செய்திகள்

BSP மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக்கொலை

சென்னை பெரம்பூர் பகுதியில் பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் ஆம்ஸ்ட்ராங் இன்று இரவு 7.30 மணிக்கு பெரம்பூரில் அவரது வீட்டின் வெளியே இருந்த போது அடையாளம் தெரியாத 6 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்துள்ளது. இதன்படி, பெரம்பூர் சடையப்பன் தெருவில் உள்ள அவரது வீடு அருகே வைத்து அவரை கழுத்து தலை உள்ளிட்ட பகுதிகளில் 6 பேர் கொண்ட கும்பல் கடுமையாக வெட்டி உள்ளனர்.

இதனையடுத்து, காயமடைந்த ஆம்ஸ்ட்ராங் சிகிச்சைக்காக ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். மேலும், இந்த கொலைச் சம்பவம் குறித்து செம்பியம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், அவருடன் இருந்த இரண்டு பேருக்கும் வெட்டு விழுந்ததுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.