வெளியிடப்பட்ட நேரம்: 13-May-2019 , 09:33 AM

கடைசி தொடர்பு: 13-May-2019 , 09:33 AM

என்ன சொல்கிறார் திவ்யா சத்யராஜ்?

WORKSHOP-IMAGE-Copy-e1522442621406

தென் இந்தியாவின் முன்னணி ஊட்டச்சத்து நிபுணராக இருக்கிறார் நடிகரும் சமூக ஆர்வளருமான நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ். திவ்யா கடந்த 6 ஆண்டுகளாக ஊட்டச்சத்து நிபுணராக பயிற்சி பெற்றுள்ளார். உலகின் மிகப்பெரிய திட்டமான அக்ஷய பாத்திரம் என்ற மதிய உணவு திட்டத்தின் தூதுவராக உள்ளார்.

தென்னிந்தியாவில் உள்ள ஊட்டச்சத்து நிபுணர்களில் திவ்யாவுக்கு பிரபல இணையதளம் ஒன்று முதலிடத்தை கொடுத்தது. அதுபோல் இந்தியாவில் உள்ள ஊட்டச்சத்து நிபுணர்களின் தர வரிசை பட்டியலில் திவ்யா மூன்றாம் இடத்தை பிடித்துள்ளார்.

ஊட்டச்சத்து குறைபாடு, இரும்புச் சத்து குறைபாடு மற்றும் வைட்டமின் ஏ குறைபாடு பற்றிய விழிப்புணர்வை உருவாக்குவதற்காக கிராமப்புறங்களில் முயற்சியில் இருக்கிறார்.

இவர் சமீபத்தில் இந்தியாவில் நடக்கும் மருத்துவ முறைகேடுகள் பற்றி பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். மேலும் கர்ப்பிணிப் பெண்களுக்கு உள்ள இரும்புச் சத்து குறைபாடு குறித்து தமிழ்நாடு சுகாதார மந்திரியை சந்தித்து வேண்டுகோள் விடுத்திருந்தார்.

இந்நிலையில் பிரித்தானிய பாராளுமன்ற மாளிகையில் நடைபெற்ற மருத்துவ சிறப்பு நிகழ்வு ஒன்றில் உரையாற்றுவதற்காக திவ்யா அழைக்கப்பட்டார்.
இதில் பேசிய திவ்யா சத்யராஜ்,

"எனக்கு இந்த வாய்ப்பை வழங்குவதற்காக உலக தமிழ் அமைப்பு (UK) தலைவரான திரு. ஜேக்கப் ரவிபாலனுக்கும் நன்றி கூற விரும்புகிறேன். தமிழ்நாட்டில் உள்ள சாதாரண மனிதர்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கு நான் தொடர்ந்து பணியாற்றுவேன். ஏழை எளிய மக்களின் குழந்தைகள் உட்டபட அனைவரும் நல்ல ஊட்டச்சத்தோடு இருக்க வேண்டும் என்பது தான் என்னுடைய விருப்பம் " என்றார்

Related Articles