உ.பி.யில் 80 லோக்சபா தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி வெற்றி பெற்றிருந்தாலும், மின்னணு ஓட்டு இயந்திரத்தில் நம்பகத்தன்மை மீதான எனது கருத்தை மாற்றிக்கொள்ள மாட்டேன் என அக்கட்சியின் லோக்சபா எம்.பி.யான அகிலேஷ் யாதவ் பேசினார்.
பாராளுமன்றத்தில் ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு உ.பி.யின் பிரதான எதிர்கட்சியான சமாஜ்வாதி கட்சி தலைவரும், கணோஜ் லோக்சபா தொகுதி எம்.பி.யான அகிலேஷ் பேசியது,
ஓட்டு இயந்திரத்தின் மீதான நம்பகத்தன்மை குறித்து நேற்றும் பேசினேன், இன்றும் பேசுகிறேன். நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் உ.பி.யில் மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி அனைத்து தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தாலும் ஓட்டு இயந்திரத்தின் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. இதில் எனது கருத்தை மாற்றிக்கொள்ளமாட்டேன். ஓட்டு இயந்திரத்தின் பயன்பாட்டை நிறுத்தும் வரை இது ஒருபோதும் தீர்க்கப்படாது என்றார்.