சினிமா

மீண்டும் ஷங்கர் டைரக்‌ஷனில் விஜய்

மீண்டும் இணைய உள்ள விஜய் ஷங்கர் கூட்டணி மீண்டும் உருவாக இருப்பதாகவும் இதனால் கமல் ஹாசன் அதிர்ச்சி அடைந்துள்ளாராம். தமிழ் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கர் கமல் ஹாசனை வைத்து இந்தியன் 2 படத்தை இயக்க தொடங்கினார். ஆனால் படம் தொடங்கிய வேகத்திலேயே பல்வேறு பிரச்சனைகளால் தடைபட்டு கிடக்கிறது. இதனால் ஷங்கரும் வெறுப்பில் இருந்து வருகிறார். கமலும் அரசியலில் இறங்கி பாராளுமன்ற தேர்தலையும், சட்டமன்ற தேர்தலையும் எதிர் கொண்டார். தற்போது பிக்பாஸ்-3 நடத்த தனியார் தொலைக்காட்சியில் ஒப்பந்தமாகியுள்ளார். இதனால் ஷங்கர் இந்த படத்தை தற்போதைக்கு அப்படியே விட்டு விட்டு அடுத்த படத்தில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளார். அந்த படம் இந்தியன் 2 தான் எனவும் கூறப்படுகிறது. மேலும் இதற்காக விஜய்யிடம் பேச்சு வார்த்தைகள் நடந்து வருவதாகவும் சன் பிக்கசர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க முன் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு வேலை விஜய் ஓகே சொன்னால் இந்த படம் விஜயின் 65-வது படமாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கலாம். இந்த தகவலால் விஜய் ரசிகர்கள் உற்சாகமடைந்திருந்தாலும் கமல் தரப்பு அதிர்ச்சி அடைந்திருப்பதாக கூறப்படுகிறது.