வாடகை பைக்கிற்கு வந்தது ஆபத்து

0
1

சென்னை புறநகரில் வாடகைக்கு மோட்டார் சைக்கிள்களில் ஆட்களை ஏற்றி சென்ற 38 மோட்டார் சைக்கிள்களை வட்டார போக்குவரத்து ஆய்வாளர்கள் பறிமுதல் செய்துள்ளனர்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வாடகை கார்கள், ஆட்டோக்கள் போல ஆன் லைன் ஆப் முலமாக வாடகைக்கு மோட்டார் சைக்கிள்களில் ஆட்களை ஏற்றி செல்வதாக காவல்துறைக்கு புகார் வந்தது. இதுகுறித்து வட்டார போக்குவரத்து துறை ஆய்வாளர்கள் மேற்கொண்ட வாகன சோதனையில், ஆன்லைன் ஆப் முலமாக மோட்டார் சைக்கிள்களில் வாடிக்கையாளர்களை ஏற்றி சென்ற 38 மோட்டார் சைக்கிள்களை பறிமுதல் செய்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த கால்-டாக்சி ஓட்டுநர்கள், வாடகை மோட்டார் சைக்கிள் இயக்கியவர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தாக்கியதாக கூறப்படுகிறது. இதனையடுத்து வட்டார மோட்டார் ஆய்வாளர்கள் இருதரப்பினரையும் சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர். பறிமுதல் செய்யப்பட்ட மோட்டார் சைக்கிள்களை ஒட்டி வந்தவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையம் சுற்றியுள்ல பகுதியிலும், அண்ணாநகர் உள்ளிட்ட பகுதியிலும் பெரும்பாலான இரண்டு சக்கர வாகனங்கள் நேற்று காவல்துறையால் முடக்கப்பட்டது.

சென்னை காவல்துறை சார்பில் ரேபிடோ ஆன்லைன் மூலம் பயணம் செய்வதை தவிர்க்க வேண்டுமென்று பொதுமக்களிடம் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

26340total visits,1visits today