செய்திகள்

இன்று முதல் கால் இறுதி போட்டிகள்

யூரோ கோப்பை கால்பந்து தொடரின் கால் இறுதி ஆட்டங்கள் இன்று தொடங்குகின்றன.

உலகக் கோப்பை கால்பந்து தொடருக்கு அடுத்தப்படியாக, யூரோ கோப்பை கால்பந்து தொடர், கால்பந்து ரசிகர்கள் மத்தியில் மிகுந்த வரவேற்புடையதாகும்.

ஜெர்மனியில் நடந்து வரும் இந்த தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்திய நேரப்படி இன்று இரவு 9.30 மணிக்கு ஸட்கர்ட்டில் நடைபெறும் போட்டியில் ஜெர்மனி மற்றும் ஸ்பெயின் அணிகள் மோதுகின்றன.

இத்தொடரில் ஜெர்மனி, இத்தாலி, பிரான்ஸ், போர்ச்சுகல் உள்ளிட்ட 24 அணிகள் பங்கேற்றுள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் 4 அணிகள் என 6 பிரிவுகளாகப் பிரித்து லீக் போட்டி நடைப்பெற்றது. இத்தொடரில் சுமார் 3 ஆயிரம் கோடி ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்பட இருக்கிறது..