விஸ்வரூப செய்திகள் 2/5-2

0
18

♈🇮🇳 🌴 *9am-2-5-2017-tuesday-news* 🌴🇮🇳♈* *vishwarubam news*

♈🇮🇳 🌴 இயக்குனர் கவுதமன் மீது கொலை வெறி தாக்குதல் – புழல் சிறையில் பதற்றம்-விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று தனது ஆதரவாளர்களுடன் கிண்டியில் பூட்டு போட்டு போராட்டம் நடத்திய இயக்குனர் கவுதமன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் உள்ளார். காலை மாலை நேரத்தில் சிறை வளாகத்திற்குள் சிறிது நேரம் வலம் வரும் கௌதமனை இரண்டு பேர் தொடர்ந்து நோட்டம் விட்டு அறையில் அவர் தனியாக இருக்கும் போது கொலை செய்யும் நோக்கில் தாக்கியுள்ளனர்.இதனிடையே அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் உடனே கொலையாளிகளை பிடித்து தனி அறைக்கு அழைத்து சென்று கௌதமனை கொலை செய்ய வேண்டிய காரணம் குறித்து விசாரணை செய்து வருகின்றனர். இயக்குனர் கௌதமன் தாக்கப்பட்டதால் தற்போது இருந்த அறையை விட்டு மாற்றியும் உள்ளனர் போலீசார். மேலும் உணவும் அவருக்கு தேவையான அனைத்தும் அவரது அறைக்கே வழங்க சிறைத்துறை அதிகாரிகள் உத்தரவும் இட்டுள்ளனராம்

♈🇮🇳 🌴 ஓய்வில்லாமல் உழைக்கும் ஜப்பானின் மற்றொரு பக்கமாக, சில ஜப்பானியர்களின் மரணத்திற்கு காரணமே அவர்கள் அதிகமாக உழைப்பது தான் என்று தெரியவந்துள்ளது

♈🇮🇳 🌴 முதல்வர் பதக்கம் பெறும், விரல் ரேகை பிரிவு அதிகாரிகளுக்கு வழங்கப்படும் பரிசு தொகை உயர்த்தப்பட்டு உள்ளது. ஆண்டுதோறும், முதல்வர் பதக்கம் பெறும், விரல் ரேகை பிரிவு, எஸ்.ஐ., மற்றும் இன்ஸ்பெக்டர்களுக்கு, 6,000 ரூபாய் பரிசு தொகை வழங்கப்பட்டது. இத்தொகை தற்போது, 10 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. அதே போல், டி.எஸ்.பி., மற்றும் கூடுதல், டி.எஸ்.பி.,க்கு வழங்கப்படும், 10 ஆயிரம் ரூபாய் பரிசு தொகை, 15 ஆயிரமாக உயர்த்தப்பட்டு உள்ளது

♈🇮🇳 🌴 அண்ணா பல்கலை, இன்ஜி., கவுன்சிலிங்கில் பங்கேற்க, முதல் நாளான நேற்று, 4,738 மாணவர்கள் விண்ணப்பித்து உள்ளனர்

♈🇮🇳 🌴 உத்தரகண்ட் சட்டசபை தேர்தலில், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கும்படி, வெற்றி பெற்ற வேட்பாளர்கள் மற்றும் மாநில தேர்தல் கமிஷனுக்கு, அம்மாநில ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது

♈🇮🇳 🌴 அமெரிக்க மாகாணங்களான டெக்சாஸ், ஆர்கன்சாஸ், மிசிசிபி, மிசவுரி, ஆக்லஹோமா ஆகியவற்றில் நேற்று முன்தினம் கடுமையான சூறாவளி காற்று வீசியது. அப்போது பலத்த மழையும் கொட்டியது. மணிக்கு 110 முதல் 130 கிலோ மீட்டருக்கும் மேலான வேகத்தில் காற்று சுழன்று வீசியதால் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. ஆயிரக்கணக்கான மரங்களின் கிளைகள் முறிந்து வீடுகள் மற்றும் கார்களின் மீது விழுந்தன

♈🇮🇳 🌴 கனடா நாட்டில் நிகழ்ந்த சாலை விபத்தில் குழந்தை உள்பட 3 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

♈🇮🇳 🌴 வரும் ஜூலை மாதம் நடைபெறும் ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர், தமிழகத்தில் எடப்பாடி தலைமையிலான ஆட்சியை கலைக்க டெல்லி பாஜக மேலிடம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது

♈🇮🇳 🌴 சேலம்: கிச்சிப்பாளையம் அருகே இரும்பு வியாபாரி வீட்டில் 720 சவரன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. வீட்டின் ஜன்னலை உடைத்து நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

♈🇮🇳 🌴 ஜம்மு-காஷ்மீர் ஆளுநர் – ராஜ்நாத் சிங் இன்று சந்திப்பு

♈🇮🇳 🌴 அனந்த்நாக் மக்களவை தொகுதிக்கான இடைத்தேர்தல் ரத்து: தேர்தல் ஆணையம்

♈🇮🇳 🌴 லாரி மீது அரசு பேருந்து மோதி விபத்து: 10 பேர் காயம்

♈🇮🇳 🌴 விருதுநகர் அருகே மணல் சரிந்ததில் இளைஞர் உயிரிழப்பு

♈🇮🇳 🌴 ஆட்டு மந்தைக்குள் புகுந்த வேன்: ஆடு மேய்ப்பவர், 40 ஆடுகள் உயிரிழப்பு

♈🇮🇳 🌴 மதுரை: பூட்டியிருந்த வீட்டில் 80 சவரன் நகை கொள்ளை

♈🇮🇳 🌴 காஷ்மீர்: ஆனந்த்நாக் தொகுதி இடைத்தேர்தல் ரத்து

♈🇮🇳 🌴 இன்று தமிழக அமைச்சரவை கூட்டம் கூடுகிறது

♈🇮🇳 🌴 ஜம்முகாஷ்மீர் ஆளுநர் என்.என்.வோரா இன்று (02.05.17) உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங்கை சந்தித்து அங்கு நிலவும் சட்டம்-ஒழுங்கு நிலைமை பற்றி விவாதிக்க உள்ளார்

♈🇮🇳 🌴 கோடையின் உச்ச கட்டமான, அக்கினி நட்சத்திரம் என்ற, கத்திரி வெயில், மே, 4ல் துவங்குகிறது. மே,28 வரை, வறுத்தெடுக்கும் என்பதால், பகல் நேரத்தில், வெளியில் தலை காட்டால் இருப்பது நல்லது
♈🇮🇳 🌴 *vishwarubam* 🌴🇮🇳♈

411total visits.