தூக்கத்தின் சுழற்சி

0
69

நேற்று ஒரு கேள்வியில் sleep paralysis என்ற ஒரு வார்த்தை இந்த sleep cycle பத்தி எழுதத் தூண்டியது.
தூக்கச் சுழற்சி அதாவது sleep cycle நம்ம உடம்பில் தினமும் நடக்கக் கூடிய ஒன்று. அதைப் பற்றி தெரிந்து கொள்ளுவதற்கான விழிப்புணர்வு பதிவு இது கடிகாரம் போல், தூக்கமும் ஆரம்பித்த இடத்திலேயே வந்து முடியும். இந்த சுழற்சியில் இரண்டு வகைகளாக பிரிக்கலாம்.

1.REM sleep,

2.non REM sleep.

REM – Rapid eye movement
அதாவது தூங்கும் போது கண் இமைக்குள் அங்கும் இங்கும், வேக வேகமாக ஒரே சீராக இல்லாமல் அசைந்து கொண்டு இருக்கும். நாம் தூங்குவதற்காக படுத்த உடன் முதலில் வருவது இந்த REM sleep தான் 10 நிமிடங்கள் முதல் ஒரு மணி நேரம் வரை இந்த நிலை நீடிக்கும். மனமும், உடலும் விழித்திருக்கும் தூக்க நிலை இது. அதானால தான் எனக்கு படுத்த உடனே தூக்கம் வருவதில்லை என்று பலபேர் புகார் சொல்ல கேட்டதுண்டு.

இதற்கு அடுத்த நிலை
Non REM sleep

இதில் மூன்று ஸ்டேஜ்கள் உண்டு.
1) stage 1
இதில் கண்கள் மூடி இருக்கும். அதன் இயக்கம் குறைந்து போய் இருக்கும், மூளையும் அமைதியாகி உறங்க ஆரம்பித்து இருக்கும். ஆனாலும் சிறு அசைவு கேட்டாலோ அல்லது தூண்டுதல் இருந்தாலோ முழித்து விடுவோம்.

2) stage 2
இப்போது முதல் நிலையை விட சற்று ஆழ்ந்த உறக்கத்தில் இருப்போம். உடலில் நாடித் துடிப்பு குறைந்து, ஒரே சீராக மூச்சு விட்டு தூங்க ஆரம்பித்து இருப்போம். உடலின் சூடு கூட குறைய ஆரம்பித்து இருக்கும். எழுப்புவதற்கு கொஞ்சம் சிரமமாக இருக்கும்.

3) stage 3
Deep sleep
ஆழ்ந்த உறக்கம்
இதில் மனம், உடல் இரண்டும் உறங்கப் போய் விடும். உடல் அசைவு இன்றி மரக்கட்டை மாதிரி கிடக்க ஆரம்பித்து விடும். மூச்சு விடுதல், இதயத் துடிப்பு போன்ற தானியங்கு வேலைகள் மட்டும் உடலில் தன்னால் நடைபெற்றுக் கொண்டு இருக்கும். மூளையில் இருக்கும் அத்தனை செயல்களும் நின்று, மூளை அதனுடைய ஆசைப் பட்ட செயலை செய்து கொண்டு இருக்கும்.
Nightmares ( கெட்ட கனவுகள்) வருவது இந்த நிலையில் தான்.
இந்த நிலைக்கு பிறகு மூளை ஆட்டோமேடிக்கா REM sleep mode க்கு போகும். திரும்ப இந்த சுழற்சி ஆரம்பிக்கும். ஒவ்வொரு 90 நிமிடங்களுக்கு ஒரு முறை REM sleep வரும். இந்த சுழற்சி நாம் எழும் வரை மாறி மாறி நடந்து கொண்டே இருக்கும்.

எத்தனை மணி நேரம் தூங்கலாம்?
பிறந்த குழந்தை
1-3 மாதம் வரை – 14-17 மணி நேரம் வரை
3-9 மாதம் – 15 மணி நேரம்
1 – 2 ஆண்டுகள் – 11-14 மணி நேரம்
3-5 ஆண்டுகள் – 10-13 மணி நேரம்
6-13 ஆண்டுகள் – 9-11 மணி நேரம்
14-17 ஆண்டுகள் – 8-10 மணி நேரம்.
Adults – 7-9 மணி நேரம் வரை கண்டிப்பாக தூங்க வேண்டும்.

இதற்கு குறைவான நேரம் தூங்குபவர்கள், பகலில் அந்த நேரத்தை திருப்பிச் செலுத்தியே ஆக வேண்டும்.

பகலில் அந்த நேரமானது கீழ்க்கண்ட முறையில் வசூலிக்கப் படும்.
நினைவுத் திறன் குறைதல், மன அழுத்தம், எதிர்வினை ஆற்றல் குறைதல், தெளிவான முடிவு எடுக்கும் திறன் குறைதல், டயர்டா இருத்தல், உடல் உளைச்சல் என்று எல்லாமே தூக்க நேரம் குறைவதால் வரும் விளைவுகள்.

கொட்டாவி விடுவதை கட்டுப்படுத்த முடியாமை, வேலை செய்யும் நேரத்தில் தூங்குதல், சோர்வாக இருத்தல், பகல் கனவு, கவனத்தை ஒரு புள்ளியில் குவிக்க முடியாமல் இருத்தல் எல்லாம் தூக்க குறைபாட்டால் வருபவை மட்டுமே.

அதானால யார் என்ன சொன்னாலும் கவலைப் படாமல், எதைப் பற்றியும் நினைக்காமல் முதலில் எட்டு மணி நேரம் தூங்கப் பழகுவோம்

தூக்கம் நல்லது

#தெரிந்ததும்_தெரியாததும்
#தூக்கம்
#sleep_cycle

மருத்துவர் M.இராதா. M.B.,B.S., M.D. D.M

1083total visits,1visits today