ஐசியுவும் அழகிய தேவதைகளும்

0
748
மனதில் குடியேறிய மச்சினிகள் எண்ணிக்கை தாங்காமல் இதய ஆர்ட்டரிகள் சற்றே பலகீனமுற்று, சிகிட்சை பெற்று ஒரு நாள் ஐசியுவில் தங்க நேர்ந்தது.
என்னதான் ஆஞ்சநேய பக்தனாய் இருந்து அஞ்சா நெஞ்சனாய் வாழ்ந்தாலும், ஆஞ்சியோப்ளாஸ்டி என்று வந்தால், வடிவேல் பாணியில்..வேணாம்..வலிக்குது..அழுதுவேன்.. என புலம்ப வைத்து ஒரு வழியாய் ஸ்ட்ரெக்சரில் வைத்து ஐசியுவில் உள்நுழையும் வேலையில் பூங்கொத்துக்களாய் மல்லு நர்ஸ்கள். பெட்டில் மாற்றியப்போது சுற்றி நின்ற நர்ஸ்கள் சுண்டி இழுத்தனர். தேவதைகளை போன்ற நர்ஸ்களை கண்டு துள்ளி எழ முடியா கையறு நிலையில் ‘கடவுள் இருக்காண்டா கொமாரு’ என மனதில் நினைத்த மாத்திரத்தில்…
இருப்பதிலேயே சுமாரான நர்ஸ் முன் வந்து தன் பெயரை சொல்லி அறிமுகபடுத்தி, நான் தான் உங்கள கவனிச்சுக்க போறேன்னு சொன்னார். நாம் சைக்கிளில் போகும் போது, நம் விதி நமக்கு முன் பைக்கில் போகும் என முன்னரே படித்திருந்த நான் அந்த அதிர்ச்சியை ஜீரணித்து கொண்டேன்.  தயக்கமே இல்லாமல் சிஸ்டர் என அழைத்து மன உளச்சலை குறைத்து கொண்டு அவர் கொடுத்த ஒன்பது மாத்திரையையும் ஒரே வாயில் போட்டு முழுங்கி இம்முறை  நான் அவருக்கு அதிர்ச்சியளித்தேன்.
நான் மாத்திரைகள் முழுங்கிய லாவகத்தை கண்டு நான் அந்த ஹாஸ்பிடலுக்கு ரெகுலர் கஸ்டமர் என கண்டுகொண்டு , என் உடல் நலம் விசாரித்தார். ஆஞ்சியோ எல்லாம் எனக்கு அல்வா சாப்பிடுகிற மாதிரி என கூறிக்கொண்டிருக்கும் போதே, மூக்கில் ஆக்ஸிஜன் ட்யுபை திணித்தார். மனக்கண்ணில் என் மாமியார் பால் கறக்கும் மகாலட்சுமி மாட்டின் மூங்கணாங்கயிறு நினைவுக்கு வர..
இது கண்டிப்பா வேணுமா சிஸ்டர் என்றேன்.  நோ..நோ.. யு ஹேவ் செஸ்ட் பெய்ன்..யு ஷுட் வியர் இட் ஃபார் சம் டைம் என்று பதிலளித்தார். பர்சனாலிட்டி முற்றிலும் குட்டிச்சுவரான நிலையில் சுற்றி நோட்டம் விட்டேன்.
சுற்றிலும் என்ன என்னவோ மெஷின்கள் உடம்பெங்கும் ஒயர்கள், ஒரு ஹாலிவுட் பட செட்டப்பில் ஐசியுவை கண்ட ஒரு வினாடி, நம்மள வச்சு செய்யபோறானுங்க போல… நினைத்த மாத்திரத்தில் டூட்டி டாக்டர் வந்து நின்றார். கை தொட்டு, அமுக்கி, பிதுக்கி, பிராண்டி பார்த்து விட்டு வலிக்குதா என்றார். இவ்ளொ பண்ணா வலிக்காதா டாக்டர் என கேட்க வாய் எடுத்த ஷணத்தில் வாயில் ஒரு தர்மாமீட்டரை சொருகினார். ஃபீவர் சுத்தமா இல்லை என சந்தோஷபட்டுக்கொண்டார். நல்லா தூங்குங்க அப்றம் வந்து பார்க்கிறேன் என கூறி விட்டு சென்று விட்டார்.
மேற்படி சிஸ்டர் காதுக்குள் என்னத்தையோ விட்டு மெஸர் பண்ணிக்கொண்டார்.. காது குடைவது போல் சுகமாக இருந்ததால் இன்னொரு காதையும் காண்பித்த வேலையில், இல்லை இல்லை ஒரு காது மதி..என ஏமாற்றிவிட்டார். திரையில் ஓடிய நம்பர்களை ஒரு வெள்ளைப்பேப்பரில் கிட்டத்தட்ட 15 நிமிடம் எழுதினார். ஏன் சிஸ்டர்..இவ்ளொ எழுதுறதுகுக்கு பேசாம மெஷின்லேருந்து ஒரு பிரிண்ட் அவுட் எடுக்கலாமே என கேட்டதற்கு, சிக்கனமாய் ஒரு புன்னகைத்து விட்டு அகன்றார். அந்த புன்னகை ‘ எனக்கு தெரியும், நீ முடிக்கொண்டு படு’ என்றதாய் அர்த்தபடுத்திக்கொண்டு ஆசுவாசபடுத்திக்கொண்ட வேளையில், அதே சிஸ்டர் வந்து நின்று, எண்ட டூட்டி டைம் தீர்ந்தோ, இப்ப வேற ஒரு நர்ஸ் டூட்டிக்கு வரும், என வயிற்றில் பாலை வார்த்தார். 8 மணி டூட்டி முடிந்துவிட்டது போல..
அடுத்த நர்ஸாவது கொஞ்சம் குஜாலாக இருக்க வேண்டி குலதெய்வத்தை பிராத்தித்து கொண்டிருந்த வேளையில், வெந்த புண்ணில் வெடியை வைப்பது போல வந்து நின்றதோ ஒரு Male நர்ஸ்.  அதை கண்ட எனது மனம், பீஸ் இல்லா பிரியாணியை கண்டதற்க்கு இணையான துண்பம் அடைந்தது. இந்த வருட பலன்களில் தடுக்கி விழுந்தாலும் பிகர்ஸ் மேல் விழுவேன் என எழுதிருந்ததை நம்பி வாழ்ந்த எனக்கு வாழ்வில் இருந்த ரவையோண்டு நம்பிக்கையும் தகர்ந்தது. வந்த பிலிப்பைனி மேல் நர்ஸ் சுறு சுறுப்பானவர். அவர் மேல் குறை இல்லை.. ஆண்டவன் பஞ்சர் போட்ட இதயத்தை ஆற்ற ஒரு அடிபொலி பிகர் நர்ஸை அனுப்பாமல் போன ஏமாற்றத்தில் மெர்ஸல் ஆகி மெல்லமாய் உறங்கிப்போனேன்.
விசிட்டிங் ஹவரில் வந்து பார்த்த எனது வீட்டம்மாவிடம், நான் நல்லா இருக்கேன்.. அதுனால யாரையும் பார்க்க வரவேண்டாம் எனக்கூற நினைத்தேன்.
ஏனெனில் இது போல் ஒரு உறவினர் ஐசியுவில் இருந்த போது அது பற்றி தகவல் தெரிவிக்கும் போது, சில கிழவிகள் , அந்த உறவினர் ஐசியுவில் இருக்கிறார் என்று சொல்ல வாய் வராமல், அவரை ஐஸ்ல வச்சிருக்காங்களாம் என கிளப்பி விட…. மற்ற உறவினர்கள் எல்லாம் சோலி முடிந்து விட்டது என்று மாலை வாங்கி வர.. ஒரே களேபரம் ஆனது. ஆகையால் என்னை பார்க்க யாரும் வரவேண்டாம் என சொல்ல முயற்படுகையில் பேசவேண்டாம் என வாயை பொத்தி, என் மௌனத்தை மற்றவர் வந்து பார்க்க சம்மதமாக எடுத்துக்கொண்டார்.
Male நர்ஸோ யாரிடமோ வாட்ஸப்பில் வறுத்துகொண்டே அவ்வப்போது மானிட்டரை பார்த்து குறிப்பெடுத்துக் கொண்டார்.  நைட் என்ன சாப்டுறீங்க என்று கேட்டதற்க்கு, நான் வெஜ் என கூறினாலும் வாய் சப்தம் எழுப்ப மறந்ததால், வெஜ் என குறித்துக்கொண்டு அகன்று விட்டார். ஹாஸ்பிடல் வெஜ் உணவுகளை உண்டு ஏற்கனவே நான் மாடியிலிருந்து குதித்து தற்கொலைக்கு முயன்று இருப்பதால் மெனுவை எப்படியாவது மாற்ற பிரயத்தனம் செய்தேன். அதற்க்கு பலன் அளிக்காமல், ரெண்டு சப்பாத்தி, என்ன காய் என்றே கண்டறிய முடியாத ஒரு சப்ஜி, ஒரு கப் தயிர், ஒரு பச்சை ஆப்பிள் வந்தது.
உப்புமாவை இகழ்ந்ததின் பலன் இது என்று ஒரு சப்பாத்தியை தயிர் தொட்டு தின்று விட்டு. படுத்து உறங்க முற்படுகையில், இயற்கை அழைப்பாய் உச்சா உந்தியழைக்க, கண்டிப்பாய் Toilet செல்ல முடியாது என்று ஒரு யூரினல் கேனை கொண்டுவந்து , இதுல போங்க சார் என கூறி, நான் வேணா ஹெல்ப் பண்ணவா என கேட்டார், வடிவேலுவின் அவனா நீ.. காமெடியை ஆயிரத்துச்சொச்சம் முறை பார்த்ததினால், வேணாம்.. நானே போய்க்கிறேன்.. கொஞ்சம் வெளிய இருங்க ப்ரோ என கூறி.. ஒரு வழியாய் முக்கி முனகி முடித்து விட்டு, மருந்தின் தாக்கத்தில் தூங்கிப்போனேன்….
விடியலில் எனக்கு காத்திருந்தது எனக்கான அதிர்ஷ்டம். முட்டை போண்டாவில் முழு முட்டையை கண்டதற்க்கு இணையாக மனம் குதுகலபட்ட அந்த சம்பவம்…………………....
-கட்டதொர

2469total visits.