துலாம் முதல் மீனம் வரையிலான ஆவணி மாதபலன்கள்

0
621
      சுக்கிரன்

 

  21.08.17 (ஆவணி 5)

சுக் (கடகம்)

28.08.17 (ஆவணி 12)

செவ் (சிம்மம்)

02.09.17 (ஆவணி 17)

புதன் (சிம்மம்)

02.09.17 (ஆவணி 17)

குரு (துலாம்)

15.09.17 (ஆவணி 30)

சுக் (சிம்மம்)

 

 

செவ்வாய்

புதன்

ராகு

கேது சூரியன்

 

  சனி(வ)   குரு

ஹேவிளம்பி ஆண்டு ஆவணிமாத இராசி பலன் (2017)

17.08.2017முதல் 16.09.2017வரை (ஆவணி 1-31.)

 

ஆவணிமாத கிரகநிலை…

 துலாம்யாருக்கும் தீங்கின்றி வாழவேண்டும் என்று நினைக்கும் துலாம் ராசியினருக்கு இந்த மாதம் ராசிநாதன் சுக்கிரன் சாதகமான இடங்களில் செல்வதால் அழகும் இளைமையும் அதிகரிக்கும். தைரியமாக சில முக்கிய முடிவுகளை எடுப்பீர்கள். சூரியனும் பதினொன்றாம் வீட்டில் அமர்ந்து இருப்பதால் அரசு காரியங்களில் வெற்றி கிடைக்கும் வழக்குகளும் சாதகமாக நடக்கும். உங்களது செல்வாக்கு உயரும். புகழ் கூடும். செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் நிறைய புதிய நட்புகள், பிரபலங்கள் அறிமுகமாவார்கள். சவாலான காரியங்கள் கூட சாதரணமாக செய்து முடிப்பீர்கள். அதிகாரமிக்க பதவியில் இருப்பவர்களும் உங்களுக்கு சாதகமாக இருப்பார்கள். குடும்பம் நிம்மதியாக இருக்கும். புதன் சாதகமாக இருப்பதால் உங்களது அறிவு திறன் அதிகரிக்கும். விஐபி அறிமுகம் கிடைக்கும். நட்பு வட்டம் விரிவடையும். ஒதுங்கி நின்ற பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள். பன்னிரெண்டில் மறைந்து நின்ற குருபகவான் வரும் செப்டம்பர் 2ம் தேதி ஜென்மத்தில் நுழைவதால் இதுவரை இருந்து வந்த வீண்பலி விலகும். ஆனாலும் கணவன் மனைவிக்கும் சிறு சிறு சச்சரவுகள் வந்து நீங்கும். முன்கோபம் அதிகரிக்கும். உங்கள் மீது குற்றம் சொல்லி பேசுவார்கள். ஏழரைச்சனி நடப்பதால் செல்போன் பேசிக்கொண்டு வாகனம் இயக்குவதும், சாலையை கடப்பதும் வேண்டாம். மற்றவர்களிடம் எதார்த்தமாக பேசி சிக்கலில் மாட்டிக்கொள்ள வேண்டாம். நான்காம் வீட்டு கேதுவால் தாயாருக்கு உடல் உபாதைகள் மருத்துவ செலவுகள் வந்து செல்லும், தயார் பாசத்தில் சொல்லும் அறிவுரைகளை ஏற்றுக்கொள்ளவும். வீண் விவாதம் வேண்டாம், வீடு கட்டும் போது கவனம் தேவை. அரசு வகையில் சிக்கல் வரமால் பார்த்து காட்டவும். வியாபாரத்தில் விளம்பரம் கைகொடுக்கும். புதிய ஒப்பந்தகள் கையெழுத்தாகும். பங்கு தாரர்களிடம் இருந்து வந்த பிரச்சனை நீங்கும். வேலையாட்களிடம் கவனமாக இருக்கவும். லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் விசயங்களில் தலையிட வேண்டாம். நீங்கள் பொறுப்பு ஏற்கும் காரியங்களில் கவனம் தேவை. ஓயாமல் உழைக்கும் காலமிது. உழைப்புக்கு ஏற்ற ஊதியம் இல்லை என்று கவலை படுவீர்கள். மானவர்கள் படிப்பில் கவனம் தேவை தினசரி பாடங்களை அந்த நாளே படிக்கவும். கடைசி நேரத்தில் படிக்கலாம் என்று தள்ளிப்போட வேண்டாம். கலைத்துறையில் சம்பாதிப்பதற்கு வாய்ப்புகள் உருவாகும். புதிய வாய்ப்புகள் பெருகி வரும். பெண்கள் பெற்றோரின் எண்ணங்கள் நிறைவேற்றுவீர்கள். காதல் கைகூடும். சிலருக்கு வேலை கிடைக்கும். புகழும் பணமும் சேர்ந்து பெருகும் மாதமிது.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 11மாலை 4.45 முதல் 13ம் தேதி இரவு 7.15 வரை பொறுமை அவசியம்.

பரிகாரம்: பைரவர் வழிபாடு பலன் கெடுக்கும்.

விருச்சிகம்காலத்திற்கு ஏற்ப உங்களை மாற்றிக்கொண்டு வெற்றி நடை போடும். சூரியன் 10வது வீட்டில் ஆட்சிப்பெற்று அமர்ந்து இருப்பதால் வேலை தேடுபவர்களுக்கு புது வேலை கிடைக்கும். அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிலும் வெற்றியே கிடைக்கும் மாதமிது, சுக்கிரனும் சாதகமான வீடுகளில் செல்வதால் தடைபெற்று வந்த திருமணம் நடைபெறும். வாகன சேர்க்கை உண்டு, உறவுகள் மத்தில் மரியாதை கூடும். புதனும் சாதகமான சூழலில் இருப்பதால் பழைய நண்பர்கள் தேடிவந்து பேசுவார்கள், புதிய நண்பர்கள் வட்டமும் அறிமுகமாகும். ராசி அதிபதி செவ்வாய் சாதகமான வீடுகளில் செல்வதால் கணவன் மனைவி உறவு மகிழ்ச்சியாக இருக்கும். உடன்பிறப்புகள் உதவியாக இருப்பார்கள். புதிதாய் வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். குரு 12ல் மறைவதால் செலவுகள் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருப்பவர்களால் உதவிகள் கிடைக்கும். கோவில்களுக்கு சென்று வருவீர்கள். வேற்று மதத்தினர் உதவியாய் இருப்பார்கள். சனி ஜென்மத்திலேயே தொடர்வதால் கோவத்தை தவிர்ப்பது நல்லது. சின்ன சின்ன பிரச்னைகளை பெரிதாக்கிகொள்ள வேண்டாம். எல்லாப்பக்கமும் பிரச்சனை சூழ்ந்து இருந்தாலும் சமாளித்து வெளியில் வர வேண்டும். உடல் ஆரோக்கியத்தில் அக்கரை தேவை. வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வியாபாரம் பெருகும். வடிக்கையளர் எண்ணிக்கை அதிகரிக்கும். நிலம் கட்டிடம் சம்பந்தமான தொழில்கள் லாபகரமாக இயங்கும். பங்குதாரர்கள் உறுதுணையாக இருப்பார்கள். உத்தியோகத்தில் சக ஊழியர்களால் இருந்து வந்த பிரச்சனை முடிவுக்கு வரும். விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். பதவி உயர்வு கிடைக்கும். உயர் அதிகாரிகள் உறுதுணையாக இருப்பார்கள். மாணவர்கள் ஆசிரியர் உதவியுடன் விடுபட்ட பாடங்களில் வெற்றிப்பெறுவீர்கள். மற்ற மாணவர்களிடம் மதிப்பு கூடும். கலைத்துறையில் உங்கள் படைப்புகளுக்கு வரவேற்பு கூடும். அரசியலில் முன்னிலை ஏற்படும். பெண்களுக்கு வேண்டாத சவகாசம் விடு படும். அமைதியாக இருந்து சாதிக்கும் மாதமிது.

சந்திராஷ்டமம்: செப்டம்பர் 13 இரவு 7.15 மணிமுதல் 14, 15ம் தேதி இரவு 9.30 மணி வரை.

பரிகாரம்: ஆஞ்சநேயர் வழிபாடு ஆபத்தை தீர்க்கும்..

தனுசுசுயமாய் உழைத்து முன்னேற வேண்டுமமென்ற எண்ணத்தோடு வாழும் தனுசு ராசி நேயர்களே, இந்த மாதம் முழுவதும் சூரியன் 9 ம் இடத்தில் ஆட்சிப்பெற்று வலுவாய் அமர்ந்து இருப்பதால் தந்தையின் உடல்நிலை சீராகும். தந்தை உதவியாக இருப்பார். அரசுக்காரியங்களில் அனுகூலம் உண்டாகும். பணவரவும் உண்டு. புதன் சாதகமாக இருப்பதால் நண்பர்கள் உதவியாக இருப்பார்கள். உற்றார் உறவினர் வருகையும் மகிழ்வு தரும். கடன் பிரச்சனையில் சிக்கல்கள் தீரும். செவ்வாய் பாதகமாக இருப்பதால் சிறு சிறு விபத்துகள். அறுவை சிகிச்சைகள் மூலம் இரத்தம் வெளியேற வாய்ப்பு உண்டு. கவனம், டென்சன் குறைக்கவும். எதிர்மறையான எண்ணங்களை விட்டு விலகவும். குரு 10ம் இடத்தில் இருந்து லாபாஸ்தனத்தில் நுழைவதால் இதுவரை இருந்து வந்த வேலைசுமை குறையும். பணவரவு அதிகரிக்கும். பிரபலங்களின் ஆதரவு கிடைக்கும். வங்கிக்கடன் கிடைக்கப்பெறும் பிள்ளைகளால் மகிழ்சியும், பெருமையும் கூடும் காலமிது. பிள்ளை இல்லாதவர்களுக்கு புத்திரப்பாக்கியம் கிடைக்கும். ஏழரைச்சனியின் ஆதிக்கத்தால் கணவன் மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள் ஈகோ போன்ற பிரச்சனை தொடரும். வீண் சந்தேகம் வேண்டாம். விட்டுக்கொடுத்து செல்வது நல்லது. வியாபாரத்தில் புதிய ஒப்பந்தங்கள் லாபம் தரும், வாடிக்கையாளரின் விருப்பத்திற்கு ஏற்ப வியாபாரத்தை வடிவமைப்பீர்கள். கமிசன் தொழில் லாபம் தரும். வேலையில் சக ஊழியர்களால் சிக்கல்கள் வரலாம். உயர் அதிகாரிகள் ஆதரவாய் இருப்பார்கள். சவாலான வேலைகளை முடிக்க வேண்டி இருக்கும். மாணவர்கள் ஊர் சுற்றுவதை நிறுத்திவிட்டு படிப்பில் கவனம் செலுத்தவும். கலைத்துறையில் உங்கள் திறமைகளை வெளிக்காட்ட நல்ல வாய்ப்புகள் கூடி வரும். அரசியலில் தலைமையின் நம்பிக்கைக்கு பாத்திரமாவீர்கள். பெண்களுக்கு காதல் பிரச்சனைகள் தீரும். மகிழ்ச்சி பிறக்கும், போராடி வெல்லும் மாதமிது.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 19 மதியம் 1.45 முதல் 21ம் தேதி மாலை 5 மணிவரை மற்றும் செப்டம்பர் 15ம் தேதி இரவு 9.30 முதல் 16 வரை.

பரிகாரம்:துர்க்கை வழிபாடு துயரம் தீர்க்கும்.

மகரம் : எதார்த்தமாக பேசினாலும் உங்களைப்பற்றிய ரகசியங்களை யாரிடமும் சொல்லிவிடாத மகர இராசியினருக்கு இந்த மாதம் சூரியன் 8 அமர்ந்து கொண்டு இருப்பதால், அரசு காரியங்களில் அனுகூலம் உண்டு. அக்கம் பக்கத்தினர் ஆதரவாக இருப்பார்கள். திடீர் பயணங்கள் ஏற்படும். சுக்கிரன் 6இல் பயணிப்பதால் செலவுகள் கூடும், பணத்தட்டுப்பாடு அதிகரிக்கும். வீண் அலைச்சல் இருக்கும். 21ம் தேதிக்கு பிறகு 7ம் வீட்டிற்கு வர இருப்பதால் குடும்பத்தில் இருந்து வந்த சச்சரவுகள் நீங்கும். புதனும் செப்டம்பர் 2முதல் எட்டில் அமர்வதால் வீண் அலைச்சல், திடீர் பயணங்கள், அதன் மூலம் செலவுகள் கூடும். செவ்வாய் 28ம் தேதி எட்டில் மறைவதால் சகோதர வகையில் கருத்து மோதல்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு. இரவு நேரத்து பயன்களில் எச்சரிக்கை தேவை. செப்டம்பர் 1 வரை குரு 9ம் வீட்டில் தொடர்வதால் உங்களுக்கு புகழும் செல்வாக்கும் இருக்கும். செப்டம்பர் 2 முதல் 10ம் வீட்டுக்கு செல்வதால் வேலைச்சுமை அதிகரிக்கும். சனி சாதகமாக இருப்பதால் சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை திரும்ப பெறுவீர்கள். திடீர் பணவரவு உண்டு, விசேசங்களில் கௌரவம் கிடைக்கும். அதிர்ஷ்ட யோகம் உண்டு. வியாபாரத்தில் லாபத்தை அதிகரிக்க திட்டம் தீட்டுவீர்கள். வேலையாட்கள் பங்குதாரர்களின் குறைகளை நீக்குவீர்கள். வாடிக்கையாளரின் விருப்பம் அறிந்து செயல்படுவீர்கள். கம்ப்யூட்டர், செல்போன் போன்ற தொழில்கள் சிறப்படையும், ஷேர் மார்கெட் லாபம் தரும். கூட்டுத்தொழில் லாபகரமாக நடக்கும். உத்தியோகத்தில் செல்வாக்கு மேலோங்கும். மறுக்கப்பட்ட உரிமைகள் மேலோங்கும். சக ஊழியர்கள் மத்தியில் மதிக்கப்படுவீர்கள். அயல்நாட்டு வேலை கிடைக்கும். மாணவர்கள், விருப்பம் நிறைவேறும். பெற்றோர்கள் விரும்பியதை வாங்கித்தருவார்கள். மதிப்பெண் அதிகரிக்கும். கலைத்துறையில் உங்கள் அறிவுத்திறனால் முன்னேற்றம் ஏற்படும். அரசியலில் தொகுதி மக்களிடம் நல்லப்பெயர் எடுக்க தொகுதிக்குள் நடக்கும் நல்லது கெட்டதுகளில் கலந்துக்கொள்ள வேண்டும். பெண்களுக்கு உயர்கல்வியில் ஆர்வம் பிறக்கும், தகுதிக்கேற்ப வேலை கிடைக்கும்.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 21ம் தேதி மாலை 5 மணி முதல் 23ம் தேதி இரவு 10.30 வரை

பரிகாரம்: காளி வழிபாடு கவலைகள் தீர்க்கும்.

கும்பம் : எல்லோருக்கும் நல்லவர்களாய் வாழ விரும்பும் கும்ப ராசியினருக்கு இந்த மாதம் சூரியன் ஏழாம் வீட்டில் இருப்பதால் அரசு சம்பந்தமான விசயங்களில் வெற்றிக்கிட்டும். உயர்பதவியில் இருப்பவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும். சுக்கிரன் ஐந்தாம் வீட்டில் இருப்பதால் கணவன்மனைவி ஒற்றுமை வலுப்படும். 21ம் தேதி முதல் சுக்கிரன் ஆறில் மறைவதால் சிறு சிறு விபத்துகளும், எலக்ட்ரானிக் பொருட்களால் செலவுகளும் ஏற்படும். புதன் வரும் 2ம் தேதிவரையில் ஆறாம் வீட்டில் அமர்ந்து இருப்பதால் உறவுகள் மத்தியில் செல்வாக்கு குறையும். அதன் பிறகு இழந்த செல்வாக்கு திரும்பக்கிடைக்கும். உறவுகள் உறுதுணையாக இருப்பார்கள். வெளிநாடு செல்ல விசா கிடைக்கும். உறவுகள் நண்பர்கள் வீட்டு விசெசங்களை முன்னின்று நடத்துவீர்கள். செவ்வாய் வலுப்பெற்று அமைந்து இருப்பதால் தைரியமும் தன்னமிபிகையும் கூடும். இது வரையில் அஷ்டமத்தில் இருந்து இன்னல்களையும், செலவுகளையும் அளித்து வந்த குரு பகவான் இனி 9 இல் அமர இருப்பதால் பிள்ளைகள் வகையில் இருந்து வந்த பிரச்சனைகள் தீரும். வேலைத்தேடும் மகன் மற்றும் மகளுக்கு வேலைக்கிடைக்கும். திருமணம் நிச்சயமாக கூடும். அலைச்சல் குறைந்து நல்லது நடக்கும். ராசி நாதன் சனி வலுபெற்று நல்ல நிலையில் இருப்பதால் பிரச்சனைகள் தீரும். இழந்த செல்வாக்கு திரும்ப பெரும். வியாபாரத்தில்  முதலீடுகளை செய்வதில் கவனம் தேவை. பங்குதாரர்களிடம் கவனம் தேவை. வேலையாட்களை நம்ப வேண்டாம். பழைய வாடிக்கையாளர்களை தக்க வைத்துக்கொள்ளவும். லாபம் கணிசமாக உயரும், வேலை பார்ப்பவர்கள் சக ஊழியர்களிடம் அமைதியை கடைப்பிடிக்கவும். உயர் அதிகாரிகளின் கண்டிப்புக்கு ஆளாவீர்கள். தேவையின்று விடுப்பு எடுப்பதை தவிர்க்கவும். மாணவர்கள் தினசரி பாடங்களை அன்றே படியுங்கள். கடுமையாக உழைக்க வேண்டுய் இருக்கும். கலைத்துறையில் சம்பளம் பெறுவதற்கே கடினமாக போராட வேண்டி இருக்கும். அரசியலில் தலைமைக்கு நெருக்கம் அதிகரிக்கும். பெண்கள் பெற்றோரின் சொல் படி நடந்துக்கொள்வது நன்மை தரும். பொறுமை அவசியம் தேவை.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 23ம் தேதி இரவு10.30 மணிமுதல் 26ம் தேதி காலை06.00 மணி வரை

பரிகாரம்: விநாயகர் வழிபாடு வினைகள் தீர்க்கும்..

மீனம் : கல்வியறிவும், அனுபவ அறிவும் சேரப்பெற்று வெற்றிசூச்சமத்தை உணர்ந்த உங்களுக்கு இந்த மாதம் சூரியன் ஆறாம் ஸ்தானத்தில் வலுபெற்று அமர்ந்து இருப்பதால் உங்கள் புகழ் செல்வாக்கு கூடும். ஐந்தாமிடத்தில் செவ்வாய் அமர்ந்து இருப்பதால் இருந்து வந்த விரக்தி களைப்பு சோர்வு யாவும் 28ம் தேதி முதல் நீங்கி மனநிம்மதி அளிக்கும். புதன் சாதகமாக இருப்பதால் புதிய எண்ணங்கள் தோன்றும், செப்டம்பர் 2 முதல் 6 ம் வீட்டிற்கு செல்வதால் நோய்கள் ஏற்படாமல் காத்துக்கொள்ளவும. செப்டம்பர் 2 வரை 7ல் நிற்கும் குரு தேவன் செல்வாக்கை கொடுப்பார். அவர் அதன் பிறகு 8ம் வீட்டிற்கு செல்வதால் வேலைசுமை அதிகரிக்கும். ஓயாது உழைக்க வேண்டி இருக்கும். அலைச்சல் இருக்கும். தாயாரின் உடல் நலனில் அக்கரை தேவை. அரசுக்கு செலுத்த வேண்டிய வரி வகைகளை சரியாக கட்டி முடிக்கவும். வாகன இன்சூரன்ஸ் சரியாக காட்டவும். சனிபகவான் 9ம் வீட்டிலேயே தொடர்வதால் எதையும் சமாளிக்கும் தைரியம் வரும் . மாற்று , மதத்தினர் உதவியாக இருப்பார்கள். 5ம் இடத்து ராகுவால் உறக்கம் கெடும். 11ம் இடத்தில் கேது நிற்பதால் பயன்கள் அனுகூலமாக முடியும், ஆன்மீக பயணகங்களும் அமையபெறலாம். வியாபாரத்தில் லாபம் இருக்கும். பங்கு தாரர்களிடம் பேசும் போது எச்சரிக்கையாக பேசவும். அனுபவசாலியன வேலையாட்கள் வந்து சேருவார்கள். புதிய ஏஜென்சிகள் எடுக்கும் சூழல் உருவாகும். வேலையாட்களுக்கு முன் பணம் கொடுக்க வேண்டாம். வேலையில் உங்களது பணியை போராடி முடிக்க வேண்டி வரும். சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு கூடும். உயர் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கப்பெறும். மாணவர்கள் நியாபக மறதியில் இருந்து விடுபட படித்ததை எழுதிப்பார்க்கவும். கலைத்துறையில் மூத்தகலைஞர்கள் ஆதரவாக இருப்பார்கள். அரசியலில் மதிப்பும் மரியாதையும் கூடும். பெண்களுக்கு முன்னேற்றமான காலமிது உங்களின் புதிய திட்டங்களையும் பெற்றோர் பாராட்டுவார்கள். உணர்ச்சிக்கு அடிமையாகாமல் அறிவார்ந்து சிந்திக்க வேண்டிய மாதமிது.

சந்திராஷ்டமம்: ஆகஸ்ட் 26ம் தேதி காலை 6 மணிமுதல் 28ம் தேதி மாலை 4 மணிவரை.

பரிகாரம்: நரசிம்மர் தரிசனம் நன்மை தரும்

 

வாக்கியப்பஞ்சாங்க அடிப்படையில் ஆடி மாத பலனை கணித்தவர்

ஜோதிட அமுதம் S. ஜோதிமணிகாந்தி. D.Astro.,

ஓம் ஜோதிடம். கரூர்.

முந்தைய ராசிபலன்களை வாசிக்க இங்கே சொடுக்கவும்: http://kalakkals.com/avanai-month-astro-part-1/

2813total visits.