மாசி மாத ஜோதிட பலன்கள்

0
188
செவ்வாய்

சுக்கிரன்

சூரியன்

கேது

4 புத–கும்பம்

17 செவ்-மேஷம்

21 புத–மீனம்

26குரு–கன்னி

 

புதன் ராகு
சனி குரு

மாசிமாத இராசி பலன் (2017)

வாக்கியபஞ்சாங்க அடிப்படையில் மாசிமாத கிரகநிலை…

மேஷம் : யார் என்ன சொன்னாலும் தன் கடமைமையில் இருந்து பின் வாங்காத மேஷராசிக்காரர்களான உங்களுக்கு இந்த மாதம் செய்தொழில் மிகவும் சிறப்பாக இருக்கும், சூரியனும் கேதுவும் லாப வீட்டில் அமர்ந்து இருப்பதால் புதிய வாடிக்கையாளர்கள் வருவார்கள், லாபம் பெருகும், தொழில் மேம்படுத்தும் எண்ணம் உருவாகும். பழுதான வாகனங்கள் சீராகும் புதிய வாகன சேர்க்கை உண்டு, சுபசெலவுகள் நடைபெறும். திருமண தடை நீங்கும், கணவன் மனைவி ஒற்றுமை வலுப்படும், மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள், நினைத்த காரியங்கள் நடைபெறும், உறவினர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும், புண்ணிய ஸ்தலங்களுக்கு சென்று வரும் எண்ணம் உருவாகும், நீண்டகாலம் கழித்து பால்ய நண்பனை சந்திக்கும் வாய்ப்பு கிட்டும், உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளின் பாராட்டும் நம்பிக்கையும் கிடைக்கப்பெறும், விரும்பிய இடமாற்றம் உண்டாகும், மாத பிற்பகுதியில் செவ்வாய் பலம் பெறுவதால் வீடு மனை சேர்க்கை ஏற்படும். இந்த மாதம் முழுவதும் பணபுழக்கம் உண்டு, மாத முற்பகுதியில் செவ்வாய் மறைவு ஸ்தானத்தில் இருப்பதால் கோபம் அதிகரிக்கும், சகோதர வகையில் செலவுகள் மற்றும் பிரச்சனை ஏற்படும், சொத்துக்கள் வகையில் சிக்கல்கள் ஏற்படவும் வாய்ப்பு உண்டு, உங்களுக்கு மறைமுக எதிர்ப்புகள் ஏற்படும் இவையெல்லாம் மார்ச் 1 முதல் நீங்கி சகோதர ஒற்றுமை வலுப்படும் சிக்கல்கள் தீரும். மார்ச் 10ம் தேதி குரு வக்கிரமாகி 6ல் அமர்வதால் உங்களைப்பற்றி சிலர் வதந்தி பரப்புவார்கள், மருத்துவ செலவுகள் உண்டு, மனசோர்வு ஏற்படும், அஷ்டமத்து சனியால் விரக்தி நிலை அதிகரிக்கும், வாழ்க்கையில் வெறுப்பு ஏற்படும், மாணவர்கள் கவனமுடன் படிக்க வேண்டும், படிப்பில் நாட்டம் குறைக்கும் வெட்டி அரட்டை, செல்போன் போன்றவற்றை தவிர்க்கலாம், பெண்களுக்கு உற்சாகமான மாதமிது, எண்ணியக்காரியம் நிறைவேறும், உயர்கல்வி நேர்முகத்தேர்வு வெற்றி அடைவீர்கள், காதல் நிறைவேறும், விவசாய பொருட்களுக்கு லாபம் கிடைக்கும், அடகு நகைகள் திருப்பக்கூடிய யோகம் உண்டு, கலைஞர்கள் பேரும் புகழும் கிடைக்கப்பெறுவார்கள், படைப்புகள் பாராட்டப்படும், அரசியல்வாதிகளுக்கு தலைமையின் பாராட்டும், புதிய பதவிகளும் கிடைக்கும் நினைத்தது நிறைவேறும், மொத்தத்தில் உங்கள் சமயோசித புத்தியால் வெற்றி கான்பீர்கள்..

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 18ந் தேதி நண்பகல் மணி 12.50 முதல் 19, 20 ஆகிய தேதிகளில் சந்திராஷ்டமம் மனதில்இனம்புரியாத பயம் வந்துபோகும்.

பரிகாரம் : ஆஞ்சநேய வழிபட்டால் வெற்றி பெரும் மாதமிது, பிரதோஷ காலத்தில் நந்தியை 18 முறை சுற்றிவந்து வழிபடவும்.

 

ரிஷபம் : அளவோடு ஆசைப்பட்டு மகிழ்வோடு வாழும் ரிஷப இராசியினருக்கு இந்த மாதம் தொழில் சுமாராக நடைபெறும், சிலர் வியாபார ஸ்தலங்களை இடமாற்றம் செய்யவாய்ப்பு உள்ளது, எலக்ட்ரானிக்ஸ், இரும்பு பிளாஸ்டிக், ஹோட்டல் தொழில்கள் இலாபமாக நடைபெறும், தொழிலில் பங்குதாரர்கள் ஒத்துழைப்பு இருக்கும், வேலையாட்களால் சிறு சிறு பிரச்சனை ஏற்பட வாய்ப்பு உண்டு, சூரியன் பத்தில் அமர்ந்து இருப்பதால், உத்தியோகஸ்தர்க்கு பதவி உயர்வு, சம்பள உயர்வு கிடைக்கும், இதுவரை தொல்லை கொடுத்து வந்த உயர் அதிகரி வேறு இடத்திற்கு மாற்றப்படலாம், உயர் அதிகாரிகளோடு அன்னியோன்யம் அதிகரிக்கும், வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலையும் கிடைக்க வாய்ப்பு உள்ளது. லாப ஸ்தானத்தில் சுக்கிரனும், செவ்வாயும் இணைந்து இருப்பதால் புதிய சொத்து சேர்க்கை உண்டு, பிரபலங்களின் நட்பு கிடைக்கப்பெறும், பெற்றோருக்கு பிடித்த பிள்ளையாக நடந்துக்கொள்வீர்கள், குருவால் மதிப்பு மரியாதையை கூடும், வீட்டில் சுப நிகழ்வுகள் நடைபெற வாய்ப்பு உண்டு, புதன் சாதகமாக இருப்பதால் விலகி சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேருவார்கள்,  மார்ச் 1 வரை குரு 6ல் மறைந்து இருப்பதால், நகை பணம் களவு போக வாய்ப்பு உண்டு, கவனமாக இருக்கவும், கோபம் அதிகரிக்கும், எல்லா பிரச்சனையிலும் மற்றவரை குறை கூறுவதை குறையுங்கள், கூடா நட்பால் பிரச்சனைகள் ஏற்படும், சனியால் தூக்கம் கெடும், கனவு தொல்லைகள் இருக்கும், மாணவர்கள் படிப்பில் கவனம் செலுத்தவும், பெண்களுக்கு அழகு கூடும், காதலில் தெளிவு பிறக்கும், அரசியல்வாதிகளுக்கு வெற்றிகரமான மாதம், விவசாயிகளுக்கு மரம் மூலம் விளையும் பயிர்கள் லாபம் தரும், கலைஞர்களுக்கு இதுவரை வெளிவருவதில் தாமதம் ஏற்பட்ட உங்கள் படைப்புகள் வெளியாவகும், மொத்தத்தில் எதிர்பார்த்திடாத புதிய வாய்ப்புகள் திடீர் திருப்பங்கள் வந்து சேரும் மாதமிது.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 21, 22 மற்றும் 23ந் தேதி காலை 11 மணி வரை வீண் வாக்குவாதங்களை தவிர்ப்பதுநல்லது.

பரிகாரம் : நரசிம்மர் வழிபட்டுநன்மை தரும், விநாயகருக்கு தேங்காய் உடைத்து காரியத்தை துவங்க காரிய சித்தி கிடைக்கும்.

 

மிதுனம் : மற்றவர்களை எடைபோட்டு பழகுவதில் வல்லவரான மிதுன ராசியினருக்கு, இந்த மாதம் கமிஷன், ரியல் எஸ்டேட், என்டர்ப்ரைசஸ், எலக்ட்ரிக்கல், தொழிலில் லாபமடைவீர்கள். வேலையில் உள்ளவர்களுக்கு நல்ல இமேஜ் உண்டாகும். அதிகாரிகள் உங்களை கலந்தாலோசித்துமுக்கிய முடிவுகளெல்லாம் எடுப்பார்கள். சக ஊழியர்களிடம் இடைவெளி விட்டுபழகுவது நல்லது. எதிர்பார்த்த சலுகைகள், சம்பள உயர்வு, இடமாற்றங்களெல்லாம்தடையின்றி கிட்டும்செவ்வாயும், சுக்கிரனும் வலுவாக அமர்ந்திருப்பதால் எதிலும் வெற்றி பெறுவீர்கள். நீண்டகாலமாக தள்ளிப்போன காரியங்களெல்லாம் முடிவடையும். பெரிய மனிதர்களின் நட்புகிடைக்கும். 5ம் இடத்து குருவால்பூர்வீக சொத்தில் வருமானம் வரும். பிள்ளைகளால்உறவினர், நண்பர்கள் மத்தியில் அந்தஸ்து உயரும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். புதுவேலை கிடைக்கும். கோயில்கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள்.மார்ச் 1 க்கு பிறகு குருவால் தாயார் உடல்நிலையில் கவனம் தேவை, வாகனம், வீடு பராமரிப்பு சிலவு கூடும், தந்தையுடன் வாக்குவாதம் ஏற்படும், மனஉளைச்சல் அலைச்சல் ஏற்படும், அயல்நாட்டு நண்பர்கள், வேற்றுமொழியினர் உதவியாக இருப்பார்கள், சிலருக்கு வீட்டு மனை வாங்கும் யோகம் உண்டாகும், சேமிப்பு கரையும், அரசு வகையிலான காரியங்கள் தாமதம் அலைச்சல் அதிகரிக்கும், மாணவர்கள் நினைவாற்றல் கூடும், ஆசிரியரால் பாராட்டப்படுவீர்கள், அதிக மதிப்பெண் கிடைக்கும், பெண்களுக்கு புதிய முயற்சிகள் கைகூடும், நண்பர்கள் உதவியும் கிடைக்கும், அரசியல்வாதிகள் எந்த சிக்கலிலும் மாட்டிக்கொள்ள வேண்டாம், எதிலும் கவனம் தேவை, விவசாயிகளுக்கு இதுவரை இருந்து வந்த தண்ணீர் பிரச்சனை தீரும், கிணறு, போர்வெல் பனிகள் செய்ய உகந்த காலம், மகசூல் அதிகரிக்கும், ஊரில் செல்வாக்கு அதிகரிக்கும், கலைஞர்கள் புதிய முயற்சியில் வெற்றியடையும் காலமிது. விமர்சனங்களை கண்டு அஞ்ச வேண்டாம். மொத்தத்தில் அமோகமான மாதமிது.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 23ந் தேதி காலை மணி 11 முதல் 24 மற்றும் 25ந் தேதி இரவு 7 மணி வரை மறைமுக விமர்சனங்கள் வந்து செல்லும்.

பரிகாரம் : வராஹ பெருமாளை வழிபடவும், அபிராமி அந்தாதியை உச்சரிப்பது ஏற்றம் அளிக்கும்..
கடகம் : கோபத்தை அடக்கி வெற்றிக்கு வழி வகுப்பதில் வல்லவரான கடகராசியினருக்கு இந்த மாதம் வியாபாரம் சுமாராகவே நடைபெறும், சிறு சிறு நஷ்டங்கள் ஏற்பட வாய்ப்பு உண்டு, பெரிய அளவில் கடன் வாங்க வேண்டாம், மற்றவர்களை நம்பி அதிக முதலீடு செய்ய வேண்டாம், புதிதாய் பணியாளர்களை சேர்க்கும்போது நன்கு விசாரித்து சேர்த்துக்கொள்ளவும், பங்குதாரர்களால் மன உலைச்சல் ஏற்படும், வேலையாட்களால் நிம்மதிஇழப்பீர்கள், கட்டிடத்தொழில், கட்டுமான பொருட்கள், எண்ணெய் பொருட்கள் விற்பனை லாபம் தரும் தொழில், வேலையில் உள்ளவர்களுக்கு வேலை சுமை அதிகமாகும், மேலதிகாரிகளின் தவறுக்கும் நாமே பொறுப்பு ஏற்கும் சூழல் உருவாகும், சக ஊழியர்களால் மன உலைச்சல் ஏற்படும், முக்கிய ஆவணங்களை கையாளும்போது கவனம் தேவை, சுக்கிரனும் செவ்வாயும் சாதகமாக இருப்பதால் சற்று உற்சாகமான மனநிலையில் இருப்பீர்கள், அடகில் இருக்கும் நகைகள் மீட்கலாம், தடைபெற்று இருந்த வீடு கட்டும் பனி நடைபெறும், வீடு மனை விற்பனை நல்ல வகையில் முடியும், சகோதர வழியில் உதவிகள் கிடைக்கும், தாயாருடன் கருத்து வேறுபாடு ஏற்படும், தந்தையுடனும் சுமுகமான உறவு இருக்காது, பிள்ளைகள் எதிர்காலம் பற்றிய கவலை வாட்டும், உறவினர் நண்பர்களின் அன்புத்தொல்லையும் அதிகமாகும், பேச்சில் கவனம்தேவை தேவையில்லாத வாக்குவாதத்தை தவிர்க்கலாம், பழைய இழப்பீடுகள், ஏமாற்றங்கள் பற்றிய கவலை வந்து போகும், சந்தர்ப்ப சூழல்களை சரியாக பயன்படுத்தவில்லையே என்ற கவலை இருக்கும், சொத்து சம்பந்தபட்ட வழக்கு இழுபரியாகும், அரசு வகையில் காரியம் தடைபடும், மாணவ மாணவிகள் மறதியை தவிர்க்க எழுதி பார்ப்பது நலம்தரும், நல்ல நட்புகள் உதவியாக இருப்பார்கள், பெண்கள் கவனமுடன் இருக்கவும், கர்ப்பிணிகள் மெதுவாக பாதுகாப்பாக நடக்கவும், அரசியல்வாதிகள் கட்சித்தலைமையை பகைத்துக்கொள்ள வேண்டாம், கோஷ்டி பூசலில் சிக்குவீர்கள், கலைஞர்களுக்கு சகிப்புத்தன்மையால் சாதிக்கலாம், திறமை வெளிப்படும். விவசாயிகளுக்கு மகசூல் சுமாராக இருக்கும், தண்ணீர்பிரச்சனை சமாளிக்க முடியாத சூழல் ஏற்படும், மொத்தத்தில் கவனமாக இருந்து சமாளிக்க வேண்டிய மாதமிது.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 25ந் தேதி இரவு 7 மணி முதல் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் பயணங்களின்போது கவனம் தேவை.

பரிகாரம் : சக்கரத்தாழ்வார் வழிபாடு ஏற்றம் கொடுக்கும், தன்வந்திரி வழிபாடு ஆரோக்கியம் அளிக்கும்…

சிம்மம்: மற்றவர்களுக்கான மரியாதையை உரிய நேரத்தில் கொடுத்து காரியம் சாதிக்கும் சிம்மராசியினருக்கு, வியாபாரம் பரபரப்பாகஇருக்கும் லாபம் அதிகரிக்கும், நிறுவனத்தை புதுபிப்பீர்கள், வேலையில் உள்ளவர்கள் உயர் அதிகாரிகளை அனுசரித்து போவது நல்லது, பொறுப்புகள் அதிகரிக்கும், உத்தியோகத்தில் வெற்றி காண்பீர்கள், மேலதிகாரிகளை பற்றி சக ஊழியர்களிடம் பகிர்ந்துக்கொள்ள வேண்டாம், ஓய்வெடுக்க முடியாத வேலை சுமை அதிகரிக்கும், வீட்டில் பழுதான மின் சாதனங்களை சீர் செய்வீர்கள், மின் சாதன வகையில் சிலவினங்கள் உருவாகும். திடீர் பணவரவு ஏற்படும், மனைவியிடம் வீண் வாக்குவாதத்தை தவிர்க்கவும், மனைவியை அனுசரித்து போவது நல்லது, மனைவியின் உடல் நலத்தில் கவனம் தேவை, கணவன்  மனைவிக்குள் யார் ஜெயிப்பது, யார் தோற்பது என்ற போட்டிகளெல்லாம் வேண்டாம்.ஈகோ பிரச்னையை தவிர்க்கப் பாருங்கள். வீண் செலவுகளை தவிர்க்கப் பாருங்கள்.9ந் தேதி வரை குரு 3ல் மறைந்திருப்பதால் மறைமுக அவமானம், வீண் பழி, டென்ஷன், ஓய்வின்மை வந்து செல்லும். அலைபேசியில்பேசிக்கொண்டே வாகனத்தை இயக்க வேண்டாம். வாகனம் பழுதாகும்.குருவக்ரமாகி 2ல் அமர்வதால் திடீர் யோகம், பணவரவு, குடும்பத்தில்மகிழ்ச்சியெல்லாம் உண்டாகும். 25ந் தேதி வரை 8ல் செவ்வாய் நிற்பதால்அநாவசிய உறுதிமொழிகள் தரவேண்டாம். நெருங்கியவர்களாக இருந்தாலும் அதிக உரிமைஎடுத்துக் கொள்ள வேண்டாம். 26ந் தேதி முதல் செவ்வாய் 9ம் வீட்டில் உச்சம்பெற்று அமர்வதால் அதிரடி மாற்றம் உண்டாகும். வீடு, மனை வாங்குவது, விற்பதில் இருந்த சிக்கல்கள் விலகும் மாணவ மாணவிகள் ஆசிரியரிடம் சந்தேகங்களை கேட்டுத்தெரிந்துகொள்ளுங்கள். பெண்கள் காதல் விவகாரங்களால் பிரச்சனையை சந்திக்க நேரலாம், பால்யத் தோழியை சந்திக்கும் வாய்ப்புகிடைக்கும், அரசியல்வாதிகளுக்கு சிக்கல்கள் ஏற்படும், கலைஞர்களுக்கு சின்ன சின்ன வாய்ப்புகளுக்கு கூட போராட்டமான காலகட்டம், விவசாயிகளுக்கு அக்கம் பக்கம் நிலத்தினருடன் அனுசரித்து போவது நல்லது, வாய்க்கால் வரப்பு தகராறுகள் வந்து போகும். மொத்தத்தில் எதிர்ப்புகள் ஏமாற்றங்கள் இருந்தாலும் முன்னேற்றம் கிடைக்கும் மாதம்…

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 28 மற்றும் மார்ச் 1 ஆகிய தேதிகளில் வேலைச்சுமை அதிகரிக்கும்.

 பரிகாரம் : யோகநரசிம்மரை வழிபடுங்கள், பிரத்தியங்காதேவியை வழிபடுவது வெற்றித்தரும்..

 

கன்னி: பணிந்து போவதால் மற்றவர்களின் நன்மதிப்பை பெரும் கன்னி ராசியினர் வியாபாரத்தில்லாபம் அதிகரிக்கும். வாடிக்கையாளர்கள் அதிகரிப்பார்கள். பங்குதாரர்கள்ஆதரிப்பார்கள். புதுத் திட்டங்களை நிறைவேற்றுவீர்கள்.செங்கல்சூளை, ஆட்டோ மொபைல்ஸ், பெட்ரோகெமிக்கல், அழகு சாதன நிலையங்களால்ஆதாயமடைவீர்கள். உத்யோகத்தில் வேலையாட்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள். உத்யோகத்தில் பழைய பிரச்னைகள் தீரும். புது வாய்ப்புகளும்கூடி வரும். உங்களைப் பற்றிய வீண் வதந்திகளை அலுவலகத்தில் பரப்புவார்கள்.அலுவலகத்தில் அமைதியைக் கடைபிடிப்பது நல்லது, உங்களைபாடாய்படுத்தி, நிம்மதியற்ற நிலையை தந்து, பிள்ளைகளுடன் பிரச்னைகளைஏற்படுத்திய சூரியன் இப்போது 6ம் வீட்டில் அமர்ந்திருப்பதால் தடைபட்டகாரியங்கள் நல்ல விதத்தில் முடியும். உங்களுடைய ராசிக்கு சாதகமான வீடுகளில்யோகாதிபதியான சுக்கிரன் செல்வதால் எதிர்பார்த்து ஏமாந்த தொகை கைக்குவரும். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தையும் தந்து முடிப்பீர்கள். தொண்டைப்புகைச்சல், மூச்சுப் பிடிப்பு வந்துபோகும்.  உறவினர், நண்பர்களுடன் கருத்துமோதல்கள் வரும்சகோதரவகையில் பிணக்குகள் வரும். சொத்து விவகாரங்களில் அவசர முடிவுகள் வேண்டாம்.வீடு, மனை வாங்கும் போது தாய்பத்திரத்தை சரி பார்த்துக் கொள்ளுங்கள், குடும்பஅந்தரங்க விஷயங்களை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்ளாதீர்கள். மாத முற்பகுதியில் குரு இரண்டில் நிற்பதால் திடீர் பணவரவு, எதிலும் வெற்றியெல்லாம் கிட்டும் பிற்பகுதியில் ராசியில் சஞ்சரிக்கும் குருவால் நீங்கள்எதை செய்தாலும் தோல்வியில் முடிவதையும், எதை சொன்னாலும் தவறாக சிலர்புரிந்து கொள்வதையும் நினைத்து ஆதங்கப்படுவீர்கள், உடல் நலத்தில் கவனம் தேவை, இரத்தத்தில் நோய் எதிர்ப்புசக்திகுறையும். மாணவமாணவியர்க்கு சக மாணவர்கள் மத்தியில் மதிப்புக் கூடும். ஆசிரியரின் அன்புக்குபாத்திரமாவீர்கள். பெண்கள் உயர்கல்வியில் நாட்டம் அதிகரிக்கும்.அயல்நாடு செல்லவாய்ப்புகள் கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு ஏற்றமான மாதம் எதிர்க்கட்சியிரை தாண்டிமுன்னேறுவீர்கள். இழந்த பதவியை மீண்டும்பெறுவீர்கள். கலைஞர்கள் உங்களின்படைப்புகள் பாராட்டி பேசப்படும்.விவசாயிகள் மரப்பயிர்கள்லாபம் தரும். சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். வற்றிய கிணற்றில் நீர்ஊற செலவு செய்து கொஞ்சம் தூர்வாருவீர்கள். செலவுகளை குறைத்து கொண்டு செயல்பட வேண்டிய மாதமிது.

சந்திராஷ்டமம்: மார்ச் 2, 3 மற்றும் 4ந் தேதி காலை 7.15 மணி வரை அசதி, சோர்வு வந்து விலகும்.

பரிகாரம் : ஐயப்பன் வழிபாடு ஆனந்தம் அளிக்கும், சிவன் வழிபாடு சிந்தையை சிறக்க வைக்கும், பசுவிற்கு அகத்திக்கீரை வழங்குவது பிரச்சனையில் இருந்து விடுபட செய்யும்…

துலாம் : அன்போ, மகிழ்ச்சியோ மற்றவர்களிடம் நமக்கு எது தேவையோ அதையே கொடுத்து பெற்றுக்கொள்ளும் மனம் படைத்த துலா ராசியினரே, இந்த மாதம் உங்கள் ஆளுமைத்திறன் அதிகமாக வெளிப்படும்,  வியாபாரம் அமோகமாக இருக்கும், வேலையாட்கள் உதவி கிடைக்கவிட்டாலும் வெளிநபர்கள் மூலம் வேலை முடிவடையும், அக்கம் பக்கம் கடைகரர்களை பகைத்துக்கொள்ள வேண்டாம், அனுபவமில்லாத தொழிலில் ஈடுப்பட வேண்டாம், ஹோட்டல், கட்டிடஉதிரிபாகம், கெமிக்கல் போன்ற தொழில்கள் லாபகரமாக நடைபெறும், வேலையில் உள்ளவர்கள் ஓய்வின்றி உழைக்க வேண்டி இருக்கும், மேல் அதிகாரிகள் உங்களை அலைக்களிப்பார்கள், சக ஊழியர்கள் ஒத்துழைப்பும் கிடைக்காது, வேலைத்தேடுபவர்களுக்கு புதியவேலை கிடைக்கும், புதன் சாதகமான நிலையில் உலாவுவதால் தாராள பணவரவு உண்டு, ஷேர் மார்கெட் வகையில் லாபம் உண்டு, பிள்ளைகள் வகையில் பிரச்சனை சந்திக்க நேரிடும், ஆன்மீக நாட்டம் அதிகரிக்கும், பயணங்களால் அனுகூலம் உண்டு, கண், காது, தொண்டை வகையில் ஆரோக்கிய குறைவு ஏற்படும். மாணவர்கள் கடைசி நேரத்தில் பார்த்துக் கொள்ளலாம் என்று இருந்திடாமல் கவனமுடன் படிக்கவும், பெண்களுக்கு திருமண யோகம் கூடி வரும், அரசியலில் யாரையும் ஆதாரமின்றி பேச வேண்டாம், அது நமக்கே வினையாக வந்து முடியும். கலைஞர்கள் தமது படைப்புகளை வெளிக்கொண்டுவர போராட வேண்டி இருக்கும், விவசாயம் மகசூல் அதிகரிக்கும், லாபம் கூடும். மார்ச் 1ந்தேதி முதல் குரு வக்ரமாகி 12ல் மறைவதால் அனைத்துப் பிரச்னைகளையும்சமாளிக்கும் சக்தி கிடைக்கும். ஆன்மிகப் பெரியோர்களின் நட்பு கிடைக்கும்.அண்டை மாநில புண்ணியத் தலங்களுக்கு சென்று வருவீர்கள். வேகத்தை தவிர்த்து விவேகமாக செயல்பட்டு வெற்றிக்காண வேண்டிய மாதமிது.

 சந்திராஷ்டமம்: மார்ச் 4ந் தேதி காலை மணி 7.15 முதல் 5 மற்றும் 6ந் தேதி காலை மணி 9.45 வரை வீண்டென்ஷன் அதிகரிக்கும்.

 பரிகாரம் : சனிக்கிழமைகளில் ஆஞ்சநேய வழிபாடு வெற்றித்தரும், அம்மன் சன்னதியில் விளக்கேற்றி வழிபடுவது அமைதியை தரும்.

 

விருச்சகம் : பணம் என்பது வாழ்க்கையை நடத்த முக்கியமான ஒரு கருவி என்பதில் தீர்க்கமான முடிவோடு இருக்கும் விருச்சிக இராசியினருக்கு இந்த மாதம் தொழில் வியாபாரம் சுமாராக நடைபெறும், பழைய விற்காத சரக்குகளை பாதி விலைக்கேனும் விற்று முடிப்பதில் ஆர்வம் காட்டுவீர்கள், பணியட்களால் தொந்தரவு இருக்கும், புதிய முதலீடுகள் செய்வதற்கான வாய்ப்பு உருவாகும், உத்தியோகஸ்தர்களுக்கு வேலைபளு கூடும், சக ஊழியர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும், உயர் அதிகாரிகளின் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும், ஊதிய உயர்வு, பதவி உயர்வு எதிர்பார்க்கலாம், எதிர்ப்புகள் குறையும், நீண்டகால திட்டங்கள் நிறைவேறும், புதிய வாய்ப்புகள் கிடைக்கும், பிரபலங்களின் அறிமுகம் கிடைக்கும், உங்கள் செல்வாக்கு கூடும், பழைய பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும், வழக்குகளில் வெற்றி கிட்டும், பயணங்களால் அலைச்சல், செலவுகள் அதிகரிக்கும், பிள்ளைகளால் கவலைகள் அதிகரிக்கும், பழைய கசப்பான அனுபவங்களை நினைத்து கவலைப்பட்டு உறக்கம் கெடும், வயிற்றில் வலி, ஜீரணக்கோளறு, வாந்தி தலை சுற்றல், கைகால் மரத்துபோகுதல் போன்ற சிறு வியாதிகளால் அவதிப்படுவீர்கள், மிகவும் நெருக்கமான நபர் உங்கள் நம்பிக்கைக்கு விரோதமாக நடப்பார்கள், அடுத்தவர் பிரச்சனையில் தலையிடாமல் இருப்பது நல்லது. வீட்டில் மகிழ்ச்சியை வரவழைக்க முயற்சிப்பீர்கள், வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்குவீர்கள், சுப நிகழ்வுகள் நடைபெறும், உடன்பிறப்புகள் சாதகமாக நடந்துக்கொள்வார்கள், புதிய நபர்கள் உதவியாக இருப்பார்கள், மாணவ மாணவிகள் வீண் அரட்டை அடிக்காமல், ஆசிரியர் நடத்தும் பாடத்தை கவனிக்கவும், மனப்பாடபகுதிகளை ஆழ்ந்து படிக்கவும், பெண்கள் பெற்றோர் சொல்கேட்டு நடந்துக்கொள்வார்கள், பழைய நட்புகள் புதுபிக்கும், நல்ல நட்புகள் கிடைக்கப்பெறும், அரசியல்வாதிகள் மதிப்புகூடும், கலைஞர்கள் உங்கள் படைப்புத்திறன் அதிகரிக்கும், புகழ் பெற்ற படைப்பாளிகள் உங்களை பாராட்டுவார்கள், விவசாயிகளுக்கு குறைந்த வட்டியில் கடன்வசதிகள் கிடைக்கும், தண்ணீர் பிரச்சனை தீரும்,  முயற்சித்தல் எதுவும் முடியும் என்பதை முடித்துக்காட்ட வேண்டிய மாதம் இது.

சந்திராஷ்டமம்: மார்ச் 6ந் தேதி காலை மணி 9.45 முதல் 7 மற்றும் 8ந் தேதி நண்பகல் 12.30 மணி வரைவீண் குழப்பங்கள் வந்து செல்லும்.

பரிகாரம் : காலபைரவர் வழிபாடு செய்வது உத்தமம். இயலாதவர்களுக்கு உதவுங்கள், வயதானவர்களுக்கு போர்வை தானம் செய்வது நன்மை பயக்கும்.

தனுசு : அடக்கமாய் இருப்பதால் அடுத்தவரை கவர முடியும் என்றும் நம்பும் தனுசு ராசியினருக்கு வியாபாரத்தில் அதிரடி முன்னேற்றம் ஏற்படும், கடையை மேம்படுத்தும் திட்டம் வெற்றிப்பெரும், பங்குதாரர்கள் ஆதரவாக இருப்பார்கள், புதியவர்கள் ஒத்துழைப்பு கிடைக்கும், மருந்து, உணவுத்தொழில் நல்ல லாபம் கொடுக்கும், பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள்,  உத்தியோகத்தில் உங்கள் திறமையை அதிகரித்துக்கொள்வீர்கள், சக ஊழியர்களுக்கு உதவியாய் இருப்பீர்கள், மேல் அதிகாரிகளின் பாராட்டுக்கள் கிடைக்கும், புதிய பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவீர்கள், வேலை தேடுபவர்களுக்கு புதிய வேலைகள் கிடைக்கும், அரசு வேலையும் சிலருக்கு அமையக்கூடும், கடந்த மாதமிருந்த செலவுகளும், அலைச்சல்களும் நீங்கி நிம்மதி அடையும் காலம், இந்த மாதம் சற்று பரபரப்பாகவே இருப்பீர்கள், பிள்ளைகள் வகையில் அன்பும் பெருமையும் கூடும் மாதமிது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும், பிள்ளைகளுக்கு நல்ல வேலையும், திருமண யோகமும் உண்டாகும். பூர்வீக சொத்தில் லாபம் உண்டாகும், சவாலான காரியங்களை கூட செய்து முடிப்பீர்கள், மாத பிற்பகுதியில் வேலை சுமை கூடும், வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் சிக்கல், மரியாதை குறைவு ஏற்படும்,  மாணவ மாணவியர்கள் நினைவாற்றல் அதிகரிக்கும், தேர்வுக்கு முழுமையாய் தயராவீர்கள், பெண்களுக்கு இதுவரை இருந்துவந்த அலட்சியப்போக்கு தீரும். புதிய நட்பால் உற்சாகமாக இருப்பீர்கள், அரசியல்வாதிகள் தலைமைக்கு நெருக்கமாவீர்கள், உங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் விலகுவார்கள். படைப்பாளிகள் எதார்த்தமான படைப்புகளால் பெருமை சேரும், பாராட்டுகள் குவியும், விவசாயிகளுக்கு மாற்றுப்பயிர்கள் நல்ல மகசூல் கொடுக்கும், கால்நடைகளால் லாபம் கிடைக்கும். நினைத்ததை நிறைவேற்றும் மாதமிது.

சந்திராஷ்டமம்: மார்ச் 8ந் தேதி நண்பகல் மணி 12.30 முதல் 9 மற்றும் 10ந் தேதி மாலை மணி 5.15 வரைதெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல்திணறுவீர்கள்.

பரிகாரம் : ஈஸ்வரன் வழிபாடு ஏற்றம் தரும், முருகனுக்கு விளக்கேற்றி வழிபடுவது பிரச்சனையில் இருந்து தீர்வுகிடைக்கும்..

மகரம் : மனிதநேயமும் மன்னிக்கும் குணமும் கொண்ட மகர இராசியினருக்கு வியாபாரத்தை விரிவுபடுத்த கடன் உதவிகள் கிடைக்கும், மரம், இரும்பு, கிரனைட், எலக்ட்ரானிக்ஸ் மொபைல் போன்ற தொழில்கள் ஏற்றம் கொடுக்கும், பங்குதார்கள் சுமுகமாக இருக்க மாட்டார்கள், பழைய பாக்கிகளை கனிவாக பேசி வசூலிக்க பாருங்கள், உத்தியோகத்தில் ஏமாற்றங்களும், அவமானங்களும் தவிர்க்க கடினமாக உழைக்க வேண்டி இருக்கும், மூத்த அதிகாரிகள் ஒத்துழைப்பாக இருப்பார்கள், சிறு சிறு சலுகைகள் கிடைக்கும், அயல் நாட்டு வேலை சிலருக்கு கிடைக்ககூடும், சோர்ந்து விடாமல் முயன்றுக்கொண்டே இருப்பீர்கள், பணவரவு அதிகரிக்கும், திடீர் அதிர்ஷ்டம் உருவாகும், அடகில் உள்ள நகை, பத்திரம் முதலியவை மீட்க முடியும், தாயாரின் உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்படும், உடல் உஷ்ணத்தால் ஏற்பட்ட வியாதிகள் தீரும், சின்ன சின்ன வேலையையும் போராடி முடிக்க வேண்டி வரும், மனதில் தேவையில்லாத பயம் இருந்துக்கொண்டே இருக்கும், முன் கோபத்தால் நல்லவர்களது நட்பை இழந்துவிடாதீர்கள். மனதிற்குள் குழப்பத்தை வைத்துக்கொண்டு வெளியில் சொல்லாது உள்ளுக்குள் வைத்து கலங்கி வருகிறீர்கள், நம்பிக்கையான வர்களிடம் மனம் விட்டு பேசுங்கள், மாணவர்களுக்கு நண்பர்கள் உதவியாக இருப்பார்கள், ஆசிரியர்கள் சந்தேகங்களை தீர்த்துவைப்பார்கள், பெண்கள் நண்பர்களின் சுயரூபத்தை அறிந்துக்கொள்வீர்கள், தன்கையே தனக்கு உதவி என்பதை அறிந்துக்கொள்வீர்கள், போட்டித்தேர்வுகளில் வெற்றிக்கிடைக்கும், சிலருக்கு புதிய வேலைகள் கிடைக்கும், அரசியல்வாதிகள் ஆவேசமாக பேசாமல் அமைதியாக பேசுங்கள், ஆழ்ந்து பேசுங்கள், கலைஞர்கள் உங்கள் படைப்புகள் ஓரளவுக்கு வெற்றிக்கொடுக்கும், விவசாயிகளுக்கு கடுமையாக உழைத்தால் மகசூல் அதிகரிக்கும், தன் பலம் பலவீனங்களை திருத்திக்கொள்ளும் மாதமிது.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி13ந் தேதி மாலை மணி 4.15 வரை மற்றும் மார்ச் 10ந் தேதி மாலை மணி 5.15 முதல் 11, 12 ஆகிய நாட்களில் பழைய பிரச்னைகள் தலைத்தூக்கும்.

பரிகாரம் : குருவழிபாடு நன்மைதரும், மகான்களை வணங்குதல் மேன்மை கொடுக்கும், மாரியம்மன் வழிபாடு மன நிம்மதியை கொடுக்கும்,

 

கும்பம் : எந்த தடையையும் கண்டு மனம் கலங்காது ஏற்றத்துடன் செயல்படும் கும்ப ராசியினர் இந்த மாதத்தில் வியாபாரம் சீராகும் பழைய வாடிக்கையாளருடன் புதிய வாடிக்கையாளர்களும் வருவார்கள், வியாபாரத்தில் புதிய திட்டங்களை அறிமுகப்படுத்துவீர்கள், ஜவுளி, மருத்துவம், கணினி தொழல் மேம்படும், வேலையாட்களிடம் இருந்த பிசகுகள் நீங்கும், பங்குதாரர்களால் சிறு சிறு வருத்தம் ஏற்பட்டாலும் பகைத்துக்கொள்ள வேண்டாம், உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும், உயர் அதிகாரிகளின் ஆதரவும் பாராட்டும் கிடைக்கும், சக ஊழியர்கள் மத்தியில் செல்வாக்கு அதிகரிக்கும், வேலையில் எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் கிடைக்கும், வேலைக்கு விண்ணப்பித்தது காத்து இருந்தவர்களுக்கு வேலை கிடைக்கும், செவ்வாய் வலுவாக அமர்வதால் தைரியமாகவும் தன்னிச்சையாகவும் செயல்பட தொடங்குவீர்கள், அதிகாரிகளின் அறிமுகம் கிடைக்கும், சூரியனால் கடந்த ஒருமாத காலமாக தூக்கமும் நிம்மதியும் இழந்து இருப்பீர்கள், இப்பொழுது சூரியன் உங்கள் ராசியில் சஞ்சரிப்பதால் கோபம் அதிகரிக்கும், தந்தை வழியில் உதவிகள் கிடைக்கும், ராஜதந்திரத்துடன் நடந்து வெற்றிகான்பீர்கள், இதமாகவும், இங்கீதமாகவும் பேசி காரியம் சாதித்துக்கொள்வீர்கள், பிள்ளைகள் வகையில் செல்வாக்கு கூடும், வீடு வாகனம் சீர்செய்வீர்கள், விரையம், வீண் அலைச்சல், ஏமாற்றம் காரியத்தடைகள் வந்து நீங்கும், உறவினர்கள், நண்பர்களால் இருந்து வந்த அன்புத்தொல்லை நீங்கும், எதிர்பாரத சந்திப்புகளால் இன்பம் கூடும், வெளிநாட்டில் இருப்பவர்கள் ஏற்றம் பெறுவார்கள், மாணவ மாணவிகள் விளையாட்டுத்தனத்தை முட்டைக்கட்டிக்கொண்டு படிப்பில் கவனம் செலுத்தவும், விடைகளை எழுதி வைத்து படித்து நினைவு படுத்திக்கொள்வது நல்லது. பெண்களுக்கு திருமணம் யோகம் கூடும், வெளிநாடு, வெளி மாநிலத்தில் வேலை தேடியவர்களுக்கு வேலை கிடைக்கும், அரசியல்வாதிகளுக்கு போட்டி அதிகரிக்கும், சககட்சியினரை குறைக்கூற வேண்டாம், கலைஞர்களுக்கு மூத்த கலைஞர்கள் ஆதரவாய் இருப்பார்கள். விவசாயிகளுக்கு எண்ணெய்வித்துக்களால் லாபம் கிடைக்கும், ஊரில் மரியாதையை கூடும்.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி 13ந் தேதி மாலை மணி 4.15 முதல் 14, 15 மற்றும் மார்ச் 13ந் தேதி வரைமறைமுக எதிர்ப்புகள் வந்து செல்லும்.

பரிகாரம் : அம்மன் வழிபாடு ஆனந்தம் கூட்டும், மாசிமகத்தில் அன்னதானம் செய்வது நல்ல பலன் தரும்,

 

மீனம்: அவசரப்புத்தியால் அவதியில் சிக்கிக்கொள்ளும் மீனராசியினருக்கு இந்த மாதம் தொழில் வியாபாரம் சிறக்கும், போட்டிகளை தாண்டி வெற்றிக்காண்பீர்கள், கட்டிட உதிரி பாகங்கள், ஸ்டேசனரி நல்ல லாபம் கொடுக்கும் தொழில்கள், வேலையாட்களால் அவதியுறும் நிலை ஏற்படும், வேலையாட்கள் சரிவர வராமல் அவர்கள் வேலையை நாமே பார்க்கவேண்டி வரும், உத்தியோகத்தில் உழைப்புக்கேத்த மரியாதை கிடைக்கவில்லையே என்று வருத்தப்படுவீர்கள், உண்மையாக இருந்தால் மட்டும் போதாது, உயரதிகரிகளுக்கு ஜால்ராவும் போட வேண்டும் என்ற முடிவுக்கு வருவீர்கள், சகஊழியர்களின் வேலையையும் நாமே பார்க்கவேண்டி வரும், புதிய வேலையில் சேரும் முன் யோசித்து முடிவெடுப்பது நல்லது, புதனும், சுக்கிரனும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் எங்குச் சென்றாலும் மதிப்பு, மரியாதைக் கூடும். எதிர்பார்த்த தொகை கைக்கு வரும்ண்டநாட்களாக தள்ளிப்போன காரியங்களெல்லாம் முடிவடையும்.பழையகடன், வழக்குகள் பற்றிய கவலைகள் வந்து நீங்கும். அரசு காரியங்கள் சற்றுதாமதமாக முடியும். தூக்கம் குறையும். உங்களைச் சுற்றியிருப்பவர்களின்சொரூபத்தைப் புரிந்து கொள்வீர்கள். ஆன்மிகப் பயணங்கள் சென்று வருவீர்கள். கோபத்தையும், குடும்பத்தில் சலசலப்பையும் கொடுத்துக்கொண்டிருந்த செவ்வாய் 2ம்இடத்திற்கு செல்வதால் மன இறுக்கம் நீங்கி மகிழ்ச்சி பிறக்கும், எதிர்பாராத பயணங்கள், கடன் பிரச்சனை, வெளிவட்டாரத்தில் விமர்சனம் போன்றவை சிக்கலை உருவாக்கும், மாதப்பிற்பகுதியில் கணவன் மனைவிவகையில் இருந்து வந்த பிணக்குகள் நீங்கும். ஆடை ஆபரண சேர்க்கை உண்டாகும், திருமணதடை நீங்கும், மாணவர்கள் வகுப்பறையில் வீண் பேச்சை குறைக்கவும், பாடத்தில் கவனம் செலுத்தவும், பெண்களுக்கு பெற்றோரின் பாசம் கிடைக்கும், காதல் விசயத்தில் நல்ல தெளிவு கிடைக்கும், அரசியல்வாதிகளுக்கு கட்சியில் செல்வாக்கு அதிகரிக்கும், கலைத்துறையினருக்கு தடைபட்டு வந்த எதிர்பார்த்த வாய்ப்புகள் இப்போது கிடைக்கும், விவசாயிகளுக்கு நிலப்பிரச்சனை முடிவுக்கு வரும், காய்கறிகள், தோட்டப்பயிர்கள் முடிவுக்கு வரும். நல்ல நண்பர்கள் அறிமுகத்தால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும், வாழ்வில் மாற்றம் உண்டாகும்.

சந்திராஷ்டமம்: பிப்ரவரி16, 17 மற்றும் 18ந் தேதி நண்பகல் மணி 12.50 வரை பல வேலைகள் தடைப்பட்டு முடியும்.

பரிகாரம் : பெருமாளை வழிபடுவதால் பிரச்சனை தீரும், சிவன் கோவிலில் சண்டிகேஸ்வரருக்கு விளக்கு ஏற்றி வழிபடுவது ஏற்றம் தரும்.

 

மாசிமாத பலனை கணித்தவர்

“ஜோதிட அமுதம்”S.ஜோதிமணிகாந்தி. D.Astro

 

728total visits,1visits today