தினப்பலன் 21/05/2019

0
0

☸மேஷம்:-

உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். நட்பு வட்டம் விரிவடையும். பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பீர்கள். அலுவலகத்தில் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். எதிர்பார்ப்புகள் நிறைவேறும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : மயில் நீலம்

அசுவினி : கருத்து வேறுபாடுகள் நீங்கும்.
பரணி : தீர்வு கிடைக்கும்.
கிருத்திகை : மதிப்பு அதிகரிக்கும்.

☸ரிஷபம்:-

தடைபட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். எதிர்கால எண்ணங்கள் சார்ந்த பணிகள் நிறைவேறும். உடனிருப்பவர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் கிடைக்க காலதாமதமாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

கிருத்திகை : எண்ணங்கள் நிறைவேறும்.
ரோகிணி : நிதானத்துடன் செயல்படவும்.
மிருகசீரிடம் : விரயம் உண்டாகும்.

☸மிதுனம் :-

வர்த்தகம் தொடர்பான செயல்பாடுகளில் எண்ணிய ஆதாயம் கிடைக்கும். வியாபாரத்தில் உறவினர்களின் மூலம் மாற்றமான சூழல் உண்டாகும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் தகுந்த வழிகாட்டுதல்கள் கிடைக்கும். குடும்பத்தில் கலகலப்பான சூழல் உருவாகும். பணவரவு திருப்தி தரும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பிங்க் நிறம்

மிருகசீரிடம் : ஆதாயம் கிடைக்கும்.
திருவாதிரை : மாற்றமான நாள்.
புனர்பூசம் : கலகலப்பான நாள்.

☸கடகம்:-

நெருக்கமானவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர்கள். செய்யும் செயல்களில் பதற்றமின்றி நிதானத்துடன் செயல்படவும். குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். சின்ன சின்ன வேலைகளையும் அலைந்து முடிக்க வேண்டிய சூழல் அமையும். அநாவசியமாக யாருக்காகவும் உறுதி அளிக்க வேண்டாம்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

புனர்பூசம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
பூசம் : நிதானத்துடன் செயல்படவும்.
ஆயில்யம் : அனுசரித்துச் செல்லவும்.

☸சிம்மம்:-

பிரியமானவர்களின் சந்திப்பு மகிழ்ச்சியை அளிக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பாராத பயணமும், தனலாபமும் உண்டாகும். மனதில் புதிய லட்சியங்கள் பிறக்கும். தொழில் சம்பந்தமான சில நுணுக்கங்களை கற்றுக் கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மகம் : மகிழ்ச்சியான நாள்.
பூரம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
உத்திரம் : இலாபம் உண்டாகும்.

☸கன்னி:-

சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் புதிய வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். உறவினர்கள் மற்றும் நண்பர்களால் ஆதாயம் கிடைக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து சுபச் செய்திகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

உத்திரம் : ஆசைகள் பூர்த்தியாகும்.
அஸ்தம் : புதிய நபர்களின் அறிமுகம் கிடைக்கும்.
சித்திரை : சுபச் செய்திகள் கிடைக்கும்.

☸துலாம்:-

வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கான வாய்ப்புகள் அமையும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளிடமிருந்து எதிர்பார்த்த ஆதரவான சூழல் உண்டாகும். பழைய கடன்களை தீர்க்க முயற்சி செய்வீர்கள். திருமணப் பேச்சு வார்த்தைகள் சாதகமாகும். எதிலும் தன்னம்பிக்கையுடன் செயல்படுவது நன்மை அளிக்கும். கருத்துக்களை பரிமாறுவதன் மூலம் தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

சித்திரை : வாய்ப்புகள் அமையும்.
சுவாதி : முயற்சிகள் ஈடேறும்.
விசாகம் : தெளிவு பிறக்கும்.

☸விருச்சகம்:-

பிள்ளைகளின் தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள் மற்றும் நண்பர்களின் மத்தியில் உங்களின் மதிப்பு உயரும். சுயதொழில் சார்ந்த முயற்சிகளில் எதிர்பார்த்த இலாபம் கிடைக்கும். சொந்த ஊர் பயணங்களால் மகிழ்ச்சியான தருணங்கள் உண்டாகும். உத்தியோகத்தில் சவாலான வேலைகளையும் சாதாரணமாக செய்து முடிப்பீர்கள்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

விசாகம் : தனவரவு கிடைக்கும்.
அனுஷம் : மதிப்பு உயரும்.
கேட்டை : பயணங்களால் மகிழ்ச்சி உண்டாகும்.

☸தனுசு:-

ஆபரணச்சேர்க்கை உண்டாகும். திடீர் யோகத்தால் எதிர்பாராத பலன்கள் கிடைக்கும். பூமியை விருத்தி செய்வதற்கான சாதகமான சூழல் அமையும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். திருமண வரன் தேடுபவர்களுக்கு சுபச் செய்திகள் கிடைக்கும். சொந்த பந்தங்களின் வருகையால் மகிழ்ச்சி உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

மூலம் : பூமி விருத்தி உண்டாகும்.
பூராடம் : ஆசிகள் கிடைக்கும்.
உத்திராடம் : மகிழ்ச்சியான நாள்.

☸மகரம்:-

வெளிவட்டாரத்தில் மேன்மையான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் வேலையாட்களிடம் நிதானத்துடன் செயல்படவும். உத்தியோகத்தில் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். பொறுப்புகள் சார்ந்த அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவோணம் : மேன்மையான நாள்.
அவிட்டம் : நிதானம் வேண்டும்.

☸கும்பம்:-
எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் சாதகமாக இருப்பார்கள். அதிகாரப் பதவியில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும். மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

அவிட்டம் : எண்ணங்கள் மேலோங்கும்.
சதயம் : புதிய நட்பு கிடைக்கும்.
பூரட்டாதி : திறமைகள் வெளிப்படும்.

☸மீனம்:-

வியாபாரத்தில் புதுவிதமான மாற்றமான சூழல் அமையும். உத்தியோகத்தில் மேலதிகாரிகளிடம் உங்களின் மதிப்பு அதிகரிக்கும். எதையும் சமாளிக்கும் சாமர்த்தியம் பிறக்கும். பெற்றோரின் ஆதரவு கிடைக்கும். வெளியூர் தொடர்பான பயணங்களில் இருந்த தடைகள் அகலும். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் :4
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

பூரட்டாதி : மாற்றம் பிறக்கும்.
உத்திரட்டாதி : மதிப்பு அதிகரிக்கும்.
ரேவதி : தடைகள் அகலும்.

23532total visits,1visits today