்த விஷால், தொழில் நிறுவனங்களுக்கு கடனை தள்ளுபடி செய்யும் அரசு, விவசாயிகள் கடனையும் ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார். விவசாயிகள் நன்றாக இருந்தால் தான் நாடு செழிப்பாக இருக்கும் என்றும் விஷால் தெரிவித்தார்*

♈🇮🇳 🌴 *நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு ஊழல் வழக்கில் ஜிண்டால் ஸ்டீல் ஆலோசகர் ஆனந்த் கோயல் மற்றும் 4 பேர் மீது சிபிஐ, குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ளது. நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதை தொடர்ந்து அந்த நிறுவனம் மீது வழக்கு தொடரப்பட்டது*

♈🇮🇳 🌴 *சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் திமுக வேட்பாளர் மருதுகேணஷ் வேட்பு மனு ஏற்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 12-ம் தேதி சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ளது*

♈🇮🇳 🌴 *நீட் தேர்வுக்கு விலக்கு கோரி மத்திய அமைச்சர் நட்டாவை சந்தித்து தமிழக சுதாகரத்துறை அமைச்சர் விஜய பாஸ்கர் கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள அமைச்சரின் அறையில் சந்தித்து பேசினார். மேலும் மத்திய அமைச்சர் பொன். ராதா கிஷ்ணனையும் சந்தித்து விஜய பாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதா கிருஷ்ணன் கோரிக்கை விடுத்துள்ளனர்*

♈🇮🇳 🌴 *கூவம், அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாயை மீட்டெடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் ஜுன் 30-ம் தேதிக்குள் அறிக்கை அளிக்க தமிழக அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 3 நீர் நிலையயைும் பழைய நிலைக்கு கொண்டுவர நடவடிக்கை தேவை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது*

♈🇮🇳 🌴 *தமிழ்நாடு முழுவதும் குடிநீர் பிரச்சனை அதிகரித்து வருவதால் குடிநீர் பிரச்சனையை தீர்க்க மத்திய அரசிடம் தமிழக அரசு நிதி கேட்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் கூறியுள்ளார்*

♈🇮🇳 🌴 *சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் 64 பேருக்கு மேல் களத்தில் உள்ளதால் வாக்குச்சீட்டு வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 127 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதால் வாக்குப்பதிவு இயந்திரம் பயன்படுத்த இயலாது என்றும், ஒரு வாக்குச்சாவடியில் அதிகபட்சமாக 4 வாக்கு இயந்திரங்கள் மட்டுமே பயன்படுத்த இயலும்*

*ரூ.62,138 கோடி நிவாரணம் கேட்டதற்கு மத்திய அரசு வெறும் ரூ.2,014 கோடியை வழங்கியுள்ளதாக எதிர்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார். தமிழக மக்களுக்கு தேவையான நிதியை மத்திய அரசிடம் மாநில அரசு கேட்டுப் பெறவில்லை என்று குற்றம் சாட்டினார். பயிர்க்கடன் குறித்த தமிழக அரசின் அறிவிப்பு விவசாயிகளை ஏமாற்றுவதாக உள்ளது என்று ஸ்டாலின் தெரிவித்தார்*

*சென்னை டான்ஜெட்கோ லஞ்ச ஒழிப்பு கூடுதல் டிஜிபி எம்.என்.மஞ்சுநாதா பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவர் லஞ்ச ஒழிப்பு மற்றும் ஊழல் தடுப்பு இயக்குநராக மஞ்சுநாதா நியமிக்கப்பட்டுள்ளார்*

*தர்மசாலாவில் நாளை இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதும் 4 வது டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இந்நிலையில் தோள்பட்டை காயம் காரணமாக இந்திய அணி கேப்டன் விராட் கோலி நேற்று பயிற்சி ஆட்டத்தில் பங்கேற்கவில்லை. இந்நிலையில் இது குறித்து பேசிய விராட் கோலி, நாளை 100 சதவீதம் உடல் தகுதி இருந்தால் மட்டுமே விளையாடுவேன் என்று தெரிவித்துள்ளார்*

*ஹைட்ரோ கார்பன் திட்டத்தை எதிர்த்து புதுக்கோட்டை மாவட்டம் வடகாட்டில் காலவரையற்ற உண்ணாவிரத்தில் ஈடுபட்டுள்ளனர். வடகாடு மற்றும் சுற்றுப்புற கிராமங்களை சேர்ந்த 200 பேர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர்*

*நெல்லை; பாளை.,யில் 60 கிலோ தங்கம் கொள்ளை*

*தங்கம் விலை சவரனுக்கு ரூ.48 குறைவு*

*இந்திய ரூபாய் மதிப்பில் உயர்வு : 65.48*

*என்.எல்.சி., நிறுவனத்தில் வேலை வாங்கி தருவதாக மோசடி; ஒருவர் கைது*

♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

Related Articles