சார்லி சாப்ளின் என்னும் மகாகலைஞனுக்கு நிகரானவர் தான் நமது வடிவேலு என்றால் அது மிகையாய் இருக்காது. பலரை நடுங்க வைத்துக் கொண்டிருந்த ஹிட்லரை தன் "கிரேட் டிக்டேட்டர்" திரைப்படத்தின் மூலம் எள்ளி நகையாடினார் சாப்ளின். அன்றைய கால கட்ட அரசியலை புரிந்துகொள்கிற வல்லமை கொண்டவராய் இருந்தார். சரியான சித்தாந்த கொள்கை பிடிப்போடு நகர்ந்ததால் தான் சாப்ளினால் அது சாத்தியமானது. தேர்தல் அரசியல் ஆதரவாளராக மட்டுமில்லாமல் தீவிர அரசியல் புரிதலோடு மட்டும் வடிவேல் இருந்தால் மத்திய அரசை வரும் படங்களில் அரசியலாய் பின்னி பெடலெடுக்கலாம். தமிழகத்தில் அதற்கான சூழல் உள்ளது. ஒரு நாட்டின் பிரதமர் பதவியேற்பை விட இணையத்தில் ஒரு நடிகரின் கதாபாத்திரத்தின் பங்களிப்பை டிரெண்டிங் செய்ய முடிந்தது என்றால் அது வடிவேல் என்னும் நகைச்சுவை கலைஞனால் மட்டுமே முடிந்திருக்கிறது தமிழ் சமூகமும் பாசிசத்திற்கு எதிரான உலக அரசியல் களமும் கொண்டாடும் கலைஞனாக ஆண்டுகள் கடந்தும் இருப்பார். ஆனால் துரதிஷ்டம் அந்த மனிதனுக்கு எந்த அளவு அரசியல் புரிதலோடு இருக்கிறார் என்பது நாம் அரைகுறையாய் அறிந்ததே.
சினிமா