பொய்க் கண்ணாடிகள் – 8

0
50

அழகான ஆண்கள் உலகம்…

“ஆண்கள் உலகையே என் அப்பாவின் வழியால் நான் பெருமையாகக் கருதுகிறேன்” என்று பல பெண்கள் பெருமைப்பட கூற பார்த்திருப்போம்.

நான் என் அப்பாவின் செல்லம் , இளவரசி, மகாராணி, குட்டித்தேவதை என ஒவ்வொரு பெண்ணும் மகழ்ச்சியுடன் கூற கேட்டிருப்போம்.

உண்மையில் பெருமைக்கொள்ளபட வேண்டிய ஓன்று தான்.

மகளுக்காக  என்று பிறந்த முதலே தன் தலையாய கடமையை அனைத்தையும் ஏற்று அவர்களை தாங்கு தாங்கென்று தாங்குவார்கள் சில அப்பாக்கள். வீட்டின் பர்னீச்சர் சாய்ஸ் முதல் ஸ்கீரி்ன் கலர் சாய்ஸ் வரை மகளின் விருப்பமாக வைப்பாா்.

தனக்கு பிடித்த உணவுகளையும் ஒருக் கட்டத்தில் துறந்து மகளுக்குப் பிடித்த உணவைச் சமைக்க சொல்லுவார்..

”ஏ, அவளுக்கு என்ன பிடிக்குதோ? அத பண்ணுமா” என்று தன் மனைவிக்கு அன்பு கட்டளைகளும் பிறப்பிப்பார்.

இருச்சக்கர வண்டியில் தனது மகளை பள்ளிக்கு கூட்டி செல்வதில் இருந்து அனைத்து ஆர்வத்தையும் காட்டுவார்.

“தந்தை அணைப்புச் சுகம் பெற்று டாட்டா காட்டி பள்ளிக்கு செல்லும் அனுபவம் எல்லாம் பெறுவது எத்தனை சுகம்?” ஏதோ நம்பிக்கையான கைகளில் தான் தவழ்கிறோம் என்ற சிந்தனையே அத்தனை பாதுகாப்பானது.

இப்பிடி அப்பாக்கள் கிடைக்கப் பெற்ற  மகள்கள் உண்மையில் ஆண்கள் உலகத்தை நேசிக்க தான் செய்கிறார்கள்.

என் தந்தையை நான் வெறுக்கிறேன். என் தந்தையினால் இந்த ஆண்கள் உலகத்தையே நான் வெறுக்கிறேன். அவர் எங்களை பார்த்துக் கொள்வதில்லை . அம்மாவை அடிக்கிறார். ஏன் நாங்கள் பிறந்தோம் என்று பல நாள் பல இரவுகள் வேதனைப்படுகிறோம்.இப்படி பொறுப்பற்ற அப்பாக்களால் அவதிப்படும் மகள்கள். நிச்சயம் இவர்கள் ஆண்கள் உலகின் மேல் நம்பிக்கையின்மையும் சந்தேகமும் பயமும் வெறுப்பும் கொண்டே வளர்கிறார்கள்.

பல ஆசைகளை மனதில் வைத்து அவைகளை சவக்குழியில் தள்ளுக்கிறார்கள். குடித்து விட்டு அவர் ரோட்டில் விழுந்து கிடக்கும் காட்சி கண்டு கூசி குறுகிறார்கள். இரு சக்கர வாகனத்தில் தனது தந்தையுடன் பயணிக்கும் குழந்தைகளைக் கண்டு ஒரு சார ஏக்கமும் துக்கமும் கொள்கின்றனர். அப்போது அவர்கள் கண்களில் துளிர்ப்பது ஒரு துளி கண்ணீரே. நிச்சயம் பொறுப்பற்ற அப்பாக்கள் தனது மகளுக்கு அளிப்பது கண்ணீர் பரிசுகளே.தந்தையுடன் மகிழ்வுடன் இந்த உலகை எதி்ர்க்கொள்ளும் ஒரு பிரிவுக்குழந்தைகள், இருந்தும் தந்தையின் அன்பின்மையால் துயர்கொண்டும் வாழும் ஒரு பிரிவுக் குழந்தைகள்,

தந்தை தாய் யாரென்றே தெரியாமல் காப்பகத்தில் ஏதோ எதிர்காலம் நோக்கி தன்னை வளர்த்து வாழும் குழந்தைகள்.

இப்படி, நம் மூலம் இந்த உலகில் பூக்கும் பச்சிளங்களுக்கு பல வேறுபட்ட உலகங்களை நாம் தான்  அறிமுகப்படுத்துகின்றோம்.

எந்த உலகம் என்பதும் நம்மைப் பொறுத்தே அவர்களுக்கு தீர்மானிக்கப்படுகிறது.

அப்போது நல்ல மாற்றம் நம் சந்ததிகளுக்காக நம்மிடமே முதலில் மாற வேண்டும். அது ஒழுக்கமான வாழ்க்கையாக முதலில் கட்டமைக்கப்பட வேண்டும். அதில் ஒவ்வொருவரும் தன் கடமைகள் பொறுப்புகள் உணர்ந்து நடக்க வேண்டும்.

ஒருப் பிடி கவளம், அது தன் தந்தையால் தங்க ஸ்பூனில் ஊட்டப்படுகிறதோ? அல்லது தன் தந்தையின் கைகளினாலேயே ஊட்டப்படுகிறதோ? ஆனால் ஒவ்வொரு பெண்குழந்தைக்கும் தன் தந்தையின் மடியும் அவர் கையால் ஒரு பிடி சோறும் வேண்டும்.

ஆண்கள் உலகை நம்பிக்கையுடன் ஒரு பெண் எதி்ர்க்கொள்ள ஒரு பெண்ணால் மட்டும் வழிகாட்டுதல் அல்ல; அது ஒரு ஆணின் தன் பொறுப்புமிக்க செயல்களாலே முடியும் .

~சார்வி

#ரோல் மாடல்கள் அப்பாக்கள் பாஸ் தான்.

முந்தைய பகுதியை வாசிக்க இங்கே சொடுக்கவும் :

பொய்க் கண்ணாடிகள் – பாகம்-7

2435total visits,2visits today