வெளியிடப்பட்ட நேரம்: 01-Jun-2019 , 08:56 AM

கடைசி தொடர்பு: 01-Jun-2019 , 08:56 AM

ஆட்சியை கவிழ்க்க மாட்டோம் - எடியூரப்பா

yediyurrappa

பா.ஜனதா மேலிடம் உத்தரவிட்டுள்ளதால் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க முயற்சி செய்ய மாட்டோம். ஒருவேளை இந்த அரசு தானாக விழுந்தால், அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது என்று எடியூரப்பா கூறியுள்ளார்.

பெங்களூரில் பேட்டி அளித்த எடியூரப்பா கூறியதாவது..

கர்நாடகத்தில் கூட்டணி அரசை கவிழ்க்கும் முயற்சியில் நாங்கள் ஈடுபடமாட்டோம். இந்த ஆட்சியை கவிழ்க்க வேண்டாம் என்று பா.ஜனதா மேலிட தலைவர்கள் உத்தரவிட்டுள்ளனர். ஒருவேளை இந்த அரசு தானாக விழுந்தால், அதற்கு நாங்கள் ஒன்றும் செய்ய முடியாது.

இந்த அரசு வறட்சி நிவாரண பணிகள், வளர்ச்சி பணிகளை மேற்கொள்ள வேண்டும். ஆட்சி அதிகாரத்திற்கு நாங்கள் ஆசைப்படவில்லை. சட்டசபையை கலைக்க பா.ஜனதா முயற்சி செய்வதாக சித்தராமையா கூறியது சரியல்ல.

எங்கள் கட்சி மத்தியில் ஆட்சியை பிடித்துள்ளது. அதனால் எங்களுக்கு எந்த பிரச்சினையும் இல்லை. கர்நாடகத்தில் இருந்து 4 பேருக்கு மத்திய மந்திரி பதவி வழங்கப்பட்டுள்ளது.

அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இலாகாக்கள் எங்களுக்கு திருப்தியை தருகிறது. அவர்கள் சிறப்பான முறையில் செயல்படுவார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.

Related Articles