விஸ்வரூப செய்திகள் 30/3-1

0
20

♈🇮🇳 🌴 *5am-30-3-2017news* 🌴🇮🇳♈🙏📡🙏📡 *vishwarubam news*

♈🇮🇳 🌴 ‘தமிழகத்தில், 10 ரூபாய் நாணயத்தை வாங்க மறுப்பவர்கள் மீது, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,” என, சென்னை ரிசர்வ் வங்கி, உதவி பொது மேலாளர் சரவணன் எச்சரித்தார்

♈🇮🇳 🌴 குடும்ப உறுப்பினர்களின் சம்மதத்தை பெறுவதற்காக, தான் காதலித்த பெண்ணை ஒரு வாலிபர் நான்கு முறை திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது-பயாஸ் என்ற வாலிபர் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர். அதேபோல் அங்கிதா என்ற பெண் இந்து மதத்தை சேர்ந்தவர். அவர்கள் இருவரும் 2 வருடங்களாக காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு மதத்தை சேர்ந்தவர்கள் என்பதால் இரு வீட்டினரும் இவர்களின் திருமணத்திற்கு சம்மதம் தெரிவிக்கவில்லை.மேலும், பயாஸ் இஸ்லாம் மதத்தை சேர்ந்தவர் என்பதால், அவர் நான்கு திருமணம் செய்து கொள்ள அவரின் மதம அவரை அனுமதிக்கிறது.எனவே, எப்போது வேண்டுமானாலும் அவர் தலாக் கூறிவிட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொள்வார் என அங்கிதா விட்டினர் கூறி வந்தனர்.தங்கள் காதலில் உறுதியாக இருந்த காதலர்கள் இருவரும், எப்படியாவது தங்கள் பெற்றோர்களின் சம்மதத்தை பெறும் முயற்சியில் ஈடுபட்டனர். இறுதியில் அவர்கள் ஒரு முடிவெடுத்தனர். அதாவது இந்து மதப்படி கோவிலில் ஒரு திருமணம். அதன்பின் நீதிமன்றத்தில் சட்டப்படி ஒரு திருமணம், இஸ்லாம் முறைப்படி ஒரு திருமணம், கோவாவில் நண்பர்களின் முன்னிலையில் ஒரு திருமணம் என பயாஸ், அங்கிதாவை நான்கு முறை திருமணம் செய்து கொண்டார். எனவே, இனி தலாக் கூற முடியாது. இனிமேலாவது எங்களை நம்புங்கள் என கூற, இரு குடும்பத்தினரும் மகிழ்ச்சியோடு சம்மதம் தெரிவித்து விட்டனர்

♈🇮🇳 🌴 இந்த ஆண்டு நாடு முழுவதும் மே மாதம் 7ம் தேதி நீட் தேர்வு நடக்க உள்ளது. மாணவர்கள் தங்களின் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்வதற்கான காலஅவகாசத்தை மார்ச் 31ம் தேதி வரை நீட்டிப்பதாக சிபிஎஸ்சி அறிவித்தது. அதனால் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களில் தேர்வு மையத்தை மாற்ற விரும்பும் மாணவர்கள், http://cbseneet.nic.in இணையதளத்தில் தங்களின் பதிவு எண், பாஸ்வேர்டு அளித்து நாளை நள்ளிரவு 12 மணிக்குள் தேர்வு மையத்தை மாற்றிக்கொள்ளலாம்

♈🇮🇳 🌴 கேரள அரசின் 2 துறைகளின் இணையதளங்களை பாகிஸ்தான் கும்பல் முடக்கியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கேரள அரசின் ‘பேக்ட்ரீஸ் அண்ட் பாய்லர்ஸ்’ மற்றும் கணக்கு தணிக்கை துறை இணையதளங்களை நேற்று முன்தினம் பாகிஸ்தான் கும்பல் முடக்கியது. இதுகுறித்து கேரள தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்

♈🇮🇳 🌴 திருச்சி: பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து: 20 பேர் படுகாயம்

♈🇮🇳 🌴 ஜி.எஸ்.டி. மசோதா நிறைவேற்றம்: பிரதமர் மோடி பாராட்டு

♈🇮🇳 🌴 ஆர்.கே.நகர் தொகுதியில், தினகரனுக்கு ஆதரவாக, நடிகை எமி ஜாக்சன் பிரசாரம் செய்ய உள்ளதாக, அக்கட்சியினர் தெரிவித்தனர்

♈🇮🇳 🌴 பெண் ஊழியர்களுக்கு, 26 வாரம், பேறு கால விடுப்பு அளிக்கும் புதிய சட்டத்திற்கு, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி ஒப்புதல் அளித்துள்ளார்

‛தலாக்’ கூறி கணவரால் வீட்டை விட்டு விரட்டி விடப்பட்ட முஸ்லிம் பெண் ‛தலாக்’ கலாச்சாரத்தை ஒழிக்க கோரி பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார்

முன்னாள் முதல்வர், ஓ.பி.எஸ்.,க்கு ஆதரவு திரட்ட, அவரது ஆதரவாளர்கள், ‘மொபைல் ஆப்’ வெளியிட்டு உள்ளனர்

♈🇮🇳 🌴 அயர்லாந்து நாட்டில் கோக், பெப்சி ஆலையில் டின்களில் குளிர்பானம் நிரப்பும் பணி நடைபெற்றுள்ளது. அப்போது டின்களில் மனித கழிவுகள் இருந்ததை ஊழியர்கள் பார்த்துள்ளனர்.இதில் அதிர்ச்சியடைந்த ஊழியர்கள் உயர் அதிகாரிகளுக்கு இதுகுறித்து தகவல் தெரிவித்துள்ளனர், அதன்பின்னர் ஆலை மூடப்பட்டது. காவல்துறைக்கு புகார் தெரிவிகப்பட்டு இதுகுறித்து விசாரணை நடைப்பெற்று வருகிறது

♈🇮🇳 🌴 பாஜக தேசிய இளைஞர் அணி செயற்குழு உறுப்பினராக, நடிகை காயத்ரி ரகுராம் நியமிக்கப்பட்டுள்ளார்

♈🇮🇳 🌴 இங்கிலாந்தில் முட்டை சாப்பிட்ட பெண் ஒருவருக்கு முட்டையிலிருந்து வைரக்கல் கிடைத்துள்ளது சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது

🌴 ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகுவதற்கான தனது கடித்தத்தை பிரிட்டன் ஐரோப்பிய ஒன்றியத்திடம் முறையாக கொடுத்ததன் மூலம் இரண்டுக்கும் இடையிலான் 44 ஆண்டு கால உறவு முடிவுக்கு வருகிறது.பிரிட்டன் விலகல் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படவேண்டும்.இந்த இரண்டு ஆண்டுகளில் என்னவெல்லாம் நடக்கும்? எதுகுறித்தெல்லாம் இருதரப்பும் பேசும்? 44 ஆண்டுகால உறவை இரண்டு ஆண்டுகால அவகாசத்திற்குள் முடிக்க முடியுமா?

🌴 இந்தோனீஷியாவில் காணாமல் போன ஒருவரை, உயிரிழந்த நிலையில் மலைப்பாம்பு ஒன்றின் வயிற்றுக்குள் கண்டுபிடித்துள்ளாக உள்ளூர் போலிஸார் தெரிவித்துள்ளனர்

🌴 இலங்கையில் 2010ம் ஆண்டில் காணாமல் போன கார்ட்டூனிஸ்ட் , பிரகீத் ஏக்னலிகொட விவகாரத்தில், நீதி கேட்டு போராடிக்கொண்டிருக்கும் அவரது மனைவி சந்தியா ஏக்னலிகொடவுக்கு, அமெரிக்க வெளிவிவகாரத்துறையால் “2017ம் ஆண்டுக்கான, துணிச்சலுடன் செயல்படும் சர்வதேச மகளிர் விருது“ வழங்கப்பட்டுள்ளது

🌴 பிரபல கிரிக்கெட் வீரரும், இந்திய அணியின் முன்னாள் கேப்டனுமான மகேந்திர சிங் தோனி, ஆதார் அட்டைக்காக புகைப்படம் எடுத்த புகைப்படங்களை வெளியிட்ட ஆதார் சேவை மையம் பத்து ஆண்டுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளது

🌴 இத்தாலியை சேர்ந்த பாதணி தயாரிப்பவர் ஒருவர் உலகின் முதலாவது 24 கரட் தங்கத்தலான செருப்பை உருவாக்கி தயாரித்துள்ளார். துரின் நகரைச் சேர்ந்த அந்தோனியோ வியட்றி என்ற மேற்படி நபர் முப்பரிமாண ஊடுகாட்டும் கருவியின் உதவியுடன் அளவீடுகளை மேற்கொண்டு 230 கிராம் தங்கத்தைப் பயன்படுத்தி இந்த செருப்பை உருவாக்கியுள்ளார். இதன் பெறுமதி 21,000 ஸ்ரேலிங் பவுணாகும். இதனை எண்ணெய் வளம் மிக்க செல்வந்த பிராந்தியமான வளைகுடா பிராந்திய சந்தையில் விற்பனை செய்ய அவர் எதிர்பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்
🌴 ‘டெப்பி’ புயல் காற்றழுத்த தாழ்வுப்பகுதியாக மாறினாலும், அதன் தாக்கம் தீவிர மழையாக தொடரும் என்று அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. . 6 மாதங்களில் பெய்ய வேண்டிய மழை இரண்டு நாட்களிலேயே பெய்து விட்டது. டெப்பி புயலால் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீடுகள் இதில் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழை காரணமாக ஆறுகளில் அளவுக்கு அதிகமாக தண்ணீர் ஓடிக்கொண்டிருக்கிறது. இதனால் ஆறுகளில் பொதுமக்கள் யாரும் குளிக்கவோ வேடிக்கை பார்க்கவோ கூடாது என அந்நாட்டு அரசு கேட்டுக்கொண்டுள்ளது

🌴 பில்லி, சூனியம் வைக்கும் சூனியக்காரர்கள் என குற்றம்சாட்டி, ஐ.எஸ். தீவிரவாதிகள் இருவரின் தலைகளை துண்டித்துக் கொன்ற சம்பவம் எகிப்தில் இடம்பெற்றுள்ளது

♈🇮🇳 🌴 மெரினா 2.0 என்ற ஹேஷ்டேக் மூலமாக மாணவர்கள் ஒன்றிணைந்து போராட்டம் நடத்தியதாக உளவுத்துறைக்கு தகவல் கிடைத்துள்ளது. ஆனால் ஓ.பி.எஸ் அரசை போல எடப்பாடி பழனிச்சாமி அரசு பொறுமைகாக்காது என்றே சிக்னல்கள் வெளியாகிறது. மெரினாவை போலீசார் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளனர். கோவை வ.உ.சி பூங்கா, மதுரை தமுக்கம் மைதானத்தில் போலீசார் குவிக்கப்பட்டு போராட்டத்தில் மாணவர்கள் குதித்து விடாமல் பார்க்கிறார்கள். எந்த நேரத்தில், எப்போது, எங்கிருந்து மீண்டும் ஒரு போராட்டம் வெடிக்கும் என்பது தெரியாமல் நிற்கிறது காவல்துறை. உளவுத்துறை, இதுகுறித்து தீவிர கண்காணிப்புடன் உள்ளது. ஆட்சியை கலைக்க இதுபோன்ற போராட்டங்கள் காரணமாகிவிடகூடாது என்பதில் எடப்பாடி அரசு உறுதியாக உள்ளது. எனவே மாணவர் போராட்டத்தை முதலிலேயே முறியடிக்க முழு வீச்சில் தயாராகி வருகிறது. சோஷியல் மீடியாக்களில் போராட்டம் குறித்து தகவல் பதிந்தாலே, அதை வதந்தி என கூறி நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாம்

♈🇮🇳 🌴 தேமுதிக பொதுச் செயலாளராக விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விரைவில் தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன

♈🇮🇳 🌴 பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகம் உள்பட தென் மாநிலங்களில் இன்று முதல் லாரி ஸ்டிரைக் தொடங்குகிறது

  • ♈🇮🇳 🌴 தருமபுரி மாவட்ட ஆட்சியர் அம்மாவட்டத்தின் வளர்ச்சிக்கு தடையாக இருப்பதால் அவரை உடனடியாக இடமாற்றம் செய்து நேர்மையான அதிகாரி ஒருவரை புதிய ஆட்சியராக அரசு நியமிக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்
    ♈🇮🇳🌴*vishwarubam* ♈🇮🇳🌴

660total visits.