தினப்பலன் 5/11/2018

0
27

☸மேஷம் :-

புதிய வீடு, மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் உண்டாகும். கண்களில் பார்வை சம்பந்தமாக ஏற்பட்ட பிரச்சனைகள் குறையும். வாதத்திறமையால் கீர்த்தி உண்டாகும். போட்டிகளில் எண்ணிய வெற்றி கிடைக்கும். பழைய கடன்களை அடைப்பதற்கான தனவரவு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

அசுவினி : இலாபம் உண்டாகும்.
பரணி : கீர்த்தி உண்டாகும்.
கிருத்திகை : தனவரவு கிடைக்கும்.

☸ரிஷபம் :-

உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் சாதகமான சூழல் உண்டாகும். தொழிலில் புதிய நபர்களால் சில விரயங்கள் நேரிடலாம். ஆன்மீக எண்ணங்கள் அதிகரிக்கும். செயல்பாடுகளில் மந்தத்தன்மை உண்டாகும். புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

கிருத்திகை : மேன்மையான நாள்.
ரோகிணி : சுபவிரயம் உண்டாகும்.
மிருகசீரிடம் : சோர்வு நீங்கும்.

☸மிதுனம் :-

தொழிலில் புதிய நபர்களின் வருகையால் எண்ணிய இலாபம் கிடைக்கும். உயரமான இடங்களுக்கு பயணம் செல்லக்கூடிய வாய்ப்புகள் உண்டாகும். சாதுர்யமான பேச்சுகளால் இன்னல்களை களைவீர்கள். வாகனங்களை பராமரிப்பதற்கான செலவுகள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்

மிருகசீரிடம் : புதிய நபரின் மூலம் இலாபம் கிடைக்கும்.
திருவாதிரை : பேச்சுகளால் அனுகூலம் உண்டாகும்.
புனர்பூசம் : பராமரிப்பு செலவுகள் உண்டாகும்.

☸கடகம் :-

இளைய உடன்பிறப்புகளின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். நிர்வாகம் சம்பந்தமான புதிய முடிவுகளில் சாதகமான பலன் கிடைக்கும். செய்தொழிலில் எதிர்பார்த்த இலாபம் உண்டாகும். மனக்கவலைகள் அதிகரிக்கும். பதற்றமின்றி அமைதியுடன் செயல்படவும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

புனர்பூசம் : உடல்நலத்தில் கவனம் வேண்டும்.
பூசம் : சாதகமான நாள்.
ஆயில்யம் : அமைதி வேண்டும்.

☸சிம்மம் :-

உடன் பணிபுரியும் ஊழியர்களிடம் அமைதி காக்கவும். புதிய வாடிக்கையாளர்களிடம் பொறுமையுடன் செயல்படவும். பழைய கடன்களால் மன வருத்தங்கள் உண்டாகும். விருந்துகளில் பங்கேற்று மகிழ்வீர்கள். திருமணம் சம்பந்தமானப் பேச்சுவார்த்தைகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : அடர் சிவப்பு

மகம் : கனிவுடன் செயல்படவும்.
பூரம் : உதவிகளில் கவனம் வேண்டும்.
உத்திரம் : சுபமுடிவுகள் கிடைக்கும்.

☸கன்னி :-

ஆடை மற்றும் ஆபரணங்கள் வாங்கும் வாய்ப்புகள் உண்டாகும். புதிய வாடிக்கையாளர்களின் அறிமுகத்தால் தொழிலில் இலாபம் கிடைக்கும். சங்கீதக் கலைஞர்களுக்கு சாதகமான வாய்ப்புகள் உண்டாகும். பணியில் புதிய நபர்களை நியமிப்பீர்கள். சபைகளில் ஆதரவு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திரம் : பொருட்சேர்க்கை உண்டாகும்.
அஸ்தம் : புதிய வாய்ப்புகள் கிடைக்கும்.
சித்திரை : ஆதரவு அதிகரிக்கும்.

☸துலாம் :-

அரசாங்க அதிகாரிகளால் எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உறவினர்களையும், நண்பர்களையும் பற்றி புரிந்து கொள்வீர்கள். ஆன்மீகம் சம்பந்தமான பயணங்களால் மன நிம்மதி கிடைக்கும். மேலதிகாரிகளால் சாதகமற்ற நிலை உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : கிளி பச்சை நிறம்

சித்திரை : புரிதல் உண்டாகும்.
சுவாதி : பொறுமை வேண்டும்.
விசாகம் : எண்ணங்கள் மேலோங்கும்.

☸விருச்சகம் :-

பொதுச் சேவையில் ஈடுபடுபவர்களுக்கு கீர்த்தி உண்டாகும். தந்தைவழி உறவுகளின் ஆதரவு கிடைக்கும். மூத்த உடன்பிறப்புகளால் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். போட்டிகளில் எதிர்பார்த்த முடிவு கிடைக்கும். பயணங்களால் சேமிப்பு உயரும். உங்களின் திறமைகளின் மூலம் இலாபம் அடைவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்

விசாகம் : கீர்த்தி உண்டாகும்.
அனுஷம் : மகிழ்ச்சியான நாள்.
கேட்டை : சேமிப்பு உயரும்.

☸தனுசு :-

கவனக்குறைவால் பிறரின் அவச்சொல்லிற்கு ஆளாக நேரிடும். எதிர்பாலின மக்களால் ஆதாயம் உண்டாகும். விலை உயர்ந்த பொருட்களை கையாளும் போது கவனம் வேண்டும். கலைஞர்களுக்கு சாதகமான சூழல் உண்டாகும். தொழில் சார்ந்த அலைச்சல்கள் அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மூலம் : செயல்களில் கவனம் வேண்டும்.
பூராடம் : நன்மை உண்டாகும்.
உத்திராடம் : அலைச்சல்கள் அதிகரிக்கும்.

☸மகரம் :-

எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். வர்த்தகம் சம்பந்தமான பணிகளால் அனுகூலம் உண்டாகும். நண்பர்களின் உதவியால் தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். கலை சார்ந்த கல்வி பயிலும் மாணவர்களின் புத்திக் கூர்மை வெளிப்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

உத்திராடம் : எண்ணங்கள் ஈடேறும்.
திருவோணம் : அனுகூலமான நாள்.
அவிட்டம் : அபிவிருத்தி உண்டாகும்.

☸கும்பம் :-

அஞ்ஞான எண்ணங்கள் மேலோங்கும். எதிர்பாராத சுபச் செய்திகளால் மகிழ்ச்சி உண்டாகும். குறுகிய தூர பயணங்களால் சாதகமான பலன்கள் உண்டாகும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். புதிய முயற்சிகளால் அலைச்சல்கள் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

அவிட்டம் : இன்பமான நாள்.
சதயம் : காரியசித்தி உண்டாகும்.
பூரட்டாதி : அலைச்சல்கள் உண்டாகும்.

☸மீனம் :-

பூர்வீக சொத்துக்கள் சம்பந்தமாக சொந்த ஊருக்கான பயணம் மேற்கொள்வீர்கள். பணிகளில் மேலதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். தொழில் சம்பந்தமான பண உதவிகள் கிடைக்கும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

பூரட்டாதி : பயணங்கள் சாதகமாகும்.
உத்திரட்டாதி : மாற்றமான நாள்.
ரேவதி : உதவிகள் கிடைக்கும்.

– Astro பகீரதன்

525total visits,2visits today