தினப்பலன் 01/11/2018

0
10

☸மேஷம் :-

உத்தியோகஸ்தரர்கள் நிதானத்துடன் செயல்படவும். மனக்கவலைகள் குறைந்து மகிழ்ச்சியுடன் காணப்படுவீர்கள். வாகனப் பயணங்களால் மாற்றமான சூழல் அமையும். சிந்தனையின் போக்கில் மாற்றம் உண்டாகும். புதிய செயல்திட்டம் வகுத்து அதற்கான பணிகளை மேற்கொள்வீர்கள்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

அசுவினி : நிதானம் வேண்டும்.
பரணி : மகிழ்ச்சியான நாள்.
கிருத்திகை : மாற்றம் பிறக்கும்.

☸ரிஷபம் :-

பணியில் உள்ளவர்களுக்கு சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். எண்ணிய எண்ணங்கள் ஈடேறும். விளையாட்டு வீரர்களுக்கு அனுகூலமான நாள். பங்குதாரர்களால் சுபவிரயம் செய்து தொழிலை அபிவிருத்தி செய்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் செயல்பாடுகளால் மகிழ்ச்சி அடைவீர்கள். சுபச் செய்திகள் வந்தடையும்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்

கிருத்திகை : ஆதரவு கிடைக்கும்.
ரோகிணி : எண்ணங்கள் ஈடேறும்.
மிருகசீரிடம் : அபிவிருத்தி உண்டாகும்.

☸மிதுனம் :-

ஆடை, ஆபரணச்சேர்க்கை உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். பழைய கடன்களால் சில மனவருத்தங்கள் ஏற்படும். தாய் வழி உறவுகளால் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். விருந்துகளில் பங்கேற்று மனம் மகிழ்வீர்கள். மனதில் உள்ள கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். எண்ணங்களில் தெளிவு பிறக்கும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

மிருகசீரிடம் : ஆசைகள் நிறைவேறும்.
திருவாதிரை : சுபிட்சமான நாள்.
புனர்பூசம் : புத்துணர்ச்சி உண்டாகும்.

☸கடகம் :-

நீண்ட நாள் கனவை நடைமுறைப்படுத்த முயல்வீர்கள். பிள்ளைகள் மூலம் சுபச் செய்திகள் உண்டாகும். கணவன், மனைவிக்கிடையே அன்பு அதிகரிக்கும். கல்வி சம்பந்தமான பணியில் உள்ளவர்களுக்கு சாதகமான நாள். புதிய திட்டங்களை செயல்படுத்த முயல்வீர்கள். ஆன்மீக எண்ணங்கள் மேலோங்கும்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

புனர்பூசம் : கனவு நிறைவேறும்.
பூசம் : அன்பு அதிகரிக்கும்.
ஆயில்யம் : சாதகமான நாள்.

☸சிம்மம் :-

மனைகளால் இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆதரவு மன மகிழ்ச்சியை தரும். நீண்ட நாள் நண்பர்களை கண்டு மனம் மகிழ்வீர்கள். வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் ஈடுபடுபவர்களுக்கு சாதகமான சூழல் ஏற்படும். மூத்த சகோதரர்களின் ஆதரவு கிடைக்கும். வாக்குவன்மையால் பாராட்டப்படுவீர்கள்.

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

மகம் : இலாபகரமான நாள்.
பூரம் : மகிழ்ச்சி உண்டாகும்.
உத்திரம் : வாய்ப்புகள் மலரும்.

☸கன்னி :-

அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்க்கப்பட்ட அனுகூலமான செய்திகள் கிடைக்கும். தொழில் சார்ந்த எண்ணங்களை நடைமுறைப்படுத்துவீர்கள். கௌரவ பதவிகளால் கீர்த்தி உண்டாகும். செய்தொழிலில் மேன்மையான சூழல் அமையும். இடமாற்றங்கள் புதிய அனுபவத்தை அளிக்கும். தெளிவான சிந்தனைகள் மேம்படும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

உத்திரம் : அனுகூலமான நாள்.
அஸ்தம் : கீர்த்தி உண்டாகும்.
சித்திரை : சிந்தனைகள் மேம்படும்.

☸துலாம் :-

நண்பர்களின் ஆதரவால் தொழிலில் முன்னேற்றமான சூழ்நிலை உண்டாகும். புனித யாத்திரை மேற்கொள்வதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். உயர் அதிகாரிகளின் ஆதரவால் காரியசித்தி உண்டாகும். குடும்ப உறுப்பினர்களால் மகிழ்ச்சியான சூழல் அமையும். புதியவர்களின் வருகையால் சுப விரயம் உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

சித்திரை : முன்னேற்றமான நாள்.
சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
விசாகம் : காரியசித்தி உண்டாகும்.

☸விருச்சகம் :-

புதிய தொழில் முயற்சிகளில் எண்ணிய இலாபம் கிடைக்கும். மூத்த சகோதரர்களால் அனுகூலமான பலன்கள் உண்டாகும். சக பணியாளர்களிடம் அனுசரித்து செல்லவும். பணியில் மேன்மையான சூழல் உண்டாகும். தந்தை வழி உறவுகளிடம் சற்று கவனம் வேண்டும். பணி சம்பந்தமான பயணங்கள் உண்டாகலாம்.

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : இளம் மஞ்சள்

விசாகம் : இலாபம் கிடைக்கும்.
அனுஷம் : அனுசரித்து செல்லவும்.
கேட்டை : கவனம் வேண்டும்.

☸தனுசு :-

மனதில் தோன்றும் ஒருவிதமான எண்ணங்களால் மனச்சோர்வு உண்டாகும். உத்தியோகஸ்தரர்களுக்கு பணியில் பொறுப்புகள் அதிகரிக்கும். நண்பர்களிடம் கருத்து வேறுபாடு உண்டாகும். பொதுத் தொண்டில் ஈடுபடுபவர்களுக்கு ஆதரவற்ற சூழல் உண்டாகும். பேச்சில் கவனம் வேண்டும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் உணர்வு உண்டாகும்.

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : இளநீலம்

மூலம் : பணியில் கவனம் தேவை.
பூராடம் : பேச்சில் நிதானம் வேண்டும்.
உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.

☸மகரம் :-

கூட்டாளிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். செய்யும் பணிகளில் முழு ஈடுபாட்டுடன் செயல்படவும். வெளியூர் சம்பந்தமான வேலை வாய்ப்புகளில் சுபச் செய்திகள் கிடைக்கும். நிர்வாக துறையில் செய்யும் மாற்றங்களின் மூலம் ஆதரவு அதிகரிக்கும். தந்தையிடம் உரையாடும் போது கனிவுடன் உரையாடவும்.

அதிர்ஷ்ட திசை: கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்

உத்திராடம் : ஆதரவு அதிகரிக்கும்.
திருவோணம் : சுபச் செய்திகள் கிடைக்கும்.
அவிட்டம் : பேச்சில் கனிவு வேண்டும்.

☸கும்பம் :-

எதிர்பாலின மக்களின் ஆதரவு கிடைக்கும். மனதில் இருந்து வந்த கவலைகள் குறையும். மனதிற்கு பிடித்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தொழில் சார்ந்த முயற்சிகளில் கவனம் வேண்டும். செயல்பாடுகளில் இருந்து வந்த காலதாமதம் நீங்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு

அவிட்டம் : ஆதாயம் உண்டாகும்.
சதயம் : கவலைகள் குறையும்.
பூரட்டாதி : காலதாமதம் நீங்கும்.

☸மீனம் :-

பூர்வீக சொத்துகளால் தனலாபம் உண்டாகும். இழந்த பொருட்களை மீட்பதற்கான சூழல் அமையும். மனதில் புதுவிதமான எண்ணங்கள் தோன்றும். உயர் அதிகாரிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். கல்வி பயிலும் மாணவர்களுக்கு சாதகமான வாய்ப்புகளும், வழிகாட்டுதலும் மனதிருப்தியை அளிக்கும்.

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

பூரட்டாதி : தனலாபம் உண்டாகும்.
உத்திரட்டாதி : அனுகூலமான நாள்.
ரேவதி : திருப்தியான நாள்.

– Astro பகீரதன்

223total visits,1visits today