கதிர் குறள் – 227

0
88
’என்ன சார்? இவ்ளோ மாத்திரை முழுங்கறிங்க? கலர்கலரா இருக்கு?”

”கடுப்பேத்ததாத நிவாஷ். வயித்து புண்….. அல்சர் மாதிரி. உனக்கு இதெல்லாம் வந்தா தான் புரியும். ஆனா உனக்கு எல்லாம் வராது”.
”ஏன் சார்? என்னாச்சு?”
”அது சரியா நேரத்துக்கு சாப்பிடாம விட்டு இப்படி ஆகிருச்சு. என்ன சம்பாதிச்சு என்ன புண்ணியம்? சொத்து இருக்கவன் நிம்மதியா சாப்பிடுறான். வாழறான். இல்லாதவனும் இருக்கறதை வச்சுகிட்டு சாப்பிடுறான். ரெண்டுக்கும் நடுவுல சம்பாதிக்க ஓடிட்டுருக்க என்னை மாதிரி ஆளுங்க நிலைமைதான் பாவம்.”
ரொம்ப பீல் பண்றீங்களே சார்… டாக்டரை பார்க்கறிங்களா? என்ன சொல்றாங்க?”
”அவர் என்ன? ஒழுங்கா நேரத்துக்கு சாப்பிட சொல்றார். அதை நாம எங்கே முடிவு பண்ண முடியுது? நேத்து கூட பாரு, சரியா லஞ்ச் டைம்ல மீட்டிங் வைக்குறானுங்க.  ஏதோ ஒரு பிரச்சனை வந்துட்டே இருக்குது. நினைச்சாலே வெறுப்பா இருக்கு”
”சார் விடுங்க சார். சரியாகிடும். நான் ஒரு வைத்தியம் சொல்றேன். செஞ்சு பாருங்க.”
”சொல்லு….. அதையும் பார்த்துடறேன்”
”ஒன்னுமில்லை சார். இராத்திரி சாதம் வச்சு, நீர்ல ஊறவச்சு காலைல தயிர்ல கலந்து சாப்பிடுங்க”
”என்னப்பா இது? பழைய சோறு சாப்பிடறதுலாம் வைத்தியமா?”
”சார், உங்களுக்கே தெரியும்? தயிர்ல நல்லது செய்யற பாக்டீரியா நிறைய இருக்கு, அதோட நீர்ல ஊறுன சாதம் வயித்து புண்ணுக்கு ரொம்ப நல்லது. எரிச்சலை சுத்தமா ஓட்டிரும். இதை எனக்கு சொன்னது ஒரு டாக்டர் தான்.”
”சரிப்பா. கட்டாயம் செஞ்சு பார்க்கறேன். தேங்க்ஸ்…!!”
”இன்னொன்னும் சொல்றேன். முடிஞ்சா செஞ்சி பாருங்க.”
”சொல்லுப்பா”
”பசிங்கறது ஒரு வகைல நோய்தான். அது இருக்கறவன் இல்லாதவனெல்லாம் பார்த்து வராது. அது வரப்ப சரியா சாப்பிட ஒரு கொடுப்பினை வேணும். உங்களுக்கே தெரியும்? பசில மட்டும் நாம என்ன செய்யறோம்னு நமக்கே தெரியாது. உடம்போட ஒட்டு மொத்த சிஸ்டத்தையும் டேமேஜ் பண்ணிடும். அது வந்து வாட்டாம இருக்க ஒரு விசயத்தை செய்யனும்.”
”என்ன?”
”இருக்கற சாப்பாட்டை பகிர்ந்துக்கனும்”
”யார் கூட?”
”இல்லாதவங்க கூட…..”
”புரியலை”
”உங்ககிட்ட சாப்பிட வசதி இருக்கு. அதுக்கு வழியில்லாம இருக்கவங்களுக்கு முடிஞ்சப்ப சாப்பாடு வாங்கி தரனும்”.
”எப்ப வாங்கி தரனுமுங்குற?”
”உங்களுக்கு தெளிவா புரிய வைக்க முடியாது. நான் சொல்றதை செய்ங்க. மாசத்துக்கு எத்தனை தடவை சாப்பிட ஓட்டலுக்கு போவீங்க?”
”எப்படியும் குறைஞ்சது…… 10 தடவை”
”அப்படி போறப்பலாம் ஒரு வெரைட்டி ரைஸ் பார்சல் வாங்கிக்கோங்க. ரோட்டுல கண்டிப்பா சாப்பாட்டுக்கு கஷ்டபடறவங்க கண்ல படுவாங்க. அவங்ககிட்ட கொடுத்துருங்க”
”இதை கட்டாயம் பண்ணனுமா?”
”பண்ணிங்கனா பசி வந்து சாப்பிட முடியாம இருக்க கஷ்டம் வரவே வராது.”
”அப்ப கண்டிப்பா செய்யறேன்”
அதிகாரம்:ஈகை குறள் எண்:227
பாத்தூண் மரீஇ யவனைப் பசிஎன்னும்
தீப்பிணி தீண்டல் அரிது
உரை:
தான் பெற்ற உணவைப் பலரோடும் பகுத்து உண்ணும் பழக்கம் உடையவனைப் பசி என்று கூறப்படும் தீய நோய் அணுகுதல் இல்லை. 
       
-கதிர் ராத்

770total visits,2visits today