ஆழ்ந்த தூக்கத்திற்கு என்ன செய்வது?

0
69

தூக்கம்-பல பிரச்சனைகளுக்கு நல்ல மருந்து. ஆனால் தூக்கத்திற்கு மருந்து தேடும் காலம் இது.

நம் உடம்பில் சுரக்கும் “மெலடோனின்” ஹார்மோனே நாம் தூங்க காரணம் . காலம், நேரம், பகல், இரவு, தேதி, வருடம் என காலம் சம்பந்தப்பட்ட அனைத்தும் மெலடோனின் சுரப்பை சார்ந்தது. ஒரு கடிகாரம் போல்.

தூக்கத்திற்கு உதவும் குறிப்புகள்:
மெலடோனின் சுரப்பை குறைய செய்வது நீல ஒளி.. நம் அன்றாடம் பார்க்கும் டிவி, கம்ப்யூட்டர், மொபைல் திரையில் அதிகம். இவற்றை தவிர்க்க வேண்டும்.
அதற்கு பதில் சிவப்பு நிற ஜீரோ வாட் விளக்கு தூங்க உதவும்.

மெலடோனின் மிகுந்த உணவுகள்: அரிசி, ஓட்ஸ், கோட்டை வகைகள், வாழை, இஞ்சி, மாதுளை, பால், பால் சார்ந்த பொருட்கள், உருளை, தேன், பாதாம்.

பகலில் இதை உண்ணும் போது தூக்கம் வருவதில்லையே என குழம்ப வேண்டாம். மெலடோனின் கடிகாரமாக செயல்படுவதால், இரவு உறங்கும் நேரம் என தகவல் மூளைக்கு செல்லும். (Neurotransmitter).

நிம்மதியாக தூங்க சில குறிப்புகள்:
தினமும் ஒரே நேரத்தில் தூங்கும் வழக்கம், பகலில் தூங்காமல், அதிக சத்தம், அதிக வெளிச்சம் இல்லாமல், சரியான அளவில் தலையனை, படுக்கை, பகலில் சில உடற்பயிற்சிகள்– இவையெல்லாம் நிம்மதியான தூக்கத்திற்கு உதவும்.

படுக்கை அறையை, (மெத்தை, கட்டில்,) தூங்கும் நேரத்தில் மட்டும் உபயோகிப்பது நல்லது. குழந்தைகளிடம் இதைக் காணலாம். “அவர்கள் தினமும் எங்கு, எப்படி தூங்குவார்களோ, அப்படி போட்டால் மட்டுமே தூங்க தொடங்குவர்.”

வாழைப்பழம் சந்தோஷமாக இருக்க உதவும்.. அதுவே தூக்கத்திற்கும் மருந்தாகும்.. குழப்பிக் கொள்ள வேண்டாம். வாழையில் இருக்கும் வேதிப்பொருள், நம்மை அமைதி படுத்தும். பகல் அமைதி மன மகிழ்ச்சி தரும். இரவு அமைதி நிம்மதியான தூக்கத்திற்கு உதவும்.

சிறு குறிப்பு: கண் பார்வை அற்றவர்களுக்கு நிறம் தெரியாததால்,பலருக்கு மெலடோனின் சுரக்கும் மருந்து பரிந்துரைப்பர்.
பகல் ஷிஃப்ட்/ இரவு ஷிஃப்ட் /ஜெட்லாக்–இவற்றிற்கும் மெலடோனின் செயற்கையாக கொடுக்கப்படும்.

குட் நைட்.. ஸ்லீப் டைட்..

-ரம்யா வர்ஷினி

 

878total visits,2visits today